Categories: lifestylesNews

விளம்பரமே செய்யாமல் ரூ.4,000 கோடி சம்பாதித்த டாடா-வின் ZUDIO..

பொதுவாக ஒரு நிறுவனத்தை தொடங்கும் போது , அதனை மக்களிடம் சென்று சேர்க்க விளம்பரங்கள் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த விளம்பரங்களுக்கு தான் பெரிய அளவில் செலவிட நேரிடும். ஆனால் விளம்பரமே இல்லாமல் 4,000 கோடி ரூபாய் அளவு வருவாய் ஈட்டியுள்ளது டாடாவின் ZUDIO நிறுவனம்.



டாடா-வின் ZUDIO நிறுவனம்: இந்தியாவில் டாடா குழுமம் கால்பதிக்காத துறையே இல்லை என்ற அளவுக்கு எல்லா துறைகளிலும் நுழைந்துள்ளது. அப்படி ஆடைகளுக்கு என டாடா குழுமம் ஏற்கனவே வெஸ்ட்சைடு என்ற பெயரில் ஸ்டோர்களை வைத்துள்ளது. ப்ரீமியம் தரம் கொண்ட ஆடைகள் மட்டுமே இங்கே விற்பனை செய்யப்படுகின்றன என்பதால் விலை அதிகமான ஆடைகள் தான் இங்கு கிடைக்கும்.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஒரு சட்டையை 3 ஆயிரம் ரூபாய் கொடுத்த வாங்க எத்தனை பேர் முன் வருவர்?. எனவே குறைந்த விலையில் ஆடைகளை விற்பனை செய்வதற்காக டாடா குழுமம் கொண்டு வந்த நிறுவனம் தான் ZUDIO.

95% மக்களை டார்கெட் செய்யும் உத்தி: இந்திய மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினர் தான் அதிக செலவு செய்து ஆடை வாங்குபவர்கள். மீதமுள்ள 95 விழுக்காடு மக்களுக்கு ஆடைகளை விற்பனை செய்யும் நோக்கத்தில் 2016ஆம் ஆண்டு டாடா குழுமம் ZUDIOஐ தொடங்கியது கிட்டத்தட்ட 7 வருடங்களாகிறது.

ஆனால் இதுவரை ZUDIOவிற்கு என விளம்பரம் எதையும் டாடா குழுமம் செய்ததில்லை. இருப்பினும் அது பெரியளவில் வளர்ச்சி அடைந்து தான் வருகிறது.

சிறிய நகரங்களில் கவனம்: சரியான டார்கெட் ஆடியன்ஸை முடிவு செய்து அவர்களை நோக்கி விற்பனை செய்வது தான் ZUDIOவின் வெற்றி மந்திரம். ஏனெனில் ZUDIO ஸ்டோர்கள் பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன.

அது மட்டுமில்லாமல் சிட்டியில் பிரைம் லொகேஷனில் கடை வைக்க விரும்புவதில்லை. இதனால் கடை வாடகை, முன் பணம் ஆகியவற்றை பெருமளவில் சேமிக்க முடிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் Franchisee Owned, Company Operated என்ற கொள்கையில் தான் இந்த கடைகள் நிறுவப்படுகின்றன.
தற்போது இந்தியா முழுவதும் உள்ள ZUDIO கடைகளின் எண்ணிக்கை 411. இதன் மூலம் டாடா குழுமத்திற்கு கிடைக்கும் வருவாய் 4,000 கோடி ரூபாய். 7 ஆண்டுகளிலேயே விளம்பரம் ஏதும் செய்யாமல் இந்த நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது. இரண்டம் நிலை நிகரங்கள் மற்றும் GEN Z தலைமுறையினர் தான் இவர்களின் டார்கெட்.

இந்த கடையில் 1,000க்கு கீழ் உள்ள ஆடைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. ஆடைகள் மட்டுமின்றி காலணிகளும் கிடைக்கின்றன. அது தவிர டாடா குழுமத்தின் நம்பகத்தன்மையும் உடன் இருக்கிறது என்பதால் மக்கள் மத்தியில் இந்த கடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கருங்காலி மாலை பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும்

தொழிலில் வெற்றியை தந்து, அனைத்து கனவுகளையும் நனவாக்கும் தன்மை கருங்காலி மாலைக்கு உண்டு. செவ்வாய் கிரகத்தின் அம்சம் கொண்டது என்பதால்…

31 mins ago

மகாபாரதக் கதைகள்/பாலினம் மாறுபாடு குறித்த சில சுவாரஸ்ய கதைகள்!!!

பலருக்கும் தெரியாத புராணத்தில் உள்ள பாலினம் மாறுபாடு குறித்த சில சுவாரஸ்ய கதைகள்!!!பாலியல் வன்கொடுமைக்காக இந்தியா அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது;…

32 mins ago

மாவட்ட கோவிகள்:உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி

திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்– பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் அவதரித்தார். தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள…

36 mins ago

நாள் உங்கள் நாள் (07.07.24) ஞாயிற்றுக்கிழமை

கௌரி பிக் பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூலை 07.07.24 ஞாயிற்றுக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 23 …

37 mins ago

இன்றைய ராசி பலன் (07.07.24)

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை…

39 mins ago

நீயில்லாமல் வாழ்வது லேசா!-16 (நிறைவு)

16 ‘‘அட.. ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்? வாருங்கள் சகோதரி..” பிரெட்ரிக்கின் ‘சிஸ்டர்’ மைக் வழியாக அந்த அரங்கம் முழுவதும் அதிர்ந்தது.…

12 hours ago