வீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது? ஏன் தெரியுமா?

விநாயகர் சிலையை வீட்டில் வைப்பதற்கு முன் இதே போல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. இந்த மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், உங்கள் வீட்டிற்கு துரதிஷ்டம் வந்து சேரும்.

உங்கள் வீட்டில் விநாயகர் சிலைகளை பல வழிகளில் வைக்கலாம். ஒரு புகழ் பெற்ற வழி – வீட்டின் முக்கிய நுழைவாயிலுக்கு எதிராக விநாயகர் சிலையை வைப்பது. இந்த திருஷ்டி விநாயகர் உங்கள் வீட்டிற்குள் நுழையும் அனைத்து தீய சக்திகளையும் தடுத்து, வளத்தை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. விநாயகரை இப்படி வைத்தால் அவர் உங்கள் வீட்டை பாதுகாப்பார்.

விநாயகரை முகப்பு வாயிலில் வைத்தால் ஜோடியாக தான் வைக்க வேண்டும். அதில் ஒன்று நுழைவாயிலை பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். மற்றொன்று அதற்கு எதிர்புறமாக பார்த்திருக்க வேண்டும். ஏன் என்று தெரியுமா? ஏதேனும் அறையில்  விநாயகர் பின்புறத்தை பார்த்தபடி வைத்தால், வறுமை வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. அதனால் அதனை ஈடு செய்யும்  விதமாக மற்றொரு சிலையை எதிர் திசையில் வைக்க வேண்டும்.



வலது பக்க தும்பிக்கை கொண்ட விநாயகர் வீட்டிற்கு விநாயகர் சிலை வாங்க வேண்டுமானால், நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று உள்ளது. வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகரை தவிர்க்க  வேண்டும்.

வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகர் என்றால் பூஜையின் போது விசேஷ கவனமும் பராமரிப்பும் செலுத்த வேண்டும். இவைகளை வீட்டில் செய்வது கடினம். அதனால் தான் இந்த சிலைகளை கோவில்களில் மட்டுமே பார்க்க முடியும். அதனால் வீட்டில் வைக்க வேண்டும் என்றால் இடது பக்கமாக அல்லது நேராக உள்ள அல்லது காற்றில் இருக்கும்  தும்பிக்கையை கொண்ட விநாயகரை வையுங்கள்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சச்சின் டெண்டுல்கரின் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என்னென்ன தெரியுமா?

கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுகல்கரின் அபார திறமை உலகறிந்ததே. ஆனால், சச்சின் டெண்டுல்கர் தன்னை ஒரு தொழில்முனைவராகவும் ஸ்திரமாக நிறுவிக்…

2 hours ago

உண்மையை உளறிய விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி…

2 hours ago

ஒரு இட்லி, சாப்பிட்டால் சாகா வரமாம் ..அப்படி என்ன இட்லி?சென்னையில் வைரலாகும் புதிய வகை இட்லி

சூடா, புசு புசு என்று நாலு இட்லி, சட்னி மற்றும் சாம்பார் ஒவ்வொரு வீட்டிலும் காலையில் இடம்பெறும் தரமான டிபன்…

5 hours ago

30 வயதைத் தாண்டிய பெண்கள் மாரடைப்பைத் தவிர்க்க செய்ய வேண்டியவை!

பெண்கள் இதய நோய்க்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் 30 வயதுக்குப் பிறகு அதிகரிக்கிறது. ஏனெனில் அப்போதுதான் பெண்கள் உடல் மற்றும் ஹார்மோன்…

5 hours ago

ஜூலை மாத பலன்கள் (தனுசு, மகரம்)

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில்…

5 hours ago

எஸ் கே 24 படத்திற்கு ஹீரோயினும், டைட்டிலும் தயார் !.. ஹீரோயின் யார்?

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தெள்ளத் தெளிவாக செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே இமான் மேட்டரில் அவர் பெயர் டேமேஜ்…

5 hours ago