மகாபாரதக் கதைகள்/மகாபாரத இதிகாசகங்களிலிருந்து நாம் கற்று கொண்ட பாடம்?

1) எத்தனைதான் நீதிக்கும், நேர்மைக்கும், நாணயத்திற்கும், கட்டுப்பட்டு இருந்தாலும் தெரியாத விஷயத்தில் ஈடுபடாதே. தாயக்கட்டை சரியாக ஆட தெரியாமல் யுதிஷ்டிரன் அனைத்தையும் இழந்து நின்றது இதற்கு ஒரு சரியான உதாரணம்.



2) கடவுளிடம் கோரிக்கை வைக்கும் பொழுது அவன்மேல் முழு நம்பிக்கை வையுங்கள் பூரண சரணாகதி!கம்பிளட் சரண்டர்!. கௌரவ சபையிலே துச்சாதனன் திரௌபதி வஸ்திராபரணம் செய்கிறான். அப்பொழுது அவள் தன்மானம் போகப் போகிறது என்ற பயத்தில், மார்பகங்கள் மேல் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு கண்ணனிடம் மன்றாடுகிறார். கண்ணன் உதவவில்லை. சிறுது நேரம் கழித்து இரண்டு கைகளையும் மார்பகங்களின் மேல் இருந்து எடுத்து கண்ணனிடம் முழுவதும் சரணாகதி அடைகிறாள். இப்பொழுது கண்ணன் உதவுகிறான்.

3) நெருங்கிய நண்பன் ஆனாலும் உதவி என்று கேட்கும்பொழுது, பவ்வியமாக, மரியாதையாக, அணுகு! அவன் உதவுவான். குருஷேத்திரப் போர் உறுதியாகி விட்ட பின் கிருஷ்ணனிடம் உதவி கேட்க துரியோதனன் மற்றும் அர்ஜுனன் சொல்கிறார்கள். கண்ணன் துயில் கொண்டிருக்கிறான். துரியோதன் எகத்தாளமாக கண்ணன் தலைமாட்டில் அமர்கிறான். அர்ஜுனன் கைகூப்பி கண்ணன் காலடியிலேயே நிற்கிறான். துயில் எழுந்த கண்ணன் முதலில் பார்ப்பது அர்ஜுனனை. அடுத்தது பார்ப்பது துரியோதனனை. முதல் வரம் விஜயனுக்கு கொடுக்கப்படுகிறது அவன் கண்ணனையே கேட்கிறான். துரியோதனனுக்கு கிட்டியது கண்ணனின் படைகள் மட்டுமே. கண்ணுக்கு முன்னால் அவன் படைகள் எம்மாத்திரம்

4) ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன?, நண்பன் தவறு செய்யும் பொழுது அவனை திருத்துவது! அவனை மேலும் மேலும் உசுப்பேதுவ தல்ல! துரியோதனன் கட்டுப்பட்டது கர்ணன் வார்த்தைகளுக்கு மட்டுமே. கர்ணன் துரியோதனனுக்கு சரியான அறிவுரை சொல்லி இருந்தால் குருசேத்திர யுத்தம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. நாம் தவறு செய்யும் போதும் நம் தவறை சுட்டிக் காட்டும் நல்ல நண்பனை தேர்ந்தெடு.

5) ஒரு விஷயத்தை அரைகுறையாக அறிந்துகொண்டு முழுவீச்சில் இறங்காதே இறங்கினால் தோல்வி நிச்சயம். சக்கர வியூகத்தை பற்றி உள்ளே நுழையும் திறமை மட்டுமே கொண்டிருந்த அபிமன்யு விற்கு ஆன கதி நாம் அனைவரும் அறிந்ததே.



6)Men will always be men. மனைவியாய் துரோபதி இருந்தும் அனைத்து பாண்டவர்களுக்கும் மாற்று மனைவிகள் உண்டு.

7) தூதுவனாய் வந்த கண்ணனுக்கு கௌரவர்கள் அரண்மனையில விதவிதமான, ருசியான, உணவு இருந்தும் அவன் விரும்பி சாப்பிட்டது விதுரன் வீட்டு கீரையை.அன்புக்கு முன்னால் அனைத்தும் அடிபணியும்.

8) உன் வீட்டு உணவை உண்டு உன்னை பெருமைப்படுத்தி பேசி உன் அழிவு தான் என் வாழ்க்கை குறிக்கோள் என்று இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள். சிரித்து பேசுபவர்கள் எல்லாம் நண்பர்கள் அல்ல! உதாரணம் சகுனி நல்ல அறிவுரை கூறுபவர்கள் அனைவரும் உனக்கு எதிரியும் அல்ல! உதாரணம் விதுரன்

9) தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்வோருக்கு வெற்றிக்கனி கிட்டவே கிட்டாது. உதாரணம் கர்ணன்.

10) பத்தினி சபதம் பலிக்கும். உதாரணம் துரோபதி.

11) போர் என்று வந்துவிட்டால் எதிரில் யார் உள்ளார்கள் என்று பார்க்காதே!. போரின் குறிக்கோள் வெற்றி மட்டுமே.

 



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

7 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

7 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

7 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

7 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

11 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

11 hours ago