Categories: lifestyles

மக்களின் இதயம் தொட்ட `இதயம்’ நல்லெண்ணெய் வளர்ந்த கதை!

விருதுநகர் பிரபல வணிகர் உயர்திரு .வி.வி.வி.ராஜேந்திரன் -ஜெகதாம்பாள் தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி பிறந்தவர் திரு. வி.ஆர். முத்து அவர்கள் .திரு. முத்து அவர்கள் தனது ஆரம்ப பள்ளிக்கல்வியை விருதுநகர் சுப்பிரமணிய வித்தியாசாலாவிலும் ,பின்னர் திருவள்ளுவர் வித்தியாசாலாவிலும் பயின்றார்.உயர்நிலைப் பள்ளி படிப்பை மதுரை ரோடு சத்திரியா வித்தியாசாலாவிலும் பயின்றார்.பட்ட படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார்.மும்பை எம்.எம்.கே வணிகக் கல்லூரியில் b .com படித்தார்.பின் சென்னை பிரபல ஆடிட்டர் கே.வி. ராமசாமி அவர்களிடம் பயிற்சி பெற்றார்.இம் மூன்றாண்டு காலத்தில் சென்னை மற்றும் பெருநகரங்களில் செயல் படும் பெரும் வணிக நிறுவனங்களில் உள்ள தணிக்கை மேற்க் கொண்டதன் மூலமாக வணிக நிர்வாகம் பற்றிய உயர் சிந்தனைகளைப் பெற்றார்.
1978 ஆம் ஆண்டு தங்கள் குடும்ப வணிக நிறுவனமான’ ஆனந்தம் நல்லெண்ணெய்’ வணிகத்தில் சேர்ந்தார்.



1978 ஆம் ஆண்டு டாக்டர் திரு..எஸ். காசிராஜன்-மனோன்மணி தம்பதிகளின் புதல்வி மலர்விழி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.திரு. முத்து -மலர்விழி தம்பதியினருக்கு திருமதி.பூவிதழ் B .E ,டாக்டர் .திருமதி .இளந்தளிர் MBBS .,D .Diab ஆகிய இரு மகள்களும் திரு.ராஜா விக்னேஷ் முத்து B .TECH ., M .BA ., ஆகிய மகனும் உள்ளனர்.


1978 ஆம் ஆண்டு முத்து அவர்கள் வணிகத்திற்கு வந்த புதிதில் அக்கௌண்டிங்கில் ஆர்வம் கட்டி வந்தார்.மார்கெட்டிங் தான் ஒரு வணிக நிறுவனத்தின் முக்கிய பணி என்ற தெளிவு ஏற்ப்பட்டு 1980 ல் தன முழுக் கவனத்தையும் மார்கெட்டிங்கில் செலுத்த ஆரம்பித்தார்.1980 ஆம் ஆண்டு ஆனந்தம் நல்லெண்ணெய் ராமநாத புரம், மதுரை , திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சென்னை நகரிலும் மட்டுமே விற்பனை செய்து வந்தது .திரு. முத்து அவர்கள் தமிழகம் முழுவதும் தம் விற்ப்பனையை சந்தைப் படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றி ஆறு ஆண்டுகளில் ஆனந்தம் நல்லெண்ணெய் விற்ப்பனையை ஆறு மடங்காக மாற்றினார்.1980 ல் இரண்டு கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை ஆன ஆனந்தம் நல்லெண்ணெய் 1986 ல் ரூபாய் பன்னிரண்டு கோடிக்கு விற்ப்பனையை எட்டியது.


1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி ‘இதயம்’ என்ற புதிய பிராண்ட் நல்லெண்ணெய் உதயமானது .1980 ஆம் ஆண்டு வணிகத்தில் நுழைந்த பொழுது பிறருடன் பேச தயக்கம் காட்டும்திரு முத்து அவர்கள் jayces பயிற்சி மூலம் தன்னை மேலும் மேலும் பட்டை தீட்டிக் கொண்டார்.தலைமைப் பண்புகளும் , உற்சாகமும் , பயிற்சிகள் மூலம் ஆக்க பூர்வமான மாற்றங்களை ஏற்ப்படுத்தும் என்பதை உணர்ந்த திரு. முத்து அவர்கள் இதயம் நிறுவன மேலாளர்களுக்கும் , இடைநிலைப் பணியாளர்களுக்கும் பலவித சுய முன்னேற்ற பயிற்சிகளை வழங்கி இதயம் நிறுவனத்தை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்றார்.


“1986-ம் ஆண்டு `இதயம் நல்லெண்ணெய்’ என்ற புது பிராண்டை ஆரம்பித்தோம். எங்கள் கடின உழைப்பால் தமிழ்நாடு முழுக்க அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ்நாட்டைப் போல் அண்டை மாநிலங்களிலும் இதயம் நல்லெண்ணெயை அறிமுகப்படுத்த நினைத்தேன். அதற்காக பெங்களூரிலுள்ள ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு இரண்டு இதயம் நல்லெண்ணெய் பெட்டிகளை எடுத்துச்சென்று, ”எங்கள் எண்ணெயை வாங்குகிறீர்களா?” என்று அந்தக் கடையின் உரிமையாளரிடம் கேட்டேன். அவர் என்னை, அவரின் தம்பியைப் பார்க்கச் சொன்னார். அவர் தம்பி, கடையின் மேலாளரைப் பார்க்கச் சொன்னார். அவர்கள் நடந்துகொண்டதிலிருந்து என்னை புறக்கணிக்கப் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்.

