Categories: Serial Stories

சரணடைந்தேன் சகியே – 15

15

 

“ம்மா.. சீக்கிரம் வாங்க.. குட்டி பால் குடித்து முடிச்சிட்டான்..” அறையை நெருங்குகையில் சஸாக்கியின் சத்தம் கேட்டது..

அறையினுள் எட்டி பார்க்க சஸாக்கி கட்டிலில் வாசலுக்கு முதுகு காட்டி உட்கார்ந்திருந்தாள்.. எதிரிலிருந்த பாத்ரூமை பார்த்து கத்திக் கொண்டிருந்தாள்.

“மடியில் வைத்திரும்மா இதோ வந்துடேறேன்..” அன்னலட்சுமி பாத்ரூமினிள்ளிருந்து குரல் கொடுத்தாள்.

காலையில் கண்விழித்த உடனேயே சஸாக்கியை பார்க்க வேண்டும் போல் பாலகுமரனுக்கு தோன்ற, அவனது அறையிலிருந்து நடந்தபடி இரண்டாவது மாடிக்கு வந்தான்.. எதிரே கையில் காபி டீரேயுடன் வந்த கொண்டிருந்த சரண்யா அவனைக் கண்டதும் நின்றாள்..

குளித்து முடித்து முழு உடை, அலங்காரத்துடன் தான் பாலகுமரன் எப்போதும் தன் அறையை விட்டு வெளியே வருவான்.. இப்போதோ இரவு உடையும், கலைந்த தலையுமாக அவனை பார்த்ததும் சரண்யாவால் தன்னையே நம்ப முடியவில்லை..

அவன் முன் போய் காபி டிரேயை நீட்ட, கொஞ்சம் எரிச்சலாக அவளை பார்த்தவன் ஒற்றை விரலால் விலகி போகுமாறு சைகை காட்டி விட்டு சஸாக்கியின் அறை வாசலில் வந்து நின்றான்..

கலைந்த கூந்தல் முதுகில் படர்ந்து கிடக்க, கசங்கிய இரவு உடையுடன், மடியில் மகனுடன் பாத்ரூமை பார்த்துக் கத்திக் கொண்டிருந்தாள் அவள்..

சத்தமின்றி பாதங்களை எட்டெடுத்து வைத்து உள்ளே வந்தவன் பின்னிருந்து அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.. உச்சந்தலையில் முகம் பொருத்தி முத்தமிட்டு.. “குட்மார்னிங் சகி..” என்றான்..

திடுமென நடந்து விட்ட இந்த நிகழ்வில் திடுக்கிட்டு திரும்ப எண்ணியவள், அது முடியாமல் அவனது இறுக்கிய அணைப்பில் துவண்டாள்..

“ரூபன் என்ன சொல்றான்..?” உதடுகளால் அவள் கன்னம் உரசியபடி மனைவி மடியில் இருந்த மகனை இதமாய் வருடினான்..

“முதலில் என்னை விடுங்கள்..”

“ம்ஹூம்..” இன்னமும் இறுக்கினான்..

“குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் போது.. என்ன இது..?”

“நம்ம குழந்தைதானடா சகி.. அவன் ஒரு இடைஞ்சலா நமக்கு..?”

“நான் அப்படியா சொன்னேன்..?”

“அப்போ அப்படி இல்லையா..? பின்னே எப்படி..?” அவள் கன்னம் நிமிண்டினான்..
சஸாக்கிக்கு தலையிலடித்துக் கொள்ள தோன்றியது..

“முதலில் தள்ளிப் போய் அந்த சோபாவில் உட்காருங்க..”

“ம்.. இன்னும் ஒரு நிமிடம்..” விலக மனமில்லாமல் இன்னமும் அவளை இறுக்கி ஆர தழுவி அணைத்தபடி இருந்து விட்டு மீண்டுமொரு முறை உச்சியில் இதழ் ஒற்றி விட்டு விலகி சோபாவில் அமர்ந்தான்..
சஸாக்கிக்கு இப்போதுதான் சீராக மூச்சுவிட முடிந்தது..



“ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்..?”

“எப்படி..?”

அவள் கண்களை இறுக்கி மூடி தன்னை கட்டுப்படுத்தினாள்..

“கதவையும் திறந்து வைத்துக் கொண்டு.. இந்த மாதிரியா இன்டீசன்டாக நடந்து கொள்வீர்கள்..?”

“இன்டீசன்ட்..? கணவன் மனைவியை கட்டி அணைப்பதை இன்டீசன்ட் என்று எந்த ஊரில் சொல்லி வைத்திருக்கிறார்கள்..? ஜப்பானிலா..?”

