தமிழகத்தின் பணக்கார கோவில்களின் பட்டியல் ..

ஒரு கோவிலுக்கு இருக்கும் நிலங்கள் உள்ளிட்ட சொத்து மதிப்பு, தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பக்தர்களின் வருகை, பக்தர்கள் தரும் உண்டியல் காணிக்கை உள்ளிட்டவற்றின் மூலம் பெறப்படும் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அந்த கோவிலின் சொத்து மதிப்பு கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்திய அளவில் பார்த்தாலும் சரி, தென்னிந்திய அளவில் பார்த்தாலும் சரி முதலிடத்தில் இருப்பது கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தான். அதைத் தொடர்ந்து அதிக சொத்துக்களும், வருமானமும் பெரும் கோவிலாக இருப்பது திருமலை திருப்பதி ஏழுமலையான் தான்.



  • ​மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் :

    தமிழகத்தின் டாப் 10 பணக்கார கோவில்கள் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் கோவில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் தான். இங்கு மூலவர் கபாலீஸ்வரர் என்று பெயருடனும், தாயார் கற்காம்பாள் என்ற பெயருடனும் தனித்தனி சன்னதிகளில் அருள் செய்து வருகிறார்கள். ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு முன்பாக உள்ள திருக்குளம் மட்டும் 6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சென்னையின் முக்கிய கோவில்களில் ஒன்றான இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

     

     



  • தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் :​

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், முதலாம் ராஜராஜ சோழனால் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். திராவிட கட்டிடக் கலைக்கு மிகப் பெரிய சான்றாக விளங்கும் இக்கோவில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலின் ஆண்டு வருமானம் கிட்டதட்ட ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை கிடைப்பதாக சொல்லப்படுகிறது.



  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் :

    தமிழகத்தின் மிக முக்கியமான, புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. சுமார்15 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோபுரங்களுடன் இக்கோவில் காட்சி தருகிறது. இக்கோவிலில் உள்ள மீனாட்சி அம்மனின் சிலை மரகத கல்லால் ஆனதாகும். இந்த கோவிலுக்கு வெளியூர், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் என லட்சக்கணக்கானவர்கள் மாதந்தோறும் வந்து செல்கிறார்கள். இக்கோவிலின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.6 கோடி என சொல்லப்படுகிறது.



  • ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் :

    தமிழகத்தின் தென்கோடியில் ராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ள இக்கோவில் இந்தியாவில் உள்ள புண்ணிய தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். மாதத்திற்கு உண்டியல் வசூலாக மட்டும் ரூ. 70 முதல் 80 லட்சம் பெறப்படுவதாக சொல்லப்படுகிறது.

     



  • திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் :

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் இருந்து வருகிறது. 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலின் ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும். தமிழகத்தில் உள்ள கோவில்களில் இரண்டாவது பெரிய கோபுரம் அமைந்த கோவில் இது தான். இந்த கோவில் மலையே சிவனாக காட்சி தருவதால் இங்கு கிரிவலம் செல்வது மிகவும் பிரபலம். பெளர்ணமி கிரிவலம், கார்த்திகை பெளர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக வருவதால் அப்போத உண்டியல் காணிக்கையும் அதிகமாக காணப்படும். இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ. 2 கோடி வரை இருக்கும்.



  • ​திருத்தணி முருகன் கோவில் :

    முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோவில். மலைக்கோவிலாக உள்ளது. இங்கு தான் முருகன் வள்ளியை மணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த செல்கிறார்கள். இங்கு உண்டியல் வருமானமாக பக்தர்கள் அளிக்கும் பணம் தவிர, தங்கம், வெள்ளி போன்றவையும் காணிக்கையாக பெறப்படுகின்றன. இந்த கோவிலுக்கு சொந்தமாக 144 ஏக்கர் நிலம் உள்ளது.



  • சமயபுரம் மாரியம்மன் கோவில் :

    திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெள்ளி, செவ்வாய் மற்றும் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த கோவிலில் முடி காணிக்கை மூலம் மட்டும் ரூ. 2 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.50 கோடி வரை உள்ளது.



  • ​திருச்செந்தூர் முருகன் கோவில் :

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரத்தில் அமைந்த முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாக உள்ளது. கிட்டதட்ட 2000 முதல் 3000 வரை பழமையான இக்கோவில் நடைபெறும் கந்தசஷ்டி விழா உலகப் புகழ்பெற்றதாகும். தங்கம், வெள்ளி, பணம், வேல் என பலவிதமான பொருட்களை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த கோவிலின் மாதத்திற்கு இரண்டு முறை உண்டியல் எண்ணப்படுகிறது. இதில் சராசரியாக ரூ.2 முதல் 3 கோடி வரை வருமானம் கிடைக்கும். இக்கோவிலின் ஆண்டு வருமானம் ரூ. 50 முதல் 60 கோடி என சொல்லப்படுகிறது.

     

  • ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் :

    பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. 108 திவ்யதேச தலங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீரங்கம் கோவில் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.80 லட்சம் வரை கிடைக்கிறது. இது தவிர தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களும் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்படுவதால் மாதத்திற்கு ரூ.4 முதல் 5 கோடிக்கும் மேல் இக்கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் ஏராளமாக உள்ளது. ரூ.70 கோடி வரை கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

     



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சுந்தரி சீரியல் திடீரென மாற்றப்படும் ஒளிபரப்பு நேரம்..

 தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. காலை முதல்…

3 hours ago

மருமகள் பற்றி தெரியாமல் மொத்தத்தையும் உளறிய கோமதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி ஆசைப்பட்ட மாதிரி டியூஷன் எடுப்பதற்கு மீனா ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி ஹோம்…

3 hours ago

சின்ன வெங்காய காரக்குழம்பு செய்து அசத்துங்க !

சமையல் செய்யும் போது அனைவரது மனதிலும் எழும் முதல் கேள்வியே இன்னைக்கு என்ன சமையல் என்பதே. அதிலும் அதிக அளவில்…

3 hours ago

‘கருப்பன்’ விமர்சனம்

கிராமத்து பின்னணி கொண்ட படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, பல ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடித்திருக்கும் படம்…

3 hours ago

சரணடைந்தேன் சகியே-28

28   “வெல்கம் அகிரோட்டோ..” வலது கையால் அகிரோட்டோவின் கையை குலுக்கியபடி இருந்த பாலகுமரன் இடது கையால் சஸாக்கியின் கை…

7 hours ago

மணி பிளான்ட் நடும்போது இந்த ரெண்டுல ஒன்னு போட்டு நடுங்க..!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மணி பிளான்ட் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் பணம் பெருகுவது மட்டுமின்றி,…

7 hours ago