மாவட்ட கோவில்கள்:விருந்தீஸ்வரர் திருக்கோயில்

நால்வரில் ஒருவரான சுந்தரர் சிவாயலங்கள் தோறும் சென்று வழிபட்டு வந்தார். அவினாசியில் அவினாசி இலிங்கேஸ்வரையும் அன்னை கருணாம்பிகையையும் தரிசித்து விட்டு, விருந்தீஸ்வரர் கோயிலுக்கு வரும்போது மிகுந்த பசி ஏற்பட்டது. தள்ளாடிபடியே கோயிலை அடைந்தார். அவரது நிலை கண்ட ஒரு தம்பதியர் அவரை உபசரித்தனர். கணவன், விசிறி விட, மனைவி வன முருங்கைக்கீரையுடன் அமுது தயாரித்து அளித்தாள். அமுதை சாப்பிட்டவுடன் சுந்தரருக்கு புத்தொளி பிறந்தது. இந்த புத்தொளிக்கு காரணம் அமுது படைத்த வேடுவராக வந்த இறைவனும், இறைவியுமே காரணம் என்பதை அறிந்தார் சுந்தரர் நெகிழ்ந்து போனார். சுந்தரருக்கு விருந்து படைத்ததால் இத்தல இறைவன் “விருந்தீஸ்வரர்” ஆனார். அதிகார நந்தியை பிரதோஷ காலங்களில் குளிர்ச்சியான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் அவரும் குளிர்ந்து, நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மையும் குளிர்விப்பார்.





தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் லட்சுமி நாராயணரை இத்தலத்தில் உள்ளனர். இவர்களை வழிபட்டால் தம்பதியரிடையே மன ஒற்றுமை மேலோங்கும். மிகவும் பழமையான இத்தலம் கணேஸ்வரம், அகஸ்திய நல்லூர், கந்தமாபுரி என மூன்று யுகங்களிலும் அழைக்கப்பட்டது. கோயிலில் உள்ள கல்வெட்டின் படி ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் நிறுவப்பட்டது என தெரிகிறது.



ஈசன் சுயம்பு மூர்த்தியாக திகழ்கிறார். பங்குனி மாதம் 17ம்தேதியில் சூரியன் விருந்தீஸ்வரர் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி வழிபாடு செய்கிறார். இங்கு தலவிருட்சமாக வன முருங்கை உள்ளது. சாதாரணமாக எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் ஜடாமுடி விரிந்து கிடக்க நடனமாடுவார். ஆனால், இங்கு தலை முடித்து அருள்பாலிக்கிறார். சிவன் தனது வாகனமான நந்திக்கு இத்தலத்தில்தான் சர்வ அதிகாரம் தந்தார். இதையடுத்தே கோயில்களில் “அதிகார நந்தி” சன்னதி அமைக்கும் பழக்கம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.

திருவிழா:

மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் விசேஷ நாட்கள் ஆகும்.

கோரிக்கை:

பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர இங்கு வழிபாடு செய்யலாம்.

நேர்த்திக்கடன்:

தம்பதியர் ஒன்று சேர்ந்த பின் லட்சுமிநாராயணருக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கருங்காலி மாலை பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும்

தொழிலில் வெற்றியை தந்து, அனைத்து கனவுகளையும் நனவாக்கும் தன்மை கருங்காலி மாலைக்கு உண்டு. செவ்வாய் கிரகத்தின் அம்சம் கொண்டது என்பதால்…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/பாலினம் மாறுபாடு குறித்த சில சுவாரஸ்ய கதைகள்!!!

பலருக்கும் தெரியாத புராணத்தில் உள்ள பாலினம் மாறுபாடு குறித்த சில சுவாரஸ்ய கதைகள்!!!பாலியல் வன்கொடுமைக்காக இந்தியா அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது;…

2 hours ago

மாவட்ட கோவிகள்:உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி

திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்– பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் அவதரித்தார். தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள…

2 hours ago

நாள் உங்கள் நாள் (07.07.24) ஞாயிற்றுக்கிழமை

கௌரி பிக் பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூலை 07.07.24 ஞாயிற்றுக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 23 …

2 hours ago

இன்றைய ராசி பலன் (07.07.24)

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை…

2 hours ago

நீயில்லாமல் வாழ்வது லேசா!-16 (நிறைவு)

16 ‘‘அட.. ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்? வாருங்கள் சகோதரி..” பிரெட்ரிக்கின் ‘சிஸ்டர்’ மைக் வழியாக அந்த அரங்கம் முழுவதும் அதிர்ந்தது.…

13 hours ago