Categories: CinemaEntertainment

நாட்டாமையின் மகள் வரலட்சுமி சரத்குமார்க்கு டும் டும் டும் …. நிச்சயதார்த்த புகைப்படம்

 தமிழ் சினிமாவில் வில்லனாக தனது கேரியரை தொடங்கி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வெற்றிகரமாக தன் பயணத்தை தொடர்ந்து வருபவர் நடிகர் சரத்குமார். சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.



சர்ச்சைகளுக்கு அஞ்சாமல் தனது மனதில் பட்டதை யார் என்று பார்க்காமல் வெளிப்படையாக பேசி சபாஷ் வாங்கிக் கொள்ளும் இந்த அழகிய ராட்சசி, பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். ஸ்கோப் வேணும் என்பதற்காக அடிவாங்கி ரத்த களரியுடன் தனது நடிப்பை வெளிப்படுத்தி பாலாவையே இம்ப்ரஸ் செய்தார் வரலட்சுமி.

 தந்தையின் அடையாளத்தோடு வந்திருந்தாலும் தனக்கென இருக்கும் தனிச்சிறப்பாலும் கடின உழைப்பாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் அமைந்தது. சண்டக்கோழி 2, சர்க்கார், யசோதா போன்ற படங்களில் நெகட்டிவ் ரோலில்  கலக்கிய இவரின் நடிப்பு அதிகமாக பேசப்பட்டது.

தமிழை விட தெலுங்கு கன்னட படங்களில் பிசியாக இருந்த வரலட்சுமி சரத்குமாருக்கு பெரும்பாலும் நெகட்டிவ் ரோல்களை அமைந்தது. 39 வயது வரை முரட்டு சிங்கிளாக இருந்த வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் மும்பை சேர்ந்த ஆர்ட் கேலரி வைத்திருக்கும் தொழிலதிபர் நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் பிரம்மாண்ட முறையில் நடந்தது.



14 வருடங்கள் பழகி வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன்  காதலனை கரம் பிடித்துள்ளார் வரலட்சுமி. விரைவில் திருமண தேதியை அறிவிக்க உள்ளதாக கூறி குடும்பத்துடன் எடுத்த நிச்சயதார்த்த புகைப்படங்களை வலைதளத்தில்  பதிவிட்டு உள்ளார். இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-8

8 ‘‘யார் அவர்?" சஷ்டிகா எதிர்பார்த்த கேள்வியை வி.கே.வி கேட்டிருந்தான். அதுவும் நேரடியாக அவள் அறைக்கே வந்து கேட்டான். முதலில்…

3 hours ago

தங்கமயிலை வெளுத்து வாங்கும் புருஷன்…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் ஆசை ஆசையாக எடுத்துக் கொடுத்த டிரஸ்சை ராஜி போட்டுக்கொண்டு சந்தோசமாக வருகிறார். ராஜியின் சந்தோஷத்திற்கு என்ன…

3 hours ago

அசத்தும் சுவையில் மக்ரூன் ஸ்வீட்: செய்யலாமா?

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்து கடற்கரையோரப் பகