மகாபாரதக் கதைகள்/ அர்ஜுனனின் வனவாச காலம்

அர்ஜுனன் தனது வனவாச காலத்தின் போது, சித்திராங்கதையிடம் இருந்து விடைபெற்று சென்று புண்ணிய நீர்நிலையான தெற்கு கடற்கரைக்கு சென்றார்.

ஆனால் அங்கே அந்த ஐந்து நீர்நிலைகளான அகஸ்தியம், சௌபத்ரம், கரந்தமம், பரத்வாஜம், பௌலோமம் ஐந்து புண்ணிய நீர் நிலைகளைளும் அனைவராலும் தவிர்க்கப்பட்டிருப்பதை  கண்டார்.

இதற்கான காரணத்தை துறவிகளிடம் வினவிய போது அவர்கள் அங்கே ஐந்து பெரும் முதலைகள்  வசிப்பதாகவும், அவை குளிக்க செல்பவர்களை இழுத்துச் சென்று விடுகின்றன என்றும் கூறினார்கள்.

துறவிகளின் இந்த வார்த்தைகளை கேட்ட அர்ஜுனன் அந்த நீர்நிலைகளிற்கு சென்று, குளிப்பதற்காக மூழ்கினார்.

அவர் மூழ்கியதும் அவனது காலை ஒரு பெரிய முதலை பற்றியது.

ஆனால் பலம்  கொண்ட அர்ஜுனன் அந்த முதலையை தரையில் இழுத்துப் போட்டார்.

அப்போது அங்கே அவரால் இழுத்துப் போடப்பட்ட முதலை ஒரு அழகிய பெண்ணாக மாறியது.

இதை கண்ட அர்ஜுனன் அவளை நோக்கி ” நீ யார், நீ ஏன் இந்த நீரை அதிகாரம்  செய்து கொண்டு இப்படிப்பட்ட பாவங்களை  இழைக்கிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த மங்கை “நான் ஒரு அப்சரஸ் , எனது பெயர் வர்கா. நான் குபேரனுக்கு மிக அன்பானவள்.

என்னுடன் இன்னும் நான்கு தோழிகள் இருக்கிறார்கள். நாங்கள் நினைத்த இடத்திற்கு செல்லக்கூடிய சக்தி பெற்றவர்கள்.



ஒரு நாள் அவர்களுடன் குபேரனின் வசிப்பிடத்திற்கு சென்றேன். அப்போது நாங்கள் செல்லும் வழியில் கடும் தவம் இருந்த ஒரு அந்தணரை கண்டோம். அவர் தன் தவத்தால் அந்த பகுதியையே பிரகாசிக்க செய்திருந்தார்.

அவரின் அர்ப்பணிப்பு மற்றும் அழகை கண்ட நாங்கள், அவரின் தவத்தை கலைக்க தீர்மானித்தோம்.

நானும் சௌரபேயி,சமிச்சி,வியுத்யுதா,லதா ஆகிய எனது தோழிகளும் சிரித்தும் பாட்டுப் பாடியும் பல வழிகளிலும் அந்த அந்தணரை மயக்க முயற்சி செய்தோம்.

ஆனாலும் அவர் மனதை எம்மால் கலைக்க முடியவில்லை. அவர் எங்களை கண்ட போது பெரும் கோபத்துடன்  பார்த்தார்.

எங்களை பார்த்து “நீங்கள் அனைவரும் முதலைகளாக மாறி நீர்நிலைகளில் அதிகாரம் செலுத்துங்கள் ” என்று சபித்தார்.

பின்னர் நாங்கள் துன்பமடைந்து, எமது தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு விமோசனம்  வேண்டினோம்.

அப்போது அவர் “நீங்கள் முதலைகளாகி நூறு ஆண்டுகளுக்கு மனிதர்களை பிடித்து உண்ணுங்கள்.

