Categories: CinemaEntertainment

பாடல் பிறந்த கதை ( பொன்னொழில் பூத்தது புது வானில்)

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான கலங்கரை விளக்கம் திரைப்படத்தில், இடம் பெற்ற ஒரு சோகப்பாடல், காதல் பாடலாக மாற்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டு வெளியாகியுள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1965-ம் ஆண்டு வெளியான படம் கலங்கரை விளக்கம். கே.சங்கர் இயக்கத்தில் ஜி.என்.வேலுமணி தயாரித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்த இந்த படத்தில், நம்பியார், நாகேஷ், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமெரிக்கன் படமாக வெர்டிகோ என்ற படத்தின் தழுவலாக வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் பஞ்சு அருணாச்சலம் 2 பாடல்களை எழுதியிருந்தார். இந்த படம் வெளியான காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கவியரசர் கண்ணதாசன் இடையே மோதல் போக்கு இருந்த நிலையில், பஞ்சு அருணாச்சலம் பாடல் ஆசிரியராக மாறியுள்ளார். அதேபோல் அவர் எழுதிய இரு பாடல்களுமே கவிநயத்துடன் எழுதியிருந்தார். இதில் எதார்த்தமாக ஒரு பாடலை கேட்ட எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர் வேலுமணியிடம் மீண்டும் அந்த பாடலை போடுங்கள் என்று கூறியுள்ளார்.



இப்படியே 3 முறை அந்த பாடலை கேட்ட எம்.ஜி.ஆர், இந்த பாடலை எழுதியது யார் என்று கேட்க, பஞ்சு அருணாச்சலம் தான் எழுதினார் என்று வேலுமணி கூறியுள்ளார். ஆனால் எம்.ஜி.ஆர் இந்த பாடல் கண்ணதாசன் எழுதியது. இதை தூக்கிய துர போட்டுவிட்டு, வேறு ஒரு கவிஞரை வைத்து எழுதுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் பாடலை விட மனமில்லாத தயாரிப்பாளர் வேலுமணி, எம்.எஸ்.விஸ்வநாதனிடம் இது பற்றி கூறியுள்ளார்.

அதன்பிறகு எம்.ஜி.ஆரை சந்தித்த எம்.எஸ்.வி, இந்த 2 பாடல்களையும் எழுதியது பஞ்சு அருணாச்சலம் தான். ஒன்று அவர் எழுதிய பாட்டுக்கு நான் மெட்டு போட்டேன். மற்றொன்று நான் போட்ட மெட்டுக்கு அவர் பாடல் எழுதினார் என்று விளக்கியுள்ளார். அதன்பிறகு அந்த 2 பாடல்களும் படத்தில் சேர்க்கப்பட்டது. இதில் ஒரு பாடல் தான் ‘’பொன்னொழில் பூத்தது புது வானில்’’ என்ற பாடல்.

படத்தில் தற்கொலை செய்துகொள்ள செல்லும் காதலியை காதலன் தடுத்து நிறுத்த அவளை காப்பாற்றும்போது வரும் பாடல். இந்த சூழ்நிலையில், எப்படி காதல் பாட்டு பாட முடியும் என்பதால் சோகப்பாடலாக எழுதியுள்ளனர். ஆனால் பொதுவாக எம்.ஜி.ஆர் படத்தில் இருக்கும் டூயட் பாடல் இந்த படத்தில் இல்லை. விநியோகஸ்தர்களுக்கு இது ஒரு குறையாக இருக்கும் என்பதால் சோகமான இந்த பாடலை காதல் டூயட் பாடலாக மாற்றி இறுதியில் நடனத்துடன் முடித்திருப்பார் எம்.ஜி.ஆர்.


பாடல் வரிகள் இதோ:

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே


பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா

என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
ஆஆஆஆஆஆஆஆ…


What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உங்க வீட்டு குழந்தை மதிப்பெண் குறைவா எடுத்துட்டாங்களா?.! கவலை வேண்டாம்..!

“வருடம்தோறும் சொல்லிக்கிட்டே இருந்தேன்… காதிலேயே வாங்கினால்தானே! எதிர்வீட்டுப் பெண் நம்ம பெண்ணோட இருபது மார்க் அதிகம் வாங்கிட்டா… உங்க சித்தப்பா…

2 hours ago

எழில் எடுத்த முடிவு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் உங்க அப்பா…

2 hours ago

சுவையான மட்டன் உப்புகண்டம் செய்வது எப்படி..?

ஆட்டு இறைச்சி உண்பதற்கு சுவையான சத்தான உணவு. அதை உப்பு சேர்த்து நன்றாக காய வைத்து உப்புக்கண்டமாக சாப்பிட்டால் கூடுதல்…

2 hours ago

‘மாயவன் வேட்டை’ திரைப்பட விமர்சனம்

இஸ்லாமிய புனித நூலான குரானில் சைத்தான்கள் என்று அழைக்கப்படும் ஜின்கள் பற்றிய ஆன்மீகம் மற்றும் அறிவியல் தொடர்பை சொல்வது தான்…

2 hours ago

உடலென நான் உயிரென நீ-9

9 புதிதாக வாங்கியிருந்த கட்டில் மெத்தை மேல் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் டால்பின்கள் துள்ளிக் கொண்டிருந்தன. திடுமென பார்க்கையி்ல் கட்டில் ஸ்விம்மிங் பூல் போல் தெரிந்தது. ஓடிப்போய் அந்தக் கட்டில் மேல் விழுந்து புரள ஆசைதான். ஆனால் அங்கே நடுநாயகமாக கணநாதன் அமர்ந்திருந்திருந்தானே ...எதை எதிர்பார்த்து அமர்ந்திருக்கிறான் ...? இல்லை ...முடியாது என சொல்லிவிட்டால் ...யோசனை ஓடும் போதே சற்று முன் ரூபாவுடன் போனில் பேசிய பேச்சுக்கள் நினைவு வந்தன . "  திருமணம் நல்லபடியாக முடிந்து நீங்கள் இருவரும் பெரியகுளத்தில் செட்டில் ஆனதில்…

6 hours ago

மருத்துவத்துறையில் இவ்வளவு படிப்புகளா… அரசு வேலைவாய்ப்பும் இருக்கா.?

எம்.பி.பி.எஸ்: ஐந்தரை ஆண்டுப் படிப்பான இதை படித்து மருத்துவப் பயிற்சியை முடித்த பிறகு, இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த பிறகே…

6 hours ago