Categories: CinemaEntertainment

கூட்டத்தில் ஒருத்தன் விமர்சனம்

பள்ளியில் முதல் பென்ஜ்ல இருப்பவர்களும், கடைசி பென்ஜ்ல இருப்பவர்களும் ஏதாவது ஒரு வகையில் தங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்வதைப் போல, நடு பென்ஜ்ல இருப்பவர்கள் தங்களை எந்தவிதத்திலும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல், இருக்கும் இடம் தெரியாமல் இருப்பது வழக்கம். இவர்களின் இந்த நிலை பள்ளியில் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த வாழ்விலும் இப்படி இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிடுவது தான் வழக்கம். இப்படிப்பட்ட ஆவேரேஜ் மாணவர்களாலும் சாதிக்க முடியும், மற்றவர்களைப் போல தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்ற கருத்தை சொல்லும் படம் தான் இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’.

கதையின் ஹீரோவான அதாவது நடு பென்ஜ் மாணவரான அசோக் செல்வன், நல்ல விஷயங்கள் செய்தாலும் மற்றவர்களிடம் திட்டு வாங்கும் ஆவேரேஜ் நபராக வாழந்து வருபவர், முதல் முறையாக ஒருவரிடம் பாராட்டு பத்திரம் பெறுகிறார். அவர் தான் ஹீரோயின் பிரியா ஆனந்த். மாநில அளவில் பிளஸ் டூவில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தவரான பிரியா ஆனந்தின் பாராட்டால் உற்சாகமடையும் அசோக் செல்வன், அவர் வாழ்க்கை முழுவதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து அவரை காதலிக்க தொடங்குகிறார். அதற்காக அவர் பயிலும் கல்லூரியிலேயே தானும் சேர்ந்து படிப்பவர், தனது காதலையும் பிரியா ஆனந்திடம் சொல்லிவிட, ”எதுவுமே சாதிக்காத உனக்கு ஏன் காதல்” என்று அவரது காதலை பிரியா ஆனந்த் உதாசினப்படுத்துகிறார்.



காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ள போகும் அசோக் செல்வன், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுவன் ஒருவனை காப்பாற்ற, அந்த சிறுவனின் அப்பாவான ரவுடி சமுத்திரக்கனி, அசோக் செல்வனின் காதல் கதையை கேட்டு அவருக்கு மறைமுகமாக உதவி செய்கிறார். அதன் மூலம், நிஜ ஹீரோவாகவும் அசோக் செல்வன், பிரியா ஆனந்தின் மனதில் நுழைந்து அவரது காதலையும் வென்றுவிட, அசோக் செல்வனின் இந்த போலி முகத்தை வெளிக்காட்டப் போவதாக ஒருவர் மிரட்டுவதோடு, அவர் போடும் திட்டத்தின் மூலம் அசோக் செல்வன், தனக்கு ஆதரவாக இருந்த சமுத்திரக்கனி, தனது காதல், பெற்றோர் என அனைத்தையும் இழந்து அனாதையாக நடுதெருவில் நிற்கிறார். அப்படி நடுதெருவில் நிற்பவர், தன்னாலும் மற்றவர்களை போல சாதிக்க முடியும் என்பதை நடத்திக்காட்டி, தன்னையும் ஒரு சாதனையாளராக இந்த சமூகத்திற்கு காட்டுவதே ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் கதை.

பாடமாக சொல்ல வேண்டிய கருவாக இருந்தாலும், இதை முழுக்க முழுக்க கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் டி.ஜே.ஞானவேல்.



ஒரு சில படங்களில் நடித்திருக்கும் அசோக் செல்வனுக்கு இந்த படம் முக்கியமான படம் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ள அவர், அசோக் செல்வன் என்ற நடிகராக எந்த இடத்திலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் ஆவேரேஜ் ஸ்டூடன்ட் அரவிந்தாக ரசிகர்கள் மனதில் பசை தடவி ஒட்டிக்கொள்கிறார்.

பிரியா ஆனந்த் எப்போதும் போல நடித்திருக்கிறார் என்று சொன்னாலும், ஓடும் பஸ்ஸில் ஏறுவது இறங்குவது என்று சில சிறு வித்தியாசங்களோடு நடித்திருப்பவர், சில இடங்களில் உடையில் கவர்சியும் காட்டியிருக்கிறார்.

எந்த வேடமாக இருந்தாலும் அதில் ஒட்டிக்கொள்ளும் நடிகரான சமுத்திரக்கனி, தனக்கு கிடைத்த சிறு வேடத்தை சிறப்பான வேடமாக்கியிருக்கிறார். காமெடிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் பாலசரவணனின், லைவான வசன உச்சரிப்பு அவ்வபோது சிரிக்க வைக்கிறது. “நாயையே இப்படி தேடுராங்களே, உன்ன உங்க வீட்ல தேட மாட்டாங்களா” என்று அவரது கல்லூரி தோழியை பார்த்து அவர் கேட்பது முதல், சமுத்திரக்கனி வீட்டை சரக்கு அடிக்க கேட்பது, என்று அனைத்தும் எளிமையாக இருந்தாலும் அவரது உச்சரிப்பில் காமெடிக் வசனங்களாக அமைந்துவிடுகிறது.

அனைவராலும் சாதிக்க முடியும், என்பது தான் படத்தின் கருவாக இருந்தாலும், அதற்கு இயக்குநர் ஞானவேல் திரைக்கதை அமைத்த விதமும், காட்சிகளும் கமர்ஷியல் காதல் படமாக்கிவிட்டது. ஆவேரேஜாக இருந்தால், நல்லது செய்தால் கூட இந்த உலகம் மதிக்காது என்பதை காட்டும் இயக்குநர் அதன் பிறகு அதே ஆவேரேஜ் மாணவர் போலியாக ஜெயித்தால் அந்த வெற்றி நிலையில்லாததாக இருக்கும் என்பதை விளக்குவதற்காக காதலையும், அந்த காதலுக்கு உதவும் ரவுடி கதாபாத்திரத்தையும் காண்பித்துள்ளார். ஆனால், அந்த இரண்டுமே கதையின் ஹீரோவான ஆவேரேஜ் மாணவரை காணாமல் போக செய்துவிடுவதோடு, ஆவேரேஜ் மாணவர்களாலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும், என்ற இயக்குநரின் கருவும் காணாமல் போய்விடுகிறது.



இறுதியாக படத்தை முடிக்க வேண்டும் என்று ஒரு பிளாஷ்பேக்கோடு, ஆவேரேஜ் மனிதரான அசோக் செல்வன் சாதித்தது போல காட்டி படத்தை முடித்திருக்கும் இயக்குநர் ஞானவேல், தயாரிப்பாளருக்காக தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு தான் சொல்ல வந்த விஷயத்தை லேசாக சொல்லிவிட்டு, இந்த ’கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை வியாபாட படமாக கொடுத்திருக்கிறார்.

இருப்பினும், உணவு வீணாக்கப்படுவதையும், அப்படி வீணாகும் உணவை கொண்டு பிறர் பசியை போக்கலாம், என்ற விஷயத்தை அழுத்தமாக சொல்லவில்லை என்றாலும், அதை வெள்ளித்திரையில் சொல்லிய இயக்குநர் ஞானவேலுக்கு அப்ளாஷ் கொடுக்கலாம்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-10

10 ‘‘ஆமாம், உன்னைக் கவிழ்ப்பதை தவிர எங்களுக்கு வேறு வேலை இல்லை பார். சரிதான் போடா.." வஜ்ரவேல் சொல்ல, அவன்…

9 mins ago

மருமகளை நம்பும் பாண்டியன்…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பி ஓவராக இடம் கொடுத்து வைத்திருக்கிறார். இதனால் தங்கமயிலும்…

12 mins ago

விஜயாவுக்கு வந்த பிரச்சனை – சிறகடிக்க ஆசை 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய சண்டே ஸ்பெஷல்…

15 mins ago

திருநெல்வேலி ஸ்பெஷல் மொச்சை மசாலா

திருநெல்வேலி என்றாலே எல்லாருடைய நினைவுக்கும் முதலில் வருவது அல்வா தான். ஆனால், இங்கு  ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று மொச்சை மசாலா.…

17 mins ago

தென்காசிப் பட்டணம் திரைப்பார்வை

விஜயகாந்த் நடிப்பதாக இருந்த படத்தில் அவர் வெளியேறி சரத்குமார் நடித்த படம் ஆக, காமெடி கலந்த காதல் கதையுடன் வெளியாகி…

20 mins ago

சரணடைந்தேன் சகியே – 20

20       “நாம் கோவிலில் வைத்து திரும்பவும் தாலி கட்டிக் கொள்ளலாமா சகி..?” முணுமுணுப்பாய் அவள் தோள்களில்…

4 hours ago