முல்லை செடி வளர்ப்பு..!

இன்றைய சூழலில் நாம் அனைவரின் வீட்டிலேயும் பலவகையான காய், கனி மற்றும் பூச்செடிகளை மிக மிக விரும்பி வளர்த்து வருகின்றோம். அதிலும் குறிப்பாக பெண்கள் பொதுவாக தங்களது வீடுகளில் மிக மிக அதிகம் விரும்பி வளர்க்கும் செடிகள் என்றால் அது பூச்செடிகள் தான். அப்படி அவர்கள் மிகவும் விரும்பி வளர்க்கும் பலவகையான பூச்செடிகளில் ஒன்று தான் இந்த முல்லை பூச்செடிகளும்.

பொதுவாக இந்த முல்லை பூச்செடிகளில் சில காலநிலைகளில் அதிக அளவு பூக்கள் பூத்து குலுங்கும். ஆனால் சில காலங்களில் அவ்வளவாக பூக்களே பூக்காது. ஏன் ஒரு சில முல்லை பூச்செடிகள் நீண்ட நாட்களுக்கு பூக்களே பூக்காமல் நீளமாக வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான முறையில் நமது வீடுகளில் உள்ள முல்லை பூச்செடிகளை அதிக பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க.. 



நாம் அனைவருக்குமே பூச்செடிகள் என்றால் மிக மிக அதிக அளவு பிடிக்கும். அதனால் நாம் அனைவருமே நமது வீடுகளில் பலவகையான பூச்செடிகளை மிகவும் விரும்பி வளர்ப்போம்.

அப்படி நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் பலவகையான பூச்செடிகளில் ஒன்றான முல்லை பூச்செடி அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. பீர்கங்காய் தோல் – 1 கைப்பிடி அளவு 

  2. பப்பாளி தோல் – 1 கைப்பிடி அளவு 

  3. வாழைப்பழத்தோல் – 2 

  4. வெங்காய தோல் – 1 கைப்பிடி அளவு 

  5. பூண்டு தோல் – 1 கைப்பிடி அளவு 

  6. பழைய சோறு  – 1 கப் 

  7. அரிசி கழுவிய தண்ணீர் – 2 கப்



    செய்முறை:

    முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், 1 கப் பழைய சோறு, 1 கைப்பிடி அளவு பூண்டு தோல் மற்றும் 1 கைப்பிடி அளவு வெங்காய தோல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

    பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு பீர்கங்காய் தோல், 1 கைப்பிடி அளவு பப்பாளி தோல் மற்றும் 2 வாழைப்பழத்தோல் ஆகியவற்றை சேர்த்து நாகு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

    பின்னர் இதனை நாம் முன்னரே தயாரித்து வைத்துள்ள கலவையுடன் சேர்த்து ஒரு வாரத்திற்கு நன்கு ஊறவிடுங்கள். பின்னர் இதில் உள்ள தண்ணீரை மட்டும் வடிகட்டி அதனுடன் இரண்டு அல்லது மூன்று மடங்கு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து உங்களின் முல்லை பூச்செடிக்கு ஊற்றுங்கள்.

    இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை ஊற்றி வருவதன் மூலம் உங்களின் முல்லை பூச்செடிகள் அதிக பூக்கள் பூக்க தொடங்குவதை நீங்களே காணலாம்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சரணடைந்தேன் சகியே – 24

24         “என் ஹஸ்பென்ட், சாரோட கம்பெனியில் மேனேஜர்.. நான் ஒரு யோகா டீச்சர்.. யோகா…

38 mins ago

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மனோஜ்…

40 mins ago

ஜூலை மாத பலன்கள் (துலாம், விருச்சிகம்)

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி…

42 mins ago

கொடுத்த வாக்கை காப்பாற்றும் லாரன்ஸ் மாஸ்டர்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியானது. அதையடுத்து இப்போது அவர் அதிகாரம், துர்கா ஆகிய படங்களில் நடித்து…

43 mins ago

தானுபே குழுமம் ரிஸ்வான் சாஜனின் வெற்றிக் கதை!

கட்டிடங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தானுபே குழுமம் (Danube Group) பற்றி நம்மில் பலருக்கும் அவ்வளவாகத் தெரியாது. 1993-ஆம்…

3 hours ago

காணாமல் போன பாக்யாவின் சந்தோஷம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் ஈஸ்வரி…

3 hours ago