Categories: CinemaEntertainment

சம்பளத்தை திடீரென உயர்த்திய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்துடன் இணையும் கூலி படத்திற்காக தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சில முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக லோகேஷ் கனகராஜ் சம்பளம் பேசியுள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மாநகரம் படத்தில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜிற்கு, கைதி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இதன்பின்னர் தனது 3 ஆவது படத்திலேயே விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது.



இந்த படத்தை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்தின் மூலமாக கமல் மிகப்பெரும் கம்பேக்கை கொடுத்தார். விக்ரம் படத்தை பாராட்டி ஹிந்தி சினிமாவிலும் பல முன்னணி ஹீரோக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடித்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். லியோ படத்திற்கு கலவை விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

சுமார் ரூ. 650 கோடிக்கு தியேட்டர் வெளியீட்டில் லியோ திரைப்படம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் உடன் கூலி என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார்.

ரஜினிகாந்தை பல்வேறு இயக்குனர்கள் தங்களது படங்களில் வித்தியாசமாக காட்டினாலும், லோகேஷ் கனகராஜின் மேக்கிங்கை சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் தனது சம்பளத்தை பல மடங்கு லோகேஷ் கனகராஜ் உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது கூலி படத்திற்காக சுமார் 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக அவர் இயக்கிய லியோ படத்திற்கு ரூபாய் 20 கோடி சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளிவந்தன. தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்கள் கூட ரூ.60 கோடி சம்பளம் பெற்றதில்லை என்று லோகேஷ் கனகராஜ் குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஈஸ்வரிக்கு எதிராக மாறிய கோபி ராதிகா..பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், அழகு போல பொண்டாட்டி இருந்தாலும் கூத்தடிக்க வேற ஒரு பொண்டாட்டி தேவை என்று ஒரு…

8 hours ago

மீனா ராஜியை பிரிக்க திட்டம் தீட்டும் தங்கமயில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் படித்துக் கொண்டே வேலை பார்த்து நம்மலையும் படிக்க வைக்கிறார்…

8 hours ago

செட்டிநாடு ஸ்டைலில் பச்சைமிளகாய் சட்னி செய்து பாருங்கள்..!

நண்பர்களே உங்கள் வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான சமையல் சாப்பிட்டு விட்டு போர் அடைத்துவிட்டது அல்லவா..? வீட்டில் உள்ள அனைவரும்…

8 hours ago

‘ககனாச்சாரி’ (மலையாளம்) திரைப்பட விமர்சனம்

2050-ம் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. மழை வெள்ளத்தில் நிலப்பரப்புகள் மூழ்குவதோடு, ஏலியன்களின் படையெடுப்பு, அரசின் அடக்குமுறை, பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக…

8 hours ago

சரணடைந்தேன் சகியே – 27

27   “இந்த இரண்டு டாகுமென்டையும் டைப் செய்து பி.டி.எப்ல போட்டு வைங்க..” திவாகர் நீட்டிய பைல்களை வாங்கிய சஸாக்கியின்…

12 hours ago

ரம்யா போடும் மாஸ்டர் பிளான் .. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா காட்டம்மன் கோவிலில் பரிகாரம்…

12 hours ago