Categories: lifestyles

தேங்காய் வியாபாரத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் லட்சுமி

கேரளத்தை சேர்ந்தவர் லட்சுமி ராஜ். தனது கணவர் அஜின் அபுதாபியில் வேலை பார்த்ததால் அவரும் அங்கு ஐந்து ஆண்டுகள் வசித்து வந்தார். அதன் பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர். கேரளத்தில் அபுதாபி போல இன்ஸ்டன்ட் உணவுப் பொருட்கள் கிடைக்காததால் கடும் சிரமத்துக்கு ஆளானார்.

இதனிடையே கேரளத்தில் தயாரிக்கப்படும் உணவுகளில் பெரும்பாலும் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் , தேங்காய் துருவலைப பயன்படுத்துவதை பார்த்தார். இதற்காக ஒவ்வொரு முறையும் தேங்காயை பாரம்பரிய முறையில் துருவுவது பெரிய கஷ்டமாக இருந்தது லட்சுமிக்கு.



இதைத் தொடர்ந்து அவர் 2016 ஆம் ஆண்டில் ஈஸி அன் பிரஷ் என்ற உணவுத் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்தார். இதற்காக அவர் வங்கியில் ரூ.5 லட்சம் கடனாக வாங்கி தொழிலை தொடங்கினார். தொழிலுக்கு வேண்டிய தேங்காய்களை உள்ளூர் விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கொள்முதல் செய்தார்.

இப்போது அவரது தயாரிப்புகளை கேரள மாநிலம் முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்களுக்கு சப்ளை செய்கிறார் லட்சுமி. 100 கிராம் தேங்காய் துருவலை ரூ.33க்கும் 200 தேங்காய் துருவலை ரூ.46க்கும் விற்கிறார். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் தேங்காய் துருவல் 5 நாட்களுக்கு கெட்டுப் போகாது என்கிறார் லட்சுமி. தேங்காய் துருவல் தவிர அவர் தேங்காய் சட்னி பவுடர், வறுத்தரைச்ச சிக்கன் மசாலா பவுடர், வெர்ஜின் தேங்காய் எண்ணெய், உறையவைக்கப்பட்ட தேங்காய் சில், தீயல் மசாலா ஆகியவற்றையும் தயாரித்து லட்சுமி விற்கிறார்.

எனது தயாரிப்புகளின் விற்பனை மூலம் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேலாக சம்பாதிக்கிறேன். இந்த வியாபாரம் நன்றாக நடைபெறுவதால் புதிது புதிதாக தயாரிப்புகளை உருவாக்கி விற்க திட்டமிட்டுள்ளேன் என்று லட்சுமி கூறுகிறார்.

இல்லத்தரசியாக இருந்த லட்சுமி தனது கணவர் ஆதரவுடன் தெம்பு பெற்று இப்போது ஒரு சாதனை பெண் தொழிலதிபராக ஆகிவிட்டார். ஐக்கிய அரபு அமீரக நாடான அபுதாபியில் ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த லட்சுமியின் கனவு அவரது சொந்த ஊரில் நனவாகியதில் மிகுந்த பெருமையாக உள்ளது,



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தானா வீட்டுக்கு வர வேண்டுமா? அப்போ இத கண்டிப்பா பண்ணுங்க!

பொதுவாகவே ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நமது முன்னோர்கள் வாரத்தின் ஒவ்வொரு கிழமைகளிலும் எதைச் செய்ய வேண்டும், எதைச்…

1 hour ago

மகாபாரதக் கதை/மன்னரின் உதவி

பாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருதரப்பிலும் பல்லாயிரம் உயிர் துறக்கின்றனர். காயம் பட்ட பலர், தாகத்தால் துடிக்கின்றனர். மற்றும்…

1 hour ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில்

மூலவர்: – மலையாள பகவதி பழமை: – 500 வருடங்களுக்கு முன் ஊர்: – கணக்கன்பாளையம நூறு ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநிலத்தில் விளையும்…

1 hour ago

நாள் உங்கள் நாள் (03.07.24)புதன்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூலை 03.07.24 புதன்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 19 ஆம்…

2 hours ago

இன்றைய ராசிபலன் (03.07.24)

இன்றைய ராசிபலன் ஜூலை 3, 2024, குரோதி வருடம் ஆனி 19, புதன் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார்.…

2 hours ago

நீயில்லாமல் வாழ்வது லேசா!-12

12 அழைத்தவன் ப்ரெட்ரிக். ஐபோன் கம்பெனியின் அமெரிக்க குழுமத்தில் ஒருவன். எப்பொழுதும் மிகவும் சீரியஸான முகத்துடன் வேலையைப் பற்றி மட்டுமே…

13 hours ago