Categories: Samayalarai

டீ, காபியுடன் ருசிக்க சுவையான ரிங் முறுக்கு செய்யலாம் வாங்க…

என்ன தான் மூன்று வேளை ருசியான உணவு சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் கடித்து சாப்பிடும் தின்பண்டத்தின் ருசியே தனித்துவமானது. வடை, போண்டா, பஜ்ஜி, முறுக்கு என பல தின்பண்டங்கள் கிடைத்தாலும் ரிங் முறுக்கு போன்ற நொறுக்குத் தீனியுடன் டீ குடிக்கும் போது வாயில் சுவைக்ககூடிய காரம்… அடடே வார்த்தைகளால் விவரிக்க முடியாத சுவையாகும். ரிங் முறுக்கு கர்நாடகாவில் கொடுபலே என்று அழைக்கப்படுகிறது. காற்று புகாத டப்பாவில் 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். கார சாரமா மொறுமொறுப்பாக இருக்கும். வெளியே இதை வாங்க நினைக்கும் போது புதிதாக தயாரித்ததா அல்லது நல்ல எண்ணெய்-ல் சுட்டதா போன்ற சந்தேகங்கள் வரும். எனவே வீட்டிலேயே கொடுபலே செய்து பார்ப்போம்.



  • அரிசி மாவு

  • மைதா

  • சிரோட்டி ரவை

  • கடலெண்ணெய்

  • துருவிய தேங்காய்

  • சீரகம்

  • பொட்டுக் கடலை

  • ஓமம்

  • உள்ளூர் மிளகாய்

  • பைடகி மிளகாய்

  • தண்ணீர்

  • பெருங்காயத் தூள்



 செய்முறை

  • பெரிய பாத்திரத்தில் 200 கிராம் அரிசி மாவுடன் மூன்று ஸ்பூன் மைதா சேர்க்கவும். அடுத்ததாக பேனில் எட்டு ஸ்பூன் சிரோட்டி ரவை போட்டு எண்ணெய் ஊற்றாமல் வறுக்கவும். ரவையின் நிறம் மாறாமல் நறுமணம் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு அதை மாவுடன் சேர்த்து கலக்கவும்.

  • இப்போது அரை குழிக்கரண்டு அளவிற்கு சூடுபடுத்திய கடலெண்ணெய்யை மாவுடன் சேருங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள்.

  • சின்ன ஜாரில் அரை மூடி துருவிய தேங்காய், அரை டீஸ்பூன் சீரகம், ஐந்து ஸ்பூன் பொட்டுக்கடலை, காரத்திற்காக நான்கு உள்ளூர் மிளகாய், நிறத்திற்காக நான்கு பைடகி மிளகாய் மற்றும் 50 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைக்கவும்.

  • இதை மாவில் போட்டு கால் டீஸ்பூன் ஓமம், அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

  • மாவை ஊறவிட்டால் புளித்துவிடும். எனவே உடனடியாக கோலி சைஸிற்கு உருண்டை பிடித்து உருட்டி ரிங் வடிவத்திற்கு மாற்றி வறுக்க தொடங்கலாம்.

  • தண்ணீர் அதிகமாக ஊற்றி மாவு புளித்துவிட்டால் வறுக்கும் போது எண்ணெய் அதிகமாக இழுக்கும். மேலும் ரிங் முறுக்கு மொறுமொறுப்பாக வராது.

  • நீங்கள் உருட்டிய மாவு சப்பாத்தி மாவின் பதத்திற்கு வர வேண்டும்.

  • மிதமான சூட்டில் 7-8 நிமிடங்கள் இந்த ரிங் முறுக்கை சமோசா போல வறுக்கவும்.

  • தீயை அதிகமாக வைத்து வறுக்கும் போது வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே சரியே வேகாமலும் இருக்கும். இந்த தவறை செய்யாதீர்கள்.



வீட்டுக் குறிப்பு

நீங்கள் உருளைக்கிழங்குச் சமைப்பதாக இருந்தால் அதனுடன் சேர்த்து கொஞ்சம் ஓமம் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து உருளைக்கிழங்கு கறி தயாரித்தால் நாலு ஊருக்கு அதன் மணம் ஆளைத் தூக்கும், மேலும் உருளைக்கிழங்கின் மூலம் ஏற்படும் வாய்வு நீங்கி செரிமானம் அதிகரிக்கும்.

சுவாச பிரச்சனைகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்பவர்கள் தூதுவளை பூவை பசும் பாலில் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி பருகினால் நோயின் தீவிரம் குறையும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஸ்ருதியின் காலை பிடித்த ரவி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து,…

14 mins ago

தொழில்முனைவோர் வெள்ளையன் சுப்பையா சாதனை!

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் (TII) செயல் துணைத் தலைவரும், சோளமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கோ லிமிடெட் தலைவருமான…

16 mins ago

முதல் நாளிலே வசூலை வாரி கொடுத்த படங்கள்..

 எந்த நடிகர்கள் நடித்த படங்கள் அதிக வசூலை பெறுகிறதோ அவர்களை ஆட்ட நாயகன் ஆகவும், வசூல் மன்னனாகவும் ரசிகர்கள் மனதில்…

2 hours ago

தும்மல் பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? – இந்த சிம்பிள் டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

சளி மற்றும் தூசி போன்றவற்றால் பலருக்கும் தும்மல் வரும். சிலருக்கு காலை எழுந்தவுடனோ அல்லது குளிர்காற்று படும்போதோ, மாலை நேரத்திலோ…

3 hours ago

சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு வைட்டமின் E கேப்சூல்: உண்மையிலேயே ஆரோக்கியத்திற்கு நல்லதா?

வைட்டமின் ஈ என்பது கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்தாகும். இது ஆக்சிஜனேற்றப் பண்புகளுக்குப் பெயர் பெற்றது. சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை…

3 hours ago

தேவர் மகன் கதையை பற்றி கமல் விளக்கம்

கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் எத்தனையோ முக்கியமான திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவருக்கு என்றும் பெயர் சொல்லும் விதமாக அமைந்த படங்கள் இரண்டு.…

3 hours ago