Categories: Uncategorized

செடிகளுடன் சேர்த்து விதைகளையும் பாதுகாப்பது எப்படி? – சில டிப்ஸ்

வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பாக பல்வேறு தகவல்களை இந்தப் பகுதியில் பார்த்துட்டு வர்றோம்.  விதைகளைச் சேமிக்கிறது பற்றியும், சில டிப்ஸ்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

“இன்றைக்கு மாடித் தோட்டத்துக்கு அவசியமானவை பாரம்பர்ய விதைகள். அவற்றுக்கே உரித்தான வீரியம் எப்போதும் குறையாது. மாடித்தோட்டத்திலிருந்து நாம் ஒருமுறை விதைகளைப் பெற்று அதை அடுத்த முறை விதைப்புக்குப் பயன்படுத்துவதுதான் இப்போது பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம், வெளியிலிருந்து வாங்கும் விதைகளில் முளைப்புத் திறன்கள் சந்தேகமாக இருப்பதுதான். ஏனெனில், எல்லா விதைகளுக்கும் ஒரு ஆயுள் உண்டு. விதைகளின் ஆயுளை சரியாகப் பாதுகாக்க சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் முளைப்புத்திறன், மகசூல் கொடுக்கும் திறன் ஆகியவை சரியாக இருக்கும்.

விதைகளின் மேற்பரப்பில் பாதுகாப்பாகக் கவசம் போல ஒரு உறை இருக்கும். அதை நீக்காமல் இருக்கும்வரை அந்த விதைகள் பாதுகாப்பாகத்தான் இருக்கும். அதற்குச் சரியான உதாரணம், நமது உடலின் மேல் தோலைச் சொல்லலாம். இந்தத் தோல் எனும் உறை எப்படி மனித உடலைக் காக்கிறதோ அதேபோல விதைகளின் மேல் இருக்கும் உறைகள் விதைகளைப் பாதுகாக்கும். அதற்காக விதைகளின் மேல் தோலை நீக்காமல் அப்படியே சேமிக்க வேண்டும் என்பதும் தவறு.

விதைகளை ஒருமுறை வாங்கி பயன்படுத்திவிட்டால் அடுத்தமுறை விதைகளை வெளியிலிருந்து வாங்கத் தேவை இல்லை. சில பாரம்பர்ய முறைகளைப் பின்பற்றினால் விதைகளைப் பாதுகாப்பது எளிமையான ஒன்றுதான். பிரித்தெடுக்கப்பட்ட விதைகளை அரை மணிநேரம் கோமியத்தில் ஊற வைத்து 6 மணிநேரம் நிழலில் காய வைக்க வேண்டும். இந்த விதைகளைப் பாதுகாக்கும் பாத்திரம் மிக முக்கியம். விதைகளைச் சேமிக்க பிளாஸ்டிக் டப்பாக்களை எப்போதுமே பயன்படுத்தக் கூடாது. பாரம்பர்ய முறைப்படி மண்பாத்திரங்களைப் பயன்படுத்திச் சேமிக்கலாம். மண் பாத்திரம் ஒரு நல்ல வழிமுறை.



முந்தைய காலங்களில் மண் பாத்திரங்களில்தான் சேமிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. மண் பாத்திரம் கிடைக்காத நேரத்தில் மரத்தால் ஆன குடுவைகளிலோ, பீங்கான் குடுவைகளிலோ விதைகளைச் சேமித்து வைக்கலாம். அதேபோல பசு கோமியம் கிடைக்காதவர்கள் டம்ளரில் நீரை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு உப்பைச் சேர்த்துக் கலக்கி அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். கோமியத்தில் மஞ்சள் தூளைச் சிறிதளவு சேர்க்க வேண்டும். மஞ்சளைத் தூளாக வாங்காமல் கிழங்காக வாங்கி அதைப் பொடியாக்கி இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கலக்கிக் கொள்ளலாம். இந்தக் கரைசலில் அரை மணிநேரம் விதைகளை ஊற வைத்து நிழலில் உலர்த்த வேண்டும். அதேபோல வேப்ப இலை, நொச்சி இலை இரண்டில் ஏதாவது ஒன்றைக் காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது நாம் தயாராக வைத்திருக்கும் பாத்திரத்தில் கீழ்ப் பகுதியில் சிறிதளவு சாம்பலைப் பரப்பிக்கொள்ள வேண்டும். அதன் மேல் நொச்சி இலையைப் பரப்ப வேண்டும். அதன்மீது விதைகளைப் பரப்ப வேண்டும். விதைகளைப் பரப்பிய பின்னர் அதன் மீது மீண்டும் சிறிதளவு சாம்பலைப் பரப்ப வேண்டும். இந்த முறையைப் பயன்படுத்தி பூச்சிகள் தாக்காமல் நீண்டகாலம் விதைகளைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். அதற்காக அதிக வருடங்கள் அந்த விதை இருக்கும் எனச் சொல்ல முடியாது. முன்பே சொன்னதுபோல விதைகளின் ஆயுள்காலம் குறைவு. முடிந்தவரை ஓராண்டு காலம் வரைக்கும் அந்த விதைகளைச் சேமித்து வைக்க முடியும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஈஸ்வரிக்கு எதிராக மாறிய கோபி ராதிகா..பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், அழகு போல பொண்டாட்டி இருந்தாலும் கூத்தடிக்க வேற ஒரு பொண்டாட்டி தேவை என்று ஒரு…

6 hours ago

மீனா ராஜியை பிரிக்க திட்டம் தீட்டும் தங்கமயில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் படித்துக் கொண்டே வேலை பார்த்து நம்மலையும் படிக்க வைக்கிறார்…

6 hours ago

செட்டிநாடு ஸ்டைலில் பச்சைமிளகாய் சட்னி செய்து பாருங்கள்..!

நண்பர்களே உங்கள் வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான சமையல் சாப்பிட்டு விட்டு போர் அடைத்துவிட்டது அல்லவா..? வீட்டில் உள்ள அனைவரும்…

6 hours ago

‘ககனாச்சாரி’ (மலையாளம்) திரைப்பட விமர்சனம்

2050-ம் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. மழை வெள்ளத்தில் நிலப்பரப்புகள் மூழ்குவதோடு, ஏலியன்களின் படையெடுப்பு, அரசின் அடக்குமுறை, பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக…

6 hours ago

சரணடைந்தேன் சகியே – 27

27   “இந்த இரண்டு டாகுமென்டையும் டைப் செய்து பி.டி.எப்ல போட்டு வைங்க..” திவாகர் நீட்டிய பைல்களை வாங்கிய சஸாக்கியின்…

10 hours ago

ரம்யா போடும் மாஸ்டர் பிளான் .. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா காட்டம்மன் கோவிலில் பரிகாரம்…

10 hours ago