Categories: CinemaEntertainment

சர்ப்ரைஸ் பண்ண முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை‌. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரூம் பிரச்னையை பத்தி நெனச்சு கவலைப்படாதப்பா என்று சொல்ல மனோஜ் ஏன் நீ உன் பொண்டாட்டியும் வீட்டை விட்டு வெளியே போக போறீங்களா என்று கேள்வி எழுப்ப முத்து நான் இந்த வீட்டுக்கு ஆசைப்படுகிறேன் என்று சொல்லிட்டு என்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பு பார்க்கிறான் என்று பதிலடி கொடுக்கிறார்.



பிறகு எங்களுக்கு ரூம் எல்லாம் வேண்டாம்.. நாங்க எங்கேயாவது ஒரு ஓரமா இருந்துக்குறோம் என்று சொல்ல விஜயா எப்பயாவது ஞானம் வந்துச்சே என்று சொல்கிறார். முத்து என்னால முடியும் போது நான் ரூம் கட்டுகிறேன் என்று சொல்ல ரோகிணி ஏற்கனவே போட்ட சப்பதமே இன்னும் முடியல அதுக்குள்ள இன்னொரு சபதத்தை போட்டுடாதீங்க என்று நக்கல் அடிக்க மீனா அவரே அவர் சொந்த பணத்துல ரூம் கட்டுவாரு என்று சபதம் போடுகிறார்.

 

இதனால் முத்து கோபமாகி மீனாவிடம் வந்து எதுக்கு என்னை கேட்காமல் சபதம் போட்ட என்று திட்ட நாம் அப்படி சொல்லலனா மாமா சும்மா இருக்க மாட்டாரு என்று சொல்ல முத்து நீ சொல்றதும் சரிதான் ஆனால் முதல் சபதமே முடியல அதுக்குள்ள இது பார்ட் 2 ஆ? எப்படி நம்மளால ரூம் கட்ட முடியும் என்று கேட்க உங்களால கண்டிப்பா முடியும் என்று மீனா ஊக்கம் கொடுக்கிறார்.



உடனே அப்படினா இனிமேல் மாசம் பணம் தர வேண்டாமா என்று மனோஜ் கேட்க பணம் தரவில்லை என்றால் வீட்டு செலவை எப்படி பார்க்கிறது என்று முத்து கேள்வி கேட்க அதான் அப்பாவோட பென்ஷன் பணம் வருதே என்று சொன்னதும் முத்து அப்போ அது கூட விட்டு வைக்க மாட்டியா என்று திட்டுகிறார்.

அடுத்து ரோகினி மனோஜை கூட்டிக்கொண்டு ஒரு கல்யாணம் பங்க்ஷனுக்காக ரெசார்ட் போக ஒரு பிளான் போட எதிர்பாராத விதமாக ஒரு பெரிய ஆர்டர் கிடைக்க மனோஜ் நீ மட்டும் அந்த கல்யாணத்துக்கு போயிட்டு வா என்று ஏமாற்றம் தருகிறார்.

 

அதன் பிறகு வீட்டுக்கு வரும் முத்து தங்களுடன் வந்து சர்ப்ரைஸ் கொடுத்து ரூம் கட்ட அடிக்கல் நாட்டப் போவதாக சொல்லி செங்கலை எடுத்து வர இதை பார்த்த விஜயா இப்படி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தா உங்க அறுபதாம் கல்யாணத்துக்கு தான் ரூம் கட்ட முடியும் என்று நக்கல் அடிக்க மீனா அதுவரைக்கும் நான் இந்த வீட்ல இருப்பேன்னு அத்தை ஆசீர்வாதம் பண்றதா நினைச்சுக்கிறேன் என்று பல்பு கொடுக்கிறார்.

பிறகு இருவரும் மொட்டை மாடியில் செங்கலை அடுக்கி வைத்து அழகு பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு முடிவடைகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-10

10 ‘‘ஆமாம், உன்னைக் கவிழ்ப்பதை தவிர எங்களுக்கு வேறு வேலை இல்லை பார். சரிதான் போடா.." வஜ்ரவேல் சொல்ல, அவன்…

9 hours ago

மருமகளை நம்பும் பாண்டியன்…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பி ஓவராக இடம் கொடுத்து வைத்திருக்கிறார். இதனால் தங்கமயிலும்…

9 hours ago

விஜயாவுக்கு வந்த பிரச்சனை – சிறகடிக்க ஆசை 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய சண்டே ஸ்பெஷல்…

9 hours ago

திருநெல்வேலி ஸ்பெஷல் மொச்சை மசாலா

திருநெல்வேலி என்றாலே எல்லாருடைய நினைவுக்கும் முதலில் வருவது அல்வா தான். ஆனால், இங்கு  ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று மொச்சை மசாலா.…

9 hours ago

தென்காசிப் பட்டணம் திரைப்பார்வை

விஜயகாந்த் நடிப்பதாக இருந்த படத்தில் அவர் வெளியேறி சரத்குமார் நடித்த படம் ஆக, காமெடி கலந்த காதல் கதையுடன் வெளியாகி…

9 hours ago

சரணடைந்தேன் சகியே – 20

20       “நாம் கோவிலில் வைத்து திரும்பவும் தாலி கட்டிக் கொள்ளலாமா சகி..?” முணுமுணுப்பாய் அவள் தோள்களில்…

13 hours ago