Categories: CinemaEntertainment

முத்துவை மாட்டிவிட்ட ரோகினி…சிறக்கடிக்க ஆசை அப்டேட்

இன்றைய எபிசோட்டில் ரவி இந்த விஷயத்தை இப்போது பேச வேண்டாம் என ஸ்ருதியின் அம்மாவிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவரோ தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். அந்த நேரத்தில் சமையல் அறையில் செய்த உணவு கருகி விட்டதாக தகவல் வர ரவி ஸ்ருதி அம்மாவை திட்டிவிட்டு அங்கிருந்து ஓடி விடுகிறார்.

அப்போ அங்கு வரும் ஹோட்டல் ஓனர் உன்னிடம் திறமை இருக்கு நீ நல்லா சமைக்கிற அப்படிங்கறதுக்காகதான் உன்னை வேலையில் வச்சிருக்கேன். அதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு இப்படி யாரும் ஹோட்டலில் பிரச்சினை செய்தால் உன்னை வேலையில் இருந்து தூக்கி விடுவேன் என்கிறார்.



இதனால் கடுப்பாகும் ரவி வீட்டுக்கு வந்து ஸ்ருதியிடம் சத்தம் போட அவரும் தன் அம்மாவுக்கே சப்போர்ட் செய்கிறார். அடுத்ததாக ரூமில் ரோகினி இருக்க அங்கு வரும் விஜயா அப்பாவிடம் கேட்டு 14 லட்சம் ரூபாய் வாங்கி தர வேண்டும் என கேட்கிறார். ஆனால் ரோகினி அந்த வேலை கிடைக்குமா என தெரியாதே என இழுக்கிறார்.

ஒரு கட்டத்தில் விஜயா 14 லட்சம் ரூபாயுடன் மேலும் சில லட்சம் வாங்கி மனோஜ்க்கு எங்கேயோ ஒரு பிசினஸ் தொடங்கி தந்துவிடு எனக் கூற ரோகினி அதிர்ச்சியாகி விடுகிறார். இது உங்க அப்பாக்கு சில்லறை காசு தானே அதை பேசி வாங்கி கொடு என கேட்க ரோகினியும் தான் பேசுவதாக சொல்லி சமாளிக்கிறார். பின்னர் வித்யாவுடன் ரோகிணி ரோட்டில் வந்து கொண்டிருக்க அந்த நேரத்தில் ஒரு ஆட்டோவை கையை காட்டி நிறுத்துகின்றனர்.



அது முத்து ஒட்டி வரும் ஆட்டோ என்பதால் ரோகினிக்கு சந்தேகம் வருகிறது. செல்வத்திற்கு கால் செய்து நண்பர் ஒருவர் காரை எடுத்துச் சென்றதாக கூறி சமாளிக்கிறார் முத்து. பின்னர் அவரை பார்லர் இருக்கும் தெருவில் இறக்கி விடும்போது ஒருவர் வந்து பேசிக் கொண்டிருக்க காரை விற்று விட்டதாக அவரிடம் கூறிக் கொண்டிருக்கிறார் முத்து. இதை ரோகினி கேட்டுவிட்டு வீட்டில் இதை பற்ற வைக்க முடிவு செய்கிறார்.

வித்யாவை மட்டும் பார்லர் அனுப்பிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வருகிறார் ரோகினி. மனோஜிடம் வந்து இந்த விஷயத்தை கூற அவரது பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விடுகிறார். பின்னர் இந்த விஷயத்தை விஜயாவிடம் கோர்த்துவிடுகிறார் ரோகினி. அங்கிள் தானே வீட்டின் பத்திரத்தை அடகு வைத்து வாங்கி கொடுத்தார் அவரிடம் சொல்லாமல் காரை விற்கலாமா என விஜயாவை ஏற்றி விட அவர் அவன் வரட்டும் என கோபப்படுவதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-10

10 ‘‘ஆமாம், உன்னைக் கவிழ்ப்பதை தவிர எங்களுக்கு வேறு வேலை இல்லை பார். சரிதான் போடா.." வஜ்ரவேல் சொல்ல, அவன்…

10 hours ago

மருமகளை நம்பும் பாண்டியன்…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பி ஓவராக இடம் கொடுத்து வைத்திருக்கிறார். இதனால் தங்கமயிலும்…

10 hours ago

விஜயாவுக்கு வந்த பிரச்சனை – சிறகடிக்க ஆசை 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய சண்டே ஸ்பெஷல்…

10 hours ago

திருநெல்வேலி ஸ்பெஷல் மொச்சை மசாலா

திருநெல்வேலி என்றாலே எல்லாருடைய நினைவுக்கும் முதலில் வருவது அல்வா தான். ஆனால், இங்கு  ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று மொச்சை மசாலா.…

10 hours ago

தென்காசிப் பட்டணம் திரைப்பார்வை

விஜயகாந்த் நடிப்பதாக இருந்த படத்தில் அவர் வெளியேறி சரத்குமார் நடித்த படம் ஆக, காமெடி கலந்த காதல் கதையுடன் வெளியாகி…

10 hours ago

சரணடைந்தேன் சகியே – 20

20       “நாம் கோவிலில் வைத்து திரும்பவும் தாலி கட்டிக் கொள்ளலாமா சகி..?” முணுமுணுப்பாய் அவள் தோள்களில்…

14 hours ago