“முறைக்காதே.. அதை விடு.. இது நம் வீடு.. இந்த இரண்டாவது, மூன்றாவது மாடிக்கு நம் அனுமதியின்றி யாரும் வரவே மாட்டார்கள்.. அப்படியும் கதவு திறந்திருப்பது உன் பிரச்சனை என்றால்.. இதோ கதவை மூடி விடலாம்..” சொன்னபடி எழுந்து அறைக் கதவை மூட போனான் பாலகுமரன்..

ஐய்யோ.. தலையை பிடித்துக் கொண்டு சஸாக்கி குனிய,

“இங்கே என்ன செய்கிறாய்..?” என்ற எரிச்சலான பாலகுமரனின் குரலில் திரும்பி பார்த்தாள்..

வாசலில் சரண்யா நின்றிருந்தாள்.. “காபி கொண்டு வந்தேன்..”
பாலகுமரன் ஒரு மாதிரி விழிக்க, சஸாக்கிக்கு கொஞ்சம் சிரிப்பு வந்தது..

“பர்மிசன் வாங்குனீங்களா சரண்யா..?” சத்தமாக கேட்க இப்போது சரண்யா விழித்தாள்..

“கா.. காபி கொண்டு வந்தேன் மேடம்.. அதுக்கு எதுக்கு பர்மிசன்..?”

சஸாக்கி பதில் சொல்லாமல் குறுநகையுடன் பாலகுமரனை பார்க்க, அவன்..

“எல்லாவற்றிற்கும் பர்மிசன் வாங்கிட்டுத்தான் வரணும்.. நீ போ..” என்றான்..
சரண்யா மௌனமாக உள்ளே வந்து டிரேயை டீப்பாயில் வைத்து விட்டு போக, அவள் பின்னாலேயே அறைக் கதவை பூட்டினான்.. அதே வேகத்தில் திரும்பி சஸாக்கியை நோக்கி வர, பாத்ரூம் கதவு திறந்து அன்னலட்சுமி வெளியே வந்தாள்..

“வாங்க தம்பி.. என்ன காலையிலேயே..?”

“ஹி.. ஹி.. சும்மா.. இவுங்களை பார்த்துட்டு போகலாம்னு..”

“ஓ.. இங்கே உட்கார்ந்து பாருங்கள் தம்பி..” அன்னம் கட்டிலில் மகளின் அருகே இடத்தை காண்பிக்க, பாலகுமரன் சந்தோசமாகி கட்டிலில் சஸாக்கி அருகே அவளை உரசியபடி அமர்ந்து கொண்டான்.. குனிந்து மகனை பார்க்கும் சாக்கில் சஸாக்கியின் மேல் தீற்றினான்..

“மம்மா குட்டியை தூக்கிக்கோங்க.. நான் பாத்ரூம் போகனும்..”

“கொண்டாம்மா..” அன்னம் குழந்தையை தூக்க, சஸாக்கி அவசரமாக எழுந்து கொண்டாள்..

“என்னிடம் கொடுங்க ஆன்ட்டி..” வசதியாக சம்மணமிட்டு அமர்ந்த கொண்டு, மகனை மடியில் வாங்கிக் கொள்பவனை ஓரக் கண்ணால் பார்த்தபடி பாத்ரூமுக்குள் நுழைந்தாள்..

சஸாக்கி மீண்டும் அறைக்குள் வந்த போது அங்கே அபிராமியும், கார்த்திகாவும் இருந்தனர்..

“மூஞ்சியில் கிலோ கிலோவா எண்ணெய் வடியுது.. இப்படியே காலங்கார்த்தாலே இங்கே வந்து நிக்கிறியேடா.. குளிக்கலையா..?”

“ம்.. இதோ.. போறேன்மா..” சொன்னபடி மகனின் கன்னத்தை வருடினான்..

“நானும் இன்னமும் குளிக்கலை.. குட்டியை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்..” முதல் நான்னு கை தூக்கும் பள்ளிக் குழந்தையாய் கை தூக்கி அறிவித்தாள் கார்த்திகா..



சஸாக்கியின் முகத்தில் தானாக புன்னகை வந்தது..

“குழந்தை நீங்களா..? குட்டியான்னு தெரியலை..” சொன்னபடி சோபாவில் அமர்ந்தாள்..

“நான் பரவாயில்லை, நீங்கதான் ஸ்கூலுக்கு போகும் ஸ்டூடன்ட் போல் தெரிகிறீர்கள்.. உங்கள் வயதென்ன..?”

கார்த்திகாவின் கேள்விக்கு சஸாக்கி இதழ் கடிக்க..

“வருகிற மார்ச்சில் இருபத்தியிரண்டு முடிந்து இருபத்தி மூன்று ஆரம்பம்மா.. அவள் உடல் வாகு அப்படி.. எப்போதும் சிறு பெண் போல் தெரிவாள்..” அன்னம் பதில் சொன்னாள்..

