Categories: Samayalarai

சுவையான மாதுளம் பழம் அல்வா செய்வது எப்படி?

மாதுளம் பழம் நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க பெரிதும் உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அதே போல குடல் புண், வயிற்று புண் ஆகியவற்றை குணப்படுத்த இந்த மாதுளம் பழம் சாப்பிட்டு வரலாம். அந்த வரிசையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த மாதுளம் பழத்தை வைத்து இனிப்பு வகை செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இந்த நிலையில் சுவையான மாதுளம் பழம் அல்வா செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.



மாதுளம் பழம் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  • ஒரு கப் மாதுளம் பழம் (முத்துக்கள்)

  • கால் கப் கார்ன் ஃப்ளவர் மாவு

  • அரை கப் சர்க்கரை

  • கால் கப் பால்

  • மூன்று ஏலக்காய்

  • முந்திரி பருப்பு தேவையான அளவு

  • நெய் 2 டேபிள் ஸ்பூன்

  • கேசரி பவுடர் அரை டேபிள்ஸ்பூன்



சுவையான மாதுளம் பழம் அல்வா செய்வது எப்படி?

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மாதுளை பழம் முத்துக்களை பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • இப்போது ஒரு சிறிய கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

  • பிறகு அதே கடாயில் நாம் அரைத்து வைத்த மாதுளம் பழத்தை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். இப்போது இந்த மாதுளம் பழ விழுது கொதித்தவுடன் அதில் கான்பிளவர் மாவை சேர்த்து கிளறி விடுங்கள்.

  • நன்றாக கைவிடாமல் கிளறிக் கொண்டே இருந்தால் கெட்டி பதத்திற்கு திரண்டு வந்தவுடன் அதில் சர்க்கரை மற்றும் கேசரி பவுடர் சேர்த்து கலக்க வேண்டும்.

  • பிறகு ஏலக்காய் முந்திரி சேர்த்து கிளறி விடுங்கள். இப்போது அல்வா பதத்திற்கு மாறி வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.

  • அவ்வளவுதான் சுவையான மாதுளம் பழம் அல்வா தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த மாதுளம் பழம் அல்வாவை விரும்பி சாப்பிடுவார்கள்.



வீட்டுக் குறிப்பு:

  • சமையலறையில் எதிர்பாராமல் அடி பிடித்து கருகவிட்ட பாத்திரத்தை சுத்தம் செய்ய, பாத்ரூமை சுத்தம் செய்ய டாய்லட்டை சுத்தம் செய்ய வாஷ்பேசனை சுத்தம் செய்ய இந்த குறிப்பு உங்களுக்கு  ரொம்ப ரொம்ப பயனுள்ளபடி அமையும். முதலில் 1/2 கப் அளவு கோகோ கோலா ஒரு பவுலில் எடுத்துக்கோங்க. அதில் தூள் உப்பு 3 ஸ்பூன், துணி துவைக்கும் லிக்விட் 2 ஸ்பூன், பேக்கிங் சோடா 2 ஸ்பூன், போட்டு இந்த பொருட்களை எல்லாம் நன்றாக கலந்து விட்டு இதை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். வீட்டை சுத்தம் செய்வதற்கு பல வகைகளில் இந்த லிக்விடை பயன்படுத்தலாம்.

  • நீண்ட நாட்களாக பயன்படுத்தாத கடாய், அடிபிடித்த பாத்திரம் இதில் எல்லாம் இந்த லீக்விடை ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து ஒரு ஸ்டீல் நரை போட்டு  தேய்த்து எடுத்தால் உடனே சுத்தமாகிவிடும். அதேபோல உங்கள் வீட்டு வாஷ்பேஷன் டாய்லெட் இவைகளில் எல்லாம் இந்த லிக்விடை நன்றாக ஸ்பிரே செய்துவிட்டு, 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு தேய்த்து கழுவினால் அந்த இடமெல்லாம் பலிச் பலிச்சென மாறும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஸ்ருதியின் காலை பிடித்த ரவி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து,…

7 mins ago

தொழில்முனைவோர் வெள்ளையன் சுப்பையா சாதனை!

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் (TII) செயல் துணைத் தலைவரும், சோளமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கோ லிமிடெட் தலைவருமான…

9 mins ago

முதல் நாளிலே வசூலை வாரி கொடுத்த படங்கள்..

 எந்த நடிகர்கள் நடித்த படங்கள் அதிக வசூலை பெறுகிறதோ அவர்களை ஆட்ட நாயகன் ஆகவும், வசூல் மன்னனாகவும் ரசிகர்கள் மனதில்…

2 hours ago

தும்மல் பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? – இந்த சிம்பிள் டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

சளி மற்றும் தூசி போன்றவற்றால் பலருக்கும் தும்மல் வரும். சிலருக்கு காலை எழுந்தவுடனோ அல்லது குளிர்காற்று படும்போதோ, மாலை நேரத்திலோ…

2 hours ago

சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு வைட்டமின் E கேப்சூல்: உண்மையிலேயே ஆரோக்கியத்திற்கு நல்லதா?

வைட்டமின் ஈ என்பது கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்தாகும். இது ஆக்சிஜனேற்றப் பண்புகளுக்குப் பெயர் பெற்றது. சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை…

2 hours ago

தேவர் மகன் கதையை பற்றி கமல் விளக்கம்

கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் எத்தனையோ முக்கியமான திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவருக்கு என்றும் பெயர் சொல்லும் விதமாக அமைந்த படங்கள் இரண்டு.…

3 hours ago