மாவட்ட கோவில்கள்:அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கவுரிவாக்கம்

ருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், சென்னை மாவட்டம், கவுரிவாக்கத்தில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம் தோன்றியது. அப்போது இங்குள்ள பக்தர் ஒருவரின் கனவில் “பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை செய்” என்று அசரீரி ஒலித்தது. அதன்படி ஒரு சிலையைத் தேடிப் போனபோது, வித்தியாசமாக ஒரே நேர்கோட்டில், ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைத்தது.



இதனையடுத்து பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஞ்சமுக அனுமனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீவினைகளைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள்.



பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும். ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான் உங்களின் எல்லா கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய (பஞ்சமுக) அனுமன்.

மூன்றுநிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் கூடிய அனுமன் சன்னதிக்கு அருகில் விஜய விநாயகர் வீற்றிருக்கின்றார்.

அனுமனின் ஒவ்வொரு முகத்திற்கும் உரிய தனிச்சிறப்பாக, வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி என தனித்தனியே எல்லா விசேஷங்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

தடைப்பட்ட காரியங்கள் நடக்கவும், திருமணப் பேறு, குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்குள்ள அனுமனை வேண்டிக் கொள்கின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் மட்டைத் தேங்காய்களை கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

கோவில் செல்லும் வழி :

இத்தலம் சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் உள்ள கௌரிவாக்கத்தில், பழனியப்பா நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-15

15 மறுநாள் கண்விழித்த உடனேயே வேறு இடத்தில் இருப்பதை உணர்ந்துகொண்ட சஷ்டிகா, சட்டென எழுந்து அமர்ந்தாள். "என்னடா பாப்பா எழுந்து…

1 hour ago

புருஷனை தன் கைக்குள் போட்ட தங்கமயில்…..பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில், புருஷனை தன் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றுமே…

1 hour ago

நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்…

2 hours ago

’7ஜி’ (7G) திரைப்பட விமர்சனம்

ரோஷன் பஷீர் - ஸ்முருதி வெங்கட் தம்பதி தனது மகனுடன் அடுக்குடிமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள். தனது நீண்டநாள் சொந்த…

2 hours ago

சரணடைந்தேன் சகியே – 25

25       “அம்மா நான் போயிட்டு வர்றேம்மா..” சஸாக்கி வேலைக்கு கிளம்பிவிட்டாள்.. அன்னத்திற்குத்தான் மிகுந்த கவலை.. மகள்…

5 hours ago

ஈஸ்வரியை தூக்க வரும் போலீஸ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா அப்செட்…

6 hours ago