அந்தக் காலத்தின் முடிவில் ஒரு மேன்மை  மிகுந்தவன் உங்கள் அனைவரையும் நீரில் இருந்து வெளியே இழுத்துப் போடுவான்.

அப்போது நீங்கள் உங்கள் உண்மையான உருவத்தை அடைவீர்கள்” என்றார்.

அதன் பின்னர் கனத்த இதயத்துடன் நாங்கள் அங்கே வசித்து வந்தோம்.

அப்போது நாங்கள் அங்கே தெய்வீக முனிவரான# நாரதரை சந்தித்தோம்.

அவரை வணங்கி எமது நிலைமையை துயரத்துடன் கூறினோம்.



நடந்தவற்றை கேட்ட அவர்……

“”தெற்கு கடலருகே இருக்கும் தாழ்ந்த நிலங்களில் ஐந்து புனித நீர்நிலைகள் இருக்கின்றன. தாமதமில்லாமல் அங்கே செல்லுங்கள்.

 பாண்டுவின் மகனான சுத்தமான ஆன்மா  கொண்ட தனஞ்செயன் உங்களை இந்த நிலையில் இருந்து விடுவிப்பான்”””என்று கூறினார்.

முனிவரின் வார்த்தைகளை கேட்ட நாங்கள் இங்கு வந்தோம். அவர் கூறியது போலவே நான் உங்களால் விடுவிக்கப்பட்டேன்.

ஆனால் எனது நான்கு  தோழிகள் அந்த நீர்நிலையில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுப்பாயாக ” என்று வேண்டினாள்.

அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மற்றவர்களையும் சாபத்திலிருந்து   விடுவித்தார் அர்ஜுனன். அந்த நீர்நிலைகளையும் காப்பாற்றி, அவர்களையும் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி  வைத்தார்.

அன்று ஸ்ரீராமனின்  பாதம் பட்டு கல்லாய் இருந்த அகலியை  சாப விமோசனம் பெற்றது போலவே,,,,

இந்த பார்த்தனால் ஐந்து அப்சரஸ்கள் சாப விமோசனம் பெற்றனர். நம் அர்ஜுனர் பெருமை  கூற வார்த்தைகள் ஏது??????????……..



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

’நேசிப்பாயா’ படத்தின் புரமோஷன் விழாவில் நயன்தாரா..எப்படி?

நடிகை நயன்தாராவை ஒரு திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்களிடம் முதலில் அவர் கூறும் நிபந்தனை எந்தவித புரமோஷனு க்கும் வர மாட்டேன்…

2 hours ago

மாரடைப்பு ஏற்படும் போது வலி எப்படி இருக்கும் ..? நெஞ்சு வலி தானா அல்லது என்ன வலி என்று எப்படி கண்டறிவது?

மாரடைப்பு என்பது பொதுவா க சுருக்சுருக்கென்று கூர்மையாக இருக்கும் வலி மட்டுமல்ல, மாறாக இது உடலில் பரவலான அசௌகரிய உணர்வையும்…

2 hours ago

ஜூலை மாத ராசி பலன்கள் (சிம்மம், கன்னி )

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில்…

2 hours ago

தயாரிப்பாளர் காலில் விழுந்த கேப்டன்.. ஏன்?பாவா லட்சுமணன் சொன்ன பிளாஷ்பேக்

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு…

2 hours ago

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தானா வீட்டுக்கு வர வேண்டுமா? அப்போ இத கண்டிப்பா பண்ணுங்க!

பொதுவாகவே ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நமது முன்னோர்கள் வாரத்தின் ஒவ்வொரு கிழமைகளிலும் எதைச் செய்ய வேண்டும், எதைச்…

6 hours ago

மகாபாரதக் கதை/மன்னரின் உதவி

பாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருதரப்பிலும் பல்லாயிரம் உயிர் துறக்கின்றனர். காயம் பட்ட பலர், தாகத்தால் துடிக்கின்றனர். மற்றும்…

6 hours ago