Categories: lifestyles

பாட்டியின் ரெசிபியால் வளர்ச்சி கண்ட ‘ஸ்வீட் காரம் காபி’-வெற்றி கதை

2015 ஆம் ஆண்டு, அது ஒரு தீபாவளி திருநாளில் வீட்டில் ஜானகி பாட்டியின் கைப்பக்குவத்தில் விதவிதமான பலகாரங்கள் சூடாகத் தயாராகும் தருணத்தை மிஸ் செய்தனர். இந்த சிறுவயது ஞாபகம் ஆனந்த் பரத்வாஜ் தனது மனைவியுடன் சேர்ந்து வேலையை விட்டுவிட்டு ‘ஸ்வீட் காரம் காபி’ நிறுவனத்தை தொடங்க வைத்தது.



ஒவ்வொரு தீபாவளியன்றும் எங்களது பாட்டி ஜானகியம்மாள் ஜாங்கிரி, முறுக்கு, மைசூர் பாகு என்று செய்து ஜமாய்ப்பார். பட்சணங்களை சுடும்போது ஏதாவது கதை சொல்லிக் கொண்டே சிறு பிள்ளைகளையெல்லாம் வேலை வாங்குவார் என்று நினைவு கூறுகிறார் ஸ்வீட் காரம் காபி நிறுவனத்தில் இணை உரிமையாளர் நளினி பார்த்திபன்.

ஆனந்தும் நளினியும் சேர்ந்து தங்களது பாட்டியம்மாளின் பதார்த்தங்களை உலகெங்கும் கொண்டு செல்ல முடிவு எடுத்தனர். பாட்டியை தங்களது நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டு தென்னிந்திய பலகாரங்களில் ஒரு டுவிஸ்ட் கொடுக்க நினைத்தனர். ஆனால் அவர்களது பயணம் சிரமம் நிறைந்ததாக இருந்தது. பல வங்கிகள் அவர்களுக்கு கடன் தர மறுத்து விட்டன. இந்த நிலையில் தங்களது சேமிப்பில் இருந்து ரூ.2000ஐ வைத்து தங்கள் வீட்டிலேயே ஒரு அறையில் தொழிலை தொடங்கினர்.

காலையில் பேப்பர் போடும் நபர்களிடம் துண்டு பிரசுரங்களை வீடுவீடாகக் கொடுக்க வைத்தனர். இந்த விளம்பரம் அவர்களுக்கு விரைவிலேயே கை கொடுக்க ஆரம்பித்தது. பலகார ஆர்டர்கள் வந்து குவியத் தொடங்கின. பாட்டியம்மாளின் பலகாரத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்தது.



பட்சணங்கள் தயாரிக்கும் போது நான்தான் மேற்பார்வை செய்வேன். எதிலும் காம்ப்ரமைஸ் செய்ய மாட்டேன். எல்லாவற்றையும் அன்போடும் அக்கறையோடும் செய்ய சிறந்த மூலப் பொருட்களை தருவேன். எனது சொந்தக் குடும்பத்துக்குத் தயார் செய்வது போல செய்வோம் என்கிறார் ஜானகி பாட்டி. அவருககு வயது 82. ஆனாலும் எறும்பைப் போல சுறுசுறுப்பாக செயல்படுகிறார். பாட்டிக்கு எம் எஸ் தோனி பற்றி இன்ஸ்டாகிராம் ரீல்களை தயாரித்து பகிர்வதில் ரொம்பவே ஆனந்தம்.

எனக்கு இந்த தொழி்ல் மறுபிறவி எடுத்தது போல இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார் ஜானகி பாட்டி. ஜானகி பாட்டியின் எனர்ஜி உண்மையிலேயே வியக்க வைக்கும். தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரை பாராட்டுவதில் ஆகட்டும், லேட்டஸ்ட் ஆப்கள் பற்றி கற்றுக் கொள்வதில் ஆகட்டும் அவரது ஆர்வம் நிலை கொள்ளாது என்று நளின் கூறுகிறார். ஸ்வீட் காரம் காபி நிறுவனத்தின் தயாரிப்புகள் இப்போது உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனையில் சக்கைப் போடு போடுகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

அகல்விளக்கு… வெற்றிலை தீபம் ஏற்றலாமா?

தீபம் வீட்டிலும், ஆலயத்திலும் ஏற்றக்கூடிய ஒன்று. ஒரு இடத்தில் இருக்கும் இருளை நீக்கி அங்கு வெளிச்சம் வரவே தீபம் ஏற்றுகிறோம்.…

2 hours ago

மகாபாரதக் கதைகள்:பொறாமையினால் ஏற்படும் துன்பம்

பாண்டுவின் மனைவியர்களான குந்தி, மாதுரி இருவரும் ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். தனது ஓரகத்திகளுக்குப் பிள்ளைப் பேறு உண்டாகியும், தனக்கு உண்டாகாததை…

2 hours ago

மாவட்ட கோவில்கள்:பூவராக சுவாமி திருக்கோவில்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருக்கோயிலாகும். பெருமாளின் தசாவதாரங்களில்…

2 hours ago

நாள் உங்கள் நாள் (29.06.24) சனிக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூன்  29.06.24 சனிக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 15 ஆம்…

2 hours ago

இன்றைய ராசி பலன் (29.06.24)

இன்றைய ராசிபலன் ஜூன் 29, 2024, குரோதி வருடம் ஆனி 15, சனிக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார்.…

2 hours ago

நீயில்லாமல் வாழ்வது லேசா!-8

8 ‘‘யார் அவர்?" சஷ்டிகா எதிர்பார்த்த கேள்வியை வி.கே.வி கேட்டிருந்தான். அதுவும் நேரடியாக அவள் அறைக்கே வந்து கேட்டான். முதலில்…

14 hours ago