மகாபாரதக் கதைகள்/மகாபாரதத்தில் ஒரு மார்க்கண்டேயன்

மகாபாரதத்தில் ஒரு மார்க்கண்டேயன்

குருக்ஷேத்திர போர்க்களம் – தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடந்துகொண்டிருந்த பாரதப் போரின் 13-ஆம் நாள்… கௌரவர்களின் சேனாதிபதி துரோணர் அமைத்த பத்ம வியூகத்தை உடைத்தெறியும் நோக்கில் வீரதீரப் போர் புரிந்துகொண்டிருந்தான் அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அந்த வியூகத்தை எளிதில் உடைக்கும் வல்லமை பெற்றிருந்த அர்ஜுனன் அந்த நேரம், போர்க்களத்தின் மற்றொரு முனையில் சம்சப்தகர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.

சரி, பத்ம வியூகத்தை உடைக்கும் தைரியம் அபிமன்யுவுக்கு எப்படி வந்தது?சுபத்திரையின் கர்ப்பத்தில் அபிமன்யு குழந்தையாக இருந்த போது, யுத்த தர்மம் பற்றி தன் அண்ணன் ஸ்ரீகண்ணனிடம் கேட்டாள் சுபத்திரை. வீரர்களின் அணிவகுப்பை வகைப்படுத்தி வியூகமாக அமைத்து, எதிரியை வெல்லும் முறைகளை… குறிப்பாக, பத்ம வியூகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான் கண்ணன். அதனை உடைத்து உள்ளே நுழையும் முறையை விவரித்துக் கொண்டிருந்தபோது, நடுவில் சிறிது நிறுத்தினான். ‘உம்… அப்புறம்?’ என்ற குரல் எங்கிருந்தோ கேட்டது. அது சுபத்திரையின் கர்ப்ப வாசத்திலிருந்த அபிமன்யுவின் ஆர்வக் குரல். அது கண்ணனுக்குத் தெரியும். அதனால், அதற்கு மேல் அவன் கதையைத் தொடரவில்லை. அதற்கான காரணமும் கண்ணனுக்குத்தான் தெரியும்.





தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே புகும் வழிமுறையைப் புரிந்துகொண்டதால், தைரியமாகப் போர்க்களம் வந்துவிட்டான் அபிமன்யு. பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும் ரகசியம்தான் அபிமன்யுவுக்கு தெரியும்; வெளியே வரும் உத்தி தெரியாது என்பதால், அதில் இருந்து அவனைப் பாதுகாப்பாக வெளியே மீட்டு வருவதற்கு உதவியாக வந்திருந்தான் பீமன். ஆனால், உள்ளே நுழைந்துவிட்ட அபிமன்யு, ஒரு கட்டத்தில் அங்கேயே சிக்கிக்கொண்டான். பீமனின் பக்கபலம் அவனுக்குக் கிடைக்கவில்லை. போர்க்களத்தில் ஜயத்ரதன் செய்த மாய வேலைகளே அதற்குக் காரணம்.

துரோணர் விட்ட அம்பு அபிமன்யுவின் தேர்க் கொடியை அறுத்தது. கர்ணனின் அம்பு, தேர்ச் சக்கரத்தை முறித்தது. துரியோதனனின் ஆயுதம் தேர்ப் பாகனைக் கொன்றது. சகுனியின் பாணம் அபிமன்யுவின் வில்லை முறித்தது. துச்சாதனனின் அம்பு அபிமன்யுவை தேரிலிருந்து கீழே தள்ளியது. ஜயத்ரதனின் பாணம், அபிமன்யுவின் கரத்தைக் கிழித்தது. உடம்பெல்லாம் புண்ணாகி,குருதி ஒழுக, நிராயுதபாணியாக நின்றான் அபிமன்யு. எனினும், அதர்ம யுத்தம் புரிந்த கௌரவர்களைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. தொடர்ந்து போரிட்டான். அப்போது துச்சாதனனின் மகன் கோழை போல் பின்னாலிருந்து தன் கதையால் அபிமன்யுவின் தலையில் ஓங்கி அடித்தான். சுருண்டு விழுந்தவன் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் மற்ற மகாரதர்கள் தங்கள் ஆயுதங்களால் வலிமையாகத் தாக்கி, அபிமன்யுவின் உடலில் அடையாளச் சின்னமிட்டனர். உடல் உருக்குலைந்தாலும், உறுதி குலையாத பொலிவோடு அபிமன்யு தரையில் சாய்ந்தான். இல்லை… அவன் சாகவில்லை! ‘என்றும் பதினாறு வயது’ என சிவனால் ஆசீர்வதிக்கப்பட்ட மார்க்கண்டேயன்போல இவனும் ஓர் இதிகாச நாயகன் ஆனான். சொர்க்கம் அவன் ஆன்மாவை வரவேற்றது.

