சுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம்?

இந்தியாவில் இருக்கிற மிக முக்கியமான கலாச்சார பழக்கங்களில் ஒ்னறு தான் முகு்கிய சுப நாட்களில் வீட்டு வாசலில் மாவிலை கட்டி அலங்காரம் செய்வது என்பது. அதேபோல கோவில் மற்றும் பிற இடங்களிலும் முக்கியச் சடங்குகளில் ஒன்றாக மாவிலையில் மாலை கட்டி தோரணங்கள் கட்டும் பழக்கம் இருக்கிறது. அது ஏன் மாவிலை கட்டுகிறோம் என்ற காரணத்தை அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியாக தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? அப்படி மா மரத்துக்கு மட்டும் என்ன மாதிரியான ஆற்றல் இருக்கிறது என்பது பற்றி கட்டாயம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம். வாருங்கள்.

ஏன் மா இலைகள்

வேம்பு, அரசமரம் ஆகியவற்றுக்கும் ஆன்மீகத்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்தாலும் கூட முக்கிய நாட்களில் வீட்டின் வாயிலில் நாம் குறிப்பாக மா மரத்தின் இலைகளைத் தோரணமாகக் கட்டுவதற்கான காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இல்லவே இல்லை. அது ஏனென்றால் இந்து மதத்தைப் பொருத்தவரையில் மா மரம் என்பது புனிதமான மரமாகக் கருதப்படுகிறது.

கலசங்கள்

நீங்கள் நன்கு கவனித்தால் தெரியும். கோவில்களிலோ வீட்டிலோ பூஜையின் போது கலசங்களில் சுற்றுலும் 5 மா இலைகளைச் சொருகி வைப்பார்கள். அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தைத் தெளிப்பார்கள். இந்து மதத்தில் இது மிக முக்கிய சடங்காகப் பார்க்கப்படுகிறது.

கடவுள் அவதாரங்கள்

மாம்பழமும், மரமும் இலைகளும் பல கடவுள்களின் அவதாரங்களோடு இந்து மதத்தில் தொடர்பு படுத்தப்படுத்தப்படுகிறது. மாவிலைத் தோரணங்கள் கட்டுவது என்பது பார்வதி, சிவபெருமானின் பிள்ளைகளாகிய பிள்ளையார் மற்றும் முருகப் பெருமானை சுட்டிக் காட்டும் குறியீடு ஆகும். இவர்கள் இருவரும் இந்த மாமரம் தரும் கனிக்காகத் தான் சுற்றித் திரிந்தனர்.



மரபு

காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் இதை செய்து வருவதால் நாமும் ஏன் எதற்கு என்று காரணத்தைக் கேட்காமலேயே பின்பற்றத் தொடங்கிவிட்டோம். நம்மில் யாருமே ஏன் வீட்டு வாசலிலி மாவிலை தோரணம் கட்டகிறோம் என்பதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கவு இல்லை. ஆம். இதில் ஆன்மீக காரணங்களும் சடங்கு முறைகளும் இருக்கின்றன. அதேசமயம் அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது.

என்ன காரணம்?

மாவிலைகள் மிகவும் புனிதமான பொருளாக நம்பப்படுகிறது. அதேபோல் நம்முடைய வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியையும் வெளியேற்றிவிடும். வெளியிலிருந்து வீட்டுக்குள் விடாது என்ற நம்பிக்கையும் உண்டு. அதோடு இது பாசிடிவ் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிற ஆற்றல் கொண்டதால் தீமை விளைவிளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கிற ஆண்டி பாக்டீரியலாகப் பயன்படுகிறது.

சுப காரியங்களின் போது சுப காரியங்களின் போது மட்டுமல்ல பொதுவாக எல்லா நாட்களிலுமு் கூட கட்டலாம். திருமண வீடுகளில் கட்டும்போது மணப்பெண், மணமகனுக்கும் அவர்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கும் இது ஆசியை வழங்கவல்லது. கடவுள் அந்த வீட்டைக் காத்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் மாவிலைகள், மா மரம் ஆகியவை மதங்களுக்கான குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மாமரத்தின் கீழ் லிங்கம் இருப்பது போன்று குறியீடுகள் கூட உள்ளன. அதேபோல புத்த கலைகளில் பெரிதும் மாவிலை இருக்கும். புத்த மதத்தில் மா இலைக்கான குளியீடுகளும் அடையாளங்களும் நிறைய உண்டு.



ஸ்ரவஸ்தி கதை

புத்த கதைகளில் மா மரம் அறிவின் குறியீடாக காட்டப்படுகிறது. அதே போல் மாமரம், மா இலைகள் என்பவை மறு உற்பத்திக்கான அடையாளமாகவும் ஆண்மைத் தன்மைக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. இந்தியாவில் மகாலட்சுமியைக் குறிப்பதாக விளங்குகிறது. அது கெட்ட சக்திகளை விரட்டி நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

அறிவியல் காரணம்

வீட்டு முன் கட்டியிருக்கும் மாவிலைகளை நன்கு கவனித்துப் பாருங்கள். அது மற்ற இலைகளைப் போல சீக்கிரம் காய்ந்து போகாது. பசுமையை தன்னுள் அதிகமாக தக்க வைத்திருக்கும் ஒரு தாவரம். பொதுவாக நமக்கு நன்றாகத் தெரியும் பச்சை தாவரங்கள் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சிக் கொண்டு ஆக்சிஜனை நமக்குக் கொடுக்கும் என்று. அதனால் தான் வாசலிலேயே அதை தோரணம் கட்டிவிடுகிறோம். அது கட்டப்படும் இடத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்கும். அதேபோல் பச்சை நிறம் நம்முடைய மனதை பிரஷ்ஷாகவும் இலகுவாகவும் வைத்திருக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். இனியாவது நரியான காரணத்தை தெரிந்து கொண்டு வீட்டு வாசலில் மா இலை தோரணத்தைக் கட்டுங்கள்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

தமிழக பெண் தொழிலதிபர் -டிவிஎஸ் மோட்டார் துணை நிர்வாகி லக்‌ஷ்மி வேணு யார்?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசனின் மகளும், டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் கிளேய்ட்டன் (Sundaram - Clayton Limited…

2 hours ago

பதற்றத்தில் நடுங்கும் விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து…

2 hours ago

‘கோட்’ படத்தில் மறைமுகமாக வேலை பார்க்கும் ரெட் ஜெயண்ட்

விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் படப்பிடிப்பு…

4 hours ago

இந்த அழகு சாதனப் பொருட்களை பெண்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்!

அழகு என்பது வெறும் வெளித்தோற்றம் என்பதையும் மீறி ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை மற்றும் மனநிலையையும் பிரதிபலிக்கிறது. பெண்கள் சரியான அழகு…

4 hours ago

ஜூலை மாத ராசி பலன்கள் (மிதுனம், கடகம்)

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூரியன், சுக்கிரன்…

4 hours ago

த்ரிஷா ஒரு ஒட்டுண்ணி; இப்படியே போனால் தேர்தலில் விஜய் வெல்லவே முடியாது – சுசித்ரா பேச்சு

தமிழ் சினிமாவில் விஜய் மாஸ் ஹீரோவாக உருவாவதற்கு முன்னர் இருந்தே அவரைச் சுற்றி பல கிசு கிசுக்கள் பேசப்பட்டது. குறிப்பாக…

4 hours ago