மேலாளரிடம் செல்வதற்கு முன்னர் என் முடிவை மாற்றிக்கொண்டேன். மேலாளரிடம், ”உங்கள் கடையில் 1,000 ரூபாய்க்குமேல் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளருக்கு எங்கள் இதயம் நல்லெண்ணெய் அரை கிலோ பாக்கெட்டை இலவசமாகத் தர விரும்புகிறேன்” என்று கூறினேன்.



இதைக் கேட்டு உற்சாகமடைந்த மேலாளர், அவருடைய இரு முதலாளிகளிடமும் கூற, அதன் பிறகு அவர்கள் என்னை நடத்தியவிதம் வேறாக இருந்தது. `தடைகளைப் பார்த்து பயப்படக் கூடாது. தடைகளைத் தகர்க்க வேண்டும். தடைகளைப் படிக்கல்லாக மாற்ற யோசிக்க வேண்டும். சிறப்பான எண்ணங்கள் கஷ்ட காலத்தில்தான் தோன்றும்’ என்பதை நான் உணர்ந்துகொண்ட நேரம் அது.

இரண்டு பெட்டி விற்கச் சென்ற நான் அன்று எடுத்த முடிவால் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றேன். இன்று வடமேற்கே டொரொன்டோ முதல் தென்கிழக்கே நியூசிலாந்து வரை பலரும் எங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுக்க 38 நாடுகளில் எங்கள் தயாரிப்பை விற்பனை செய்கிறோம்”

– ஒரு வியாபாரத்தைத் தொடங்கி மிகப்பெரிய அளவில் வளர்வது என்பது சாதாரணமான விஷயமல்ல. தன்முனைப்புடன் சில வெற்றிச் சூட்சுமங்களைக் கையாளும்போதுதான் ஒரு வியாபாரத்தையோ, ஒரு பிராண்டையோ பெரிய அளவில் வளர்த்தெடுக்க முடியும். அந்த வகையில் பல கோடிப் பேரின் ‘இதயம்’ கவர்ந்த இதயம் நல்லெண்ணெய் வளர்ந்த கதை சுவாரஸ்யமானது.

‘தினந்தோறும் வாங்குவேன் இதயம்’ – இது நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான விளம்பரம். நல்லெண்ணெய் சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னனாகத் திகழும் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் தலைவரும், ஆர்.ஜே மந்த்ரா பள்ளியின் புரவலருமான வி.ஆர்.முத்துவிடம் பேசினோம். அவர் தன்னுடைய வெற்றிக்கதையை நம்மிடம் `நச்’சென்று எடுத்துச் சொன்னார்.

ஆறு கோடி ரூபாய் விற்பனையில் ஆரம்பித்த இதயம் நிறுவனம் 27 ஆண்டுகளில் பல தயாரிப்புகளை நிர்வகித்து ஆண்டுக்கு 360 கோடி ரூபாய் விற்பனையை எட்டி உள்ளது .இன்று உலக அளவில் ‘இதயம் நல்லெண்ணெய் மற்றும் இதயம் குழுமப் பொருட்கள் சந்தைப் படுத்தப் படுகின்றன .வெகு விரைவில் 500 கோடி ரூபாய் விற்பனை இலக்கை எட்ட வேண்டும் என்ற உற்சாகத்துடன் இதயம் குழுமம் வீர நடை போடுகிறது.



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சரணடைந்தேன் சகியே – 20

20       “நாம் கோவிலில் வைத்து திரும்பவும் தாலி கட்டிக் கொள்ளலாமா சகி..?” முணுமுணுப்பாய் அவள் தோள்களில்…

2 hours ago

விஜய்-த்ரிஷா விவகாரம்.. சுசித்ரா சொல்லும் உண்மை !

தன்னுடைய பேட்டிகளின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கலங்கடித்தவர் பாடகி சுசித்ரா. அதிலும் நடிகர் தனுஷின் மொத்த சொந்த வாழ்க்கையையும்…

2 hours ago

சன் டிவி சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கப் போகும் விஜய் டிவியின் வேதா

எத்தனையோ சேனல்கள் போட்டி போட்டு வந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சேனலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. அதனால்…

2 hours ago

‘கல்கி’! விமர்சனத்தையும் தாண்டி என்னெல்லாம் இருக்கு பாருங்க

 சமீபத்தில் வெளியான திரைப்படம் கல்கி. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல், தீபிகா படுகோன்…

2 hours ago

‘இந்தியாவின் தங்க மங்கை’ பி.டி.உஷாவின் சாதனை!

இந்திய விளையாட்டு சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரம், பி.டி.உஷா. 'இந்தியாவின் தங்க மங்கை', 'தடகள நாயகி', 'ஆசிய தடகள ராணி'…

4 hours ago

அதிரடியாக முடிவு எடுக்க போகும் ராதிகா ..பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்க போவது என்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யா வேண்டாம் என்று உதறி தள்ளிட்டு போன கோபி நிலைமை தற்போது ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. அதாவது மனசுக்கு…

4 hours ago