Categories: lifestylesNews

“என் வாக்கு என் உரிமை” நம் ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்!

ஜனநாயக திருவிழா என்றழைக்கப்படும் தேர்தல் இந்தியாவில் வரும் 19ஆம் தேதி முதல் பல கட்டங்களாக நடைபெறுகிறது. நாட்டின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் சுமார் 50 நாட்கள் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து அரசியல்வாதிகள் வீதி வீதியாக அழைந்து வாக்கு சேகரித்து தேர்தலை பாதுகாப்பாக நடத்திட அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்படுவது என அனைத்துமே நீங்கள் செலுத்தும் ஒற்றை வாக்கிற்காக… வாக்களிப்பதன் அவசியத்தை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.



இந்திய போன்ற ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் அதிகாரம் என்பது முக்கிய அம்சமாகும். சுமார் 97 கோடிக்கு வாக்களிக்க தகுதியானவர்கள் என்றாலும் இதில் பாதிக்கும் குறைவான நபர்களே வாக்கு செலுத்துவதில் ஆர்வமாக உள்ளனர். 2019 மக்களவைத் தேர்தலில் 67.11 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்திய தேர்தல் வரலாற்றில் இது அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.

18 வயதை பூர்த்தி செய்தவர்கள் வாக்களிக்க உரிமை உண்டு என்ற நிலையில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. செலுத்தப்படும் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கானது என்பதால் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு நல்ல விஷயமாகும்.

வாக்கு செலுத்துவதற்கான முக்கிய காரணங்கள்

என் வாக்கு என் உரிமை

இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. சட்டமன்றங்களும், நாடாளுமன்றங்களும் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டப்படி வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருப்பது நமது அதிர்ஷ்டம். இந்திய அரசியலமைப்பு நமக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நமக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களிலாம்.



மாற்றத்திற்கான வாக்கு

நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. அரசாங்கத்தின் மீது உங்களுக்கு அதிருப்தி இருந்தால் மாற்றத்தை ஏற்படுத்தவும் புதிய அரசாங்கம் அமைந்திடவும் நீங்கள் வாக்களிக்கலாம்.  ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறினால் அதே கட்சி இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். நாட்டில் மோசமான நிர்வாகமே தொடர்ந்தால் அது மக்களின் தவறாகும்

ஒவ்வொரு வாக்கும் முக்கியம்

கோடிக்கணக்கான நபர்கள் வாக்கு செலுத்தும் நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய ஒரு வாக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைக்க கூடாது. ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. “எனது வாக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தாது” என்ற எண்ணத்திதை விடுவித்து கோடிக்கணக்கான நபர்களில் எனக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு என நினைத்து வாக்கு செலுத்தும் போது மாற்றம் ஏற்படும். வாக்கு செலுத்துவது ஒவ்வொரு மனிதனின் பொறுப்பாகும்.

நோட்டா

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது திருப்தி இல்லையென்றாலும் வாக்காளர்கள் வாக்களிப்பதை இந்திய அரசு சாத்தியமாக்கியுள்ளது. NOTA என்பது மேலே உள்ள எதுவும் இல்லை என்பதைக் குறிக்கிறது. மேலும் இது எந்தவொரு வேட்பாளர்களாலும் திருப்தி அடையாத நபர்களுக்கான இடமாகும். நோட்டா பொத்தானை அழுத்தினால் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் நிர்வாகம் செய்ய பொறுத்தமானவர்கள் அல்ல என்று அர்த்தம். நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தால் இரண்டாவதாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ-17

17 " காஸ்மெடிக் சர்ஜரி " மதுரவல்லி முணுமுணுத்தாள் . " அ ...அப்படின்னா ? " சங்கரவல்லியின் கிராமத்து மூளைக்கு எட்டாத விசயங்கள் இவை . " ப்ளாஸ்டிக் சர்ஜரி கேள்விப்பட்டிருப்பீர்களே அம்மா ? முகத்தை  ,உடலை…

4 hours ago

யூடியூப்பர் இர்பான் மீது நடவடிக்கை – தமிழ்நாடு மருத்துவத்துறை .

தனக்கு பிறக்கப்போகும் குழந்தை தொடர்பாக வெளிநாட்டில் ஸ்கேன் செய்து பார்த்து வீடியோ வெளியிட்ட யூடியூப்பர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க…

4 hours ago

வீட்டில் குடைமிளகாய் செடி வளர்ப்பது எப்படி.?

குடைமிளகாய் என்று அழைக்கப்படும் கேப்ஸிகம்ஆனது பயிரிடப்பட்டு விற்பனைப்படுத்தப்படும் ஒன்றாகும். இது பல்வேறு வகையான சமையலுக்கு பயன்படுகிறது. மேலும் இது உணவிற்கு…

4 hours ago

பூவே உனக்காக பட ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்

இன்று தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிமுகத்தால் சினிமாவில் நுழைந்து…

4 hours ago

சாகர் ரத்னா ஓட்டல் – இது ஜெயராம் பனன் வெற்றிக் கதை!

புதுமையான யோசனைகளாலும், கடின உழைப்பாலும் கோடீஸ்வரர்களாக முன்னேறிய பல தொழில்முனைவோரின் கதைகளை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பிரபல தென்னிந்திய…

6 hours ago

சிட்டியின் பிளானுக்கு ஆப்பு வைத்த முத்து-சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சத்தியா…

6 hours ago