Categories: CinemaEntertainment

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாக்கியலட்சுமி சீரியல் ஈஸ்வரி.. என்ன படம்?

பாக்கியலட்சுமி சீரியல்  பார்க்காத இல்லத்தரசிகள் மிகவும் குறைவு என்று சொல்லும் அளவுக்கு அது பிரபலமாக உள்ளது. சீரியலின் முக்கிய கதாபாத்திரமான கோபியின் அம்மா ஈஸ்வரியாக நடித்து வருகிறார் ராஜலட்சுமி. கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா தன் கரு கலைந்ததற்கு மாமியார் ஈஸ்வரி தான் காரணம் என புகார் தெரிவித்தார்.



இதையடுத்து மனைவி ராதிகா பேச்சை கேட்டு அம்மா ஈஸ்வரியை வீட்டை விட்டு விரட்டிவிட்டார் கோபி. ராதிகா வீட்டில் இருந்து கிளம்பி பாக்கியா வீட்டிற்கு வந்துவிட்டார் ஈஸ்வரி. பெத்த புள்ள இப்படி செஞ்சுட்டானே என கவலையில் இருக்கும் ஈஸ்வரிக்கு ஆறுதலாக இருந்து வருகிறார் பாக்கியா.

தற்போது சீரியல் கோபி, ஈஸ்வரியை சுற்றியே நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜலட்சுமி ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா?



1982ம் ஆண்டு வெளியான மூன்று முகம் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருக்கிறார். இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் அலெக்ஸ் பாண்டியன் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவியாகத் தான் நடித்தார்.

80களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்தவர் தான் இந்த ராஜலட்சுமி. தற்போது படங்கள், சீரியல்களில் அம்மா, பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யின் திருப்பாச்சி, அஜித் குமாரின் வரலாறு, தனுஷின் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் அம்மாவாக நடித்திருக்கிறார். கடந்த 3 மூன்று ஆண்டுகளாக அவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. டிவி சீரியலில் பிசியாகிவிட்டார்.

பெரிய திரையில் பெரிய ரவுண்டு வந்த நடிகைகள் பலர் தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சின்னத்திரை தானே என்று மட்டும் குறைத்து மதிப்பிடக் கூடாது. சின்னத்திரை பிரபலங்களும் கை நிறைய அல்ல பை நிறைய சம்பாதிக்கிறார்கள். கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி தினமும் லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார். அப்படி என்றால் ராஜலட்சுமியின் சம்பளம் எவ்வளவாக இருக்கும் என பாக்கியலட்சுமி சீரியல் பார்ப்பவர்கள் வியக்கிறார்கள்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கே ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து சூப்பர் அப்டேட் இதோ!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். தேசிய படத்தில் மூலம் உலகம் அறியும் நடிகரான இவர் அதன்பிறகு…

2 mins ago

விஜய் டிவி குக் வித் கோமாளியில் செம கடுப்பில் உள்ள கோமாளிகள்.. ஏன்?

 விஜய் டிவியை பொறுத்த வரைக்கும் டிஆர்பிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது இணையவாசிகளின் கருத்து. ஒருவரை மக்கள் ரசிக்க ஆரம்பித்து…

4 mins ago

எண்ணெய் சருமத்தால் ரொம்பவும் சிரமப்படுகிறீர்களா..? உங்களுக்காக பெஸ்ட் 4 ஃபேஸ் பேக்..

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடிக்கடி சருமம்…

6 mins ago

நடிகர் ஸ்ரீகாந்துதை டோஸ் விட்ட மணிரத்னம்

இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2002-ல் வெளியான ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் ஸ்ரீ…

10 mins ago

கோவிலில் பிரசாதமாக தரும் பூ, மாலைகளை என்ன செய்யலாம் ?

நாம் கோவிலுக்கு செல்லும் போது பூ, பழம், தேங்காய், மாலை போன்ற பல பொருட்களை பிரசாதமாக நமக்கு தருவார்கள். பக்தர்கள்…

3 hours ago

மகாபாரதக் கதைகள்/கர்ணனின் ஜென்ம இரகசியம்

கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் உங்களுக்கு தெரியுமா ?மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம்…

3 hours ago