“ம்.. ரொம்பவும் ஒல்லியாக வேறு இருக்கிறார்களா.. குழந்தை ஒன்று குழந்தை வைத்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறது..” சொல்லிவிட்டு கார்த்திகா அண்ணன் மடியிலிருக்கும் குழந்தையை தன் மடிக்கு மாற்றிக் கொள்ளலாமா என யோசிக்க ஆரம்பித்தாள்..

திரும்பி பார்க்காவிட்டாலும் பாலகுமரனின் பார்வை தன்னை தொட்டு வருடுவதை உணர்ந்தாள் சஸாக்கி..

பார்வையை அறை வாசலுக்கு திருப்பிக் கொண்ட போது அங்கே தயக்கத்துடன் வந்து நின்ற சரண்யாவை கண்டாள்..

“என்ன வேண்டும் சரண்யா..?”

“வந்து கீழே யாரும் இல்லை.. தேடி பார்த்து விட்டு.. இங்கே வந்தேன்.. காபி டிரே இங்கே இருக்கிறது..”
இப்படி காலங்கார்த்தாலே எல்லோரும் ஒரே இடத்தில் கும்மியடிப்பீர்களென நினைக்கவில்லை.. என்பது போல் சொல்லாமல் சொன்னது அவள் குரல்..

“சரி.. சரி எல்லோரும் போய் குளித்து விட்டு சாப்பிட வாங்க..” அபிராமி எழுந்து கொள்ள, கார்த்திகாவும் அவள் பின் போனாள்..

மடியில் இருந்த குழந்தையை மென்மையாக தூக்கி தொட்டிலில் போட்டபடி.. “காலையில் காபியாவது குடித்தாயா..?” என சஸாக்கியை விசாரித்தான் பாலகுமரன்.

“சத்துமாவு கொடுத்தேன் தம்பி..” அன்னம் பதில் சொன்னாள்..

“ம்.. கொஞ்சம் உங்கள் மகளை கவனிங்க.. சைல்டு மேரேஜான்னு என்னை பிடிச்சுட்டு போய் ஜெயில்ல போட போறாங்க..” என்றபடி வாசலுக்கு நடந்தவன் நின்று சஸாக்கியின் கழுத்தை வருடினான்..

“இதோ இப்படி தூக்கிட்டிருக்கிற எலும்பையெல்லாம் உள்ளே அமுக்கனும்..” துருத்தி நின்ற அவள் கழுத்தெலும்பை பிடித்து காட்டி விட்டு போனான்..

சஸாக்கி முறைக்க, அன்னம் வந்த சிரிப்பை வாய் பொத்தி அடக்கினாள்..

“இதை எடுத்துட்டு போகவா மேடம்..” கேட்டு விட்டு உள்ளே வந்து காபி டீரேயை தூக்கி போனாள் சரண்யா..

ஆராய்தலாய் தன்னை நோண்டிய அவளது பார்வையை கவனித்தாள் சஸாக்கி..



What’s your Reaction?
+1
15
+1
15
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

தென்கைலாயத்திற்கு சிவன் வந்த சுவாரசிய கதை…

கோவை என்றாலே நம் நினைவுக்கு வருவது வெள்ளியங்கிரி மலை தான். இங்கு சுயம்புலிங்கமாக சிவன் வீற்றிருக்கிறார். பக்தர்கள் ஒரு அழகிய…

26 seconds ago

மகாபாரதக் கதைகள்/கொடி மரம் உருவான கதை…. தர்மருக்கு பாடம் கற்பித்த கிருஷ்ணர்..!

ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் நாம் கடவுளை வணங்கும் முன் தவறாமல் கொடிமரத்தையும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத் தான் செல்வோம். அது ஏன்…

4 mins ago

மாவட்ட கோவில்கள்:திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) கோயில்,

கைலாயத்தில் சிவன் வேதாகமத்தின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்து கொண்டிருந்தார். பார்வதி அதை சரியாகக் கவனிக்காததால், அவளை பரதவர் குலப் பெண்ணாக பிறக்குமாறு சபித்தார். இதனால்…

6 mins ago

நாள் உங்கள் நாள் (05.07.24) வெள்ளிக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூலை 05.07.24 வெள்ளிக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 21 ஆம்…

8 mins ago

இன்றைய ராசிபலன் (05.07.24)

இன்றைய ராசிபலன் ஜூலை 5, 2024, குரோதி வருடம் ஆனி 21 வெள்ளிக் கிழமை, சந்திரன் கும்பம், மீனம் ராசியில்…

10 mins ago

நீயில்லாமல் வாழ்வது லேசா!-14

14 ‘‘பேபி.. சஷ்டி.. சஷ்டிகா.." மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தும் மீளாதிருந்த அவளைப் பற்றி உலுக்க.. ஒரு நெடுமூச்சுடன் மயக்கத்தில்…

12 hours ago