Categories: CinemaEntertainment

மீண்டும் மிரட்ட வரும் காஞ்சனா 4.. இயக்கும் பணியில் மும்மரமாக இறங்கிய ராகவா லாரன்ஸ்.

தமிழ் சினிமாவில் தனது நடனத்திற்கும் பேய் படங்களுக்கும் பெயர் போனவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் நடித்து இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3,  திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்தன. இந்த திரைப்படங்கள் உலக அளவில் பெரும் வசூலை ஈட்டின என்று கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக காஞ்சனா 2 திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியானது.



பேய் கதையை மையமாக வைத்துஎடுக்கப்படும் இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்கும் பணியில் மும்மரமாக இறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படமும் முதல் மூன்று படங்களை போல திகில் மற்றும் காமெடி பாணியில் எடுக்கப்படவுள்ளது. இதற்கானப் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என தகவலைகள் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கி தானே தயாரிக்கவும் உள்ளார். தமிழ் சினிமாவில் பேய் படங்கள் என்றாலே கொலைநடுக்கும் கட்சிகளும் பீதியில் உறையவைக்கும் கதையும் தான் என்ற டெம்ப்லேட்டை உடைத்து பேய் படங்களில் காமெடியை புகத்தி சிரிக்கவைக்கவும், அதே சமயம் ரசிகர்களை மிரட்டும் பேயால் முனி படத்தில் மிரளவும் வைத்தார் ராகவா லாரன்ஸ். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, காஞ்சனா திரைப்பட வரிசைகளை இயக்கத் தொடங்கினார் ராகவா லாரன்ஸ்.

அந்த ஃபார்முலா அவருக்கு வெற்றியை கொடுக்க, அதே பாணியில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சனா 4 படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து வருவதாக ஏற்கனவே நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ராகவா லாரன்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சரணடைந்தேன் சகியே – 24

24         “என் ஹஸ்பென்ட், சாரோட கம்பெனியில் மேனேஜர்.. நான் ஒரு யோகா டீச்சர்.. யோகா…

36 mins ago

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மனோஜ்…

38 mins ago

ஜூலை மாத பலன்கள் (துலாம், விருச்சிகம்)

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி…

40 mins ago

கொடுத்த வாக்கை காப்பாற்றும் லாரன்ஸ் மாஸ்டர்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியானது. அதையடுத்து இப்போது அவர் அதிகாரம், துர்கா ஆகிய படங்களில் நடித்து…

41 mins ago

தானுபே குழுமம் ரிஸ்வான் சாஜனின் வெற்றிக் கதை!

கட்டிடங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தானுபே குழுமம் (Danube Group) பற்றி நம்மில் பலருக்கும் அவ்வளவாகத் தெரியாது. 1993-ஆம்…

3 hours ago

காணாமல் போன பாக்யாவின் சந்தோஷம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் ஈஸ்வரி…

3 hours ago