மாவட்ட கோவில்கள்:அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி

சோமாசுரன் என்னும் அசுரன், நான்கு வேதங்களையும் பிரம்மாவிடமிருந்து பறித்துச்சென்றான். அதனை திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் தாங்கள் இருந்த தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வேண்டித் தவமிருந்தன. அவற்றிற்கு காட்சி தந்த சிவன், தோஷம் நீக்கி அருளினார். வேதங்கள் வழிபட்டதால் “வேதச்சேரி” என்றழைக்கப்பட்ட தலம் பிற்காலத்தில், “வேளச்சேரி” என்று மருவியது. வேதஸ்ரேணி என்பது இத்தலத்தின் புராணப்பெயர்.



வீரபத்திரருக்கு தண்டாயுதம் என்ற உலக்கை போன்ற ஆயுதமே தரப்பட்டிருப்பது மரபு. இவரை நின்ற கோலத்திலேயே பார்க்க முடியும். ஆனால், சிவாம்சமான வீரபத்திரர், கைகளில் மான், மழு தாங்கி, அமர்ந்த கோலத்தில் இருப்பதை இக்கோயிலில் காணலாம். இவர் கன்னிப்பெண்களைக் காக்கும் தெய்வமாக அருளுகிறார். அசுரன் ஒருவனை அழிக்கச்சென்ற சப்தகன்னியர், தவறுதலாக ஒரு மகரிஷியை அழித்து விட்டனர். தங்களை அழிக்க ஏழு கன்னிகள் புறப்பட்டிருக்கும் செய்தியை அந்த அசுரனும் அறிந்து கொண்டான். முனிவரைக் கொன்ற தோஷம் ஒருபுறம், அசுரனின் மிரட்டல் மறுபுறமுமாக இருந்த வேளையில், சிவபெருமான், அவர்களைக் காக்க தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி வைத்தார்.

வீரபத்திரர் கன்னியர்களை காத்ததோடு, அசுரனையும் அழித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் சப்த கன்னியர் அருகில் வீரபத்திரர் காவல் தெய்வமாக இருக்கிறார். வீரபத்திரர், வலது காலை மடக்கி அமர்ந்திருக்கிறார். கைகளில் தண்டத்திற்கு பதிலாக உருத்ராட்ச மாலை மற்றும் மழு (கோடரி போன்ற ஆயுதம்) ஏந்தியிருக்கிறார். பீடத்தில் நந்தி இருக்கிறது. பவுர்ணமியில் இவருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனை நடக்கிறது. கன்னியரைக் காத்த கடவுள் என்பதால், பெண்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவித்து, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சொல்லி வேண்டிக்கொள்கிறார்கள். சப்தகன்னியரில் ஒருத்தியான சாமுண்டியை, செல்லியம்மனாக பாவித்து வழிபடுகிறார்கள். சப்தகன்னியர் சன்னதியை, “செல்லியம்மன் சன்னதி” என்றே அழைக்கின்றனர். வீரபத்திரர் எதிரே விநாயகர் இருக்கிறார்.

தண்டீஸ்வரர் எதிரேயுள்ள நந்தி, தலையைப் பணிவாக கீழே சாய்த்திருப்பது விசேஷமான அமைப்பு. அம்பாள் கருணாம்பிகை சன்னதியில் அப்பைய தீட்சிதர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சூரிய ஒளி தை முதல் தேதியில், சிவலிங்கம் மீது விழுகிறது. வேதங்களின் தோஷம் போக்கிய சிவன், இங்கிருப்பதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி “யோக தெட்சிணாமூர்த்தி” எனப்படுகிறார். இவரது பீடத்தில் நந்தி இருக்கிறது.



அற்ப ஆயுள் பெற்றிருந்த, தன் பக்தனான மார்க்கண்டேயரின் ஆயுளை எடுக்கச் சென்ற எமனை சிவபெருமான் எட்டி உதைத்தார். அவனது பதவியையும் பறித்தார். இழந்த பதவியைப் பெற எமன், பூலோகத்தில் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டான். அப்போது எமனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்து சிவன், “தண்டீஸ்வரர்” என்று பெயர் பெற்றார். இழந்த பதவி திரும்பக் கிடைக்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

சுவாமி சன்னதி கோஷ்டத்தில் துர்க்கையும், பிரகாரத்தில் இலட்சுமி, சரஸ்வதியும் உள்ளனர். ஒரே இடத்தில் நின்று மூன்று தேவியரையும் தரிசிக்கலாம். பிரகாரத்தில் உள்ள விநாயகர், வேத விநாயகர் என்றழைக் கப்படுகிறார். இவர் கைகளில் வேதங்களுடன் காட்சி தருகிறார். எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற தலம் என்பதால், இங்கு அறுபது, எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்து கொள்கிறார்கள்.

திருவிழா:

சித்ராபவுர்ணமி, ஆடி ஞாயிறு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம்.

வேண்டுகோள்:

ஆயுள் விருத்தி பெற, இழந்த பதவி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். கன்னிப்பெண்கள், சப்தகன்னியரையும், வீரபத்திரரையும் வணங்கிச் செல்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல் நிறைவேறிட சுவாமி, அம்பாள், வீரபத்திரருக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

கோவில் செல்லும் வழி : வேளச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பகுதிகளிலிருந்து ஆலயம் செல்ல ஆட்டோ வசதியும் உள்ளது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

’நேசிப்பாயா’ படத்தின் புரமோஷன் விழாவில் நயன்தாரா..எப்படி?

நடிகை நயன்தாராவை ஒரு திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்களிடம் முதலில் அவர் கூறும் நிபந்தனை எந்தவித புரமோஷனு க்கும் வர மாட்டேன்…

2 hours ago

மாரடைப்பு ஏற்படும் போது வலி எப்படி இருக்கும் ..? நெஞ்சு வலி தானா அல்லது என்ன வலி என்று எப்படி கண்டறிவது?

மாரடைப்பு என்பது பொதுவா க சுருக்சுருக்கென்று கூர்மையாக இருக்கும் வலி மட்டுமல்ல, மாறாக இது உடலில் பரவலான அசௌகரிய உணர்வையும்…

2 hours ago

ஜூலை மாத ராசி பலன்கள் (சிம்மம், கன்னி )

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில்…

2 hours ago

தயாரிப்பாளர் காலில் விழுந்த கேப்டன்.. ஏன்?பாவா லட்சுமணன் சொன்ன பிளாஷ்பேக்

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு…

2 hours ago

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தானா வீட்டுக்கு வர வேண்டுமா? அப்போ இத கண்டிப்பா பண்ணுங்க!

பொதுவாகவே ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நமது முன்னோர்கள் வாரத்தின் ஒவ்வொரு கிழமைகளிலும் எதைச் செய்ய வேண்டும், எதைச்…

6 hours ago

மகாபாரதக் கதை/மன்னரின் உதவி

பாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருதரப்பிலும் பல்லாயிரம் உயிர் துறக்கின்றனர். காயம் பட்ட பலர், தாகத்தால் துடிக்கின்றனர். மற்றும்…

6 hours ago