களத்தில் மகன் இறந்தது தெரியாமல், தான் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் திரும்பிக்கொண்டிருந்தான் அர்ஜுனன். வழியில், அவன் கண்ட காட்சி ஒன்று அவனைத் திடுக்கிட வைத்தது. அக்னியை வளர்த்து, அதற்குள் விழுந்து உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருந்தான் அந்தணன் ஒருவன். ஸ்ரீகண்ணனிடம் ரதத்தை நிறுத்தச் சொல்லி, அந்தணன் அக்னியில் விழா வண்ணம் தடுத்தான் அர்ஜுனன்.





”ஐயா, என் ஒரே மகன் இன்று போரில் உயிர் துறந்துவிட்டான். இனி நான் வாழ்ந்து என்ன பயன்? என்னைச் சாக விடுங்கள்!” என்று கெஞ்சினான் அந்தணன். ”பெரியவரே! ஆத்மஹத்தி செய்வது எவ்வளவு பெரிய பாவம்! தங்கள் மகன் போரிலே இறந்தான் என்றால், அவன் வீர சொர்க்கமல்லவா அடைந்திருப்பான்! அதனை எண்ணிப் பெருமைப்படாமல் இப்படிக் கோழைபோல் தற்கொலைக்கு முயல்வது அறிவீனம் அல்லவா?” என்றான் அர்ஜுனன்.”தத்துவம் சொல்வது எளிதய்யா! தங்களுக்கு இதுபோல் நேர்ந்தால், அப்போது தெரியும்” என்றான் அந்தணன். அதைக் கேட்டதும், அர்ஜுனன் உணர்ச்சி வசப்பட்டவனாக, ”என் மகனைப் போர்க் களத்திலே இழக்க நேரிட்டால்கூட, தங்களைப் போல் கோழையாகத் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன். என் மகனின் மரணத்துக்குக் காரணமான எதிரிகளுடன் போரிட்டு, வென்று,அவர்களை அழித்து, அவன் ஆத்மா சாந்தி பெறச் செய்வேன். இது வெறும் வார்த்தையல்ல. நான் சொன்னதைச் செய்யும் க்ஷத்திரியன். சத்தியம் தவறாதவன். நான் சொல்வதைக் கேளுங்கள். தற்கொலை எண்ணத்தை விட்டுச் செல்லுங்கள்” என்று உறுதி குலையாத குரலில் பேசினான்.அந்தணனும் ஆறுதலடைந்து, ”என் மகனே நேரில் வந்து வேண்டுவதுபோல இருக்கிறதப்பா! என் உயிர் காத்த நீ பல்லாண்டு காலம் வாழ வேண்டும்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றான்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சரணடைந்தேன் சகியே – 24

24         “என் ஹஸ்பென்ட், சாரோட கம்பெனியில் மேனேஜர்.. நான் ஒரு யோகா டீச்சர்.. யோகா…

23 mins ago

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மனோஜ்…

25 mins ago

ஜூலை மாத பலன்கள் (துலாம், விருச்சிகம்)

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி…

27 mins ago

கொடுத்த வாக்கை காப்பாற்றும் லாரன்ஸ் மாஸ்டர்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியானது. அதையடுத்து இப்போது அவர் அதிகாரம், துர்கா ஆகிய படங்களில் நடித்து…

28 mins ago

தானுபே குழுமம் ரிஸ்வான் சாஜனின் வெற்றிக் கதை!

கட்டிடங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தானுபே குழுமம் (Danube Group) பற்றி நம்மில் பலருக்கும் அவ்வளவாகத் தெரியாது. 1993-ஆம்…

3 hours ago

காணாமல் போன பாக்யாவின் சந்தோஷம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் ஈஸ்வரி…

3 hours ago