Categories: lifestyles

மோசடி அழைப்புகள் வருகிறதா.. ரொம்ப ஆபத்தாச்சே! இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!

ஒரு முறையாவது மோசடி அழைப்புகளை பெறாதவர்கள் இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மோசடி அழைப்புகள் வருகின்றன மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த மோசடியின் விளைவுகளையும் சேர்த்து எதிர்கொண்டுள்ளனர். மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவதை நம்மால் நிறுத்த முடியாவிட்டாலும், இந்த மோசடி அழைப்புகளால் ஏமாறாமல் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். மோசடி அழைப்புகளில் இருந்து எப்படி உங்களை பாதுகாத்துக் கொள்வது என்ற விவரங்களைப் பார்ப்போம்.

நம்பரை சரி பார்க்கவும்: தற்பொழுது டயலர்களை சரி பார்க்க உதவும், பல ஆப்கள் உள்ளன. உங்கள் மொபைலில் ரிங்டோன் அடித்தவுடன் உங்களை அழைக்கும் நபரின் நம்பரையும், அடையாளத்தையும் காண்பிக்கும் ஆப்களை பதிவிறக்கலாம். மொபைலை எடுத்து அவர்களிடம் பேசுவதற்கு முன்பு, அந்த நம்பர் உங்களுக்கு சந்தேகத்திற்குரியதாக தோன்றினால், அழைப்பை துண்டித்து உடனடியாக நம்பரை பிளாக் செய்து விடலாம்.



ஆனால் ஆப்களை பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு கவனமாக இருங்கள். ஏனெனில் போலியான ஆப்களும் நிறைய இணையதளத்தில் உள்ளன. இதனால் பயன்படுத்துபவர்களின் ரிவ்யூக்களைப் படித்து விட்டு அதன் பிறகு அழைப்பவரின் விவரங்களை சரி பார்க்கும் தகுந்த ஆப்களை டவுன்லோட் செய்யவும். அவசரப்பட வேண்டாம்: மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் உங்களை அவசரப்படுத்தி, யோசிக்காமல் செயல்பட வைப்பார்கள். உதாரணமாக, உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுவிட்டது, உங்கள் மீது வழக்கு இருக்கிறது போன்ற தகவல்களைத் தெரிவித்து உங்களிடம் இருந்து பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் பதட்டப்படாமல் நிதானமாக இருங்கள்.

உங்கள் தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம்: உண்மையான நிறுவனங்கள் (Banks, Government Agencies) போல் நடித்து உங்களிடம் இருந்து பெயர், வங்கி கணக்கு எண், பாஸ்வேர்ட் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கேட்பார்கள். எனவே, தொலைபேசி வழியாக யாராவது உங்களிடம் இந்த தகவல்களைக் கேட்டால், கொடுக்க வேண்டாம்.



மோசடி அழைப்புகளை ரிப்போர்ட் அல்லது பிளாக் செய்யவும்: நம்மில் பலரும் ஒரு முறையாவது மோசடி கால்களைப் பெற்றிருப்போம். ஆனால் சிலரே அவற்றை பிளாக் மற்றும் ரிப்போர்ட் செய்திருப்போம். நீங்கள் ஒரு மோசடி அழைப்பை பெறும் போது உடனடியாக அவற்றை பிளாக் செய்யுங்கள். இதனால் திரும்பவும் உங்களுக்கு இதுபோன்ற நபர்களிடமிருந்து அழைப்புகள் வராமல் இருக்கும்.

உங்களைப் பயிற்றுவித்தல்: மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற பல்வேறு வழிகளை கண்டுபிடிக்கின்றனர். எனவே நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். புதிய மோசடி யுக்திகளைப் பற்றி நீங்களும் தெரிந்து கொண்டால்தான், அதே அணுகுமுறையை உங்களிடம் அவர்கள் பயன்படுத்தும் போது அதிலிருந்து தப்பிக்க முடியும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சுந்தரி சீரியல் திடீரென மாற்றப்படும் ஒளிபரப்பு நேரம்..

 தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. காலை முதல்…

26 mins ago

மருமகள் பற்றி தெரியாமல் மொத்தத்தையும் உளறிய கோமதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி ஆசைப்பட்ட மாதிரி டியூஷன் எடுப்பதற்கு மீனா ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி ஹோம்…

27 mins ago

சின்ன வெங்காய காரக்குழம்பு செய்து அசத்துங்க !

சமையல் செய்யும் போது அனைவரது மனதிலும் எழும் முதல் கேள்வியே இன்னைக்கு என்ன சமையல் என்பதே. அதிலும் அதிக அளவில்…

29 mins ago

‘கருப்பன்’ விமர்சனம்

கிராமத்து பின்னணி கொண்ட படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, பல ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடித்திருக்கும் படம்…

33 mins ago

சரணடைந்தேன் சகியே-28

28   “வெல்கம் அகிரோட்டோ..” வலது கையால் அகிரோட்டோவின் கையை குலுக்கியபடி இருந்த பாலகுமரன் இடது கையால் சஸாக்கியின் கை…

4 hours ago

மணி பிளான்ட் நடும்போது இந்த ரெண்டுல ஒன்னு போட்டு நடுங்க..!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மணி பிளான்ட் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் பணம் பெருகுவது மட்டுமின்றி,…

4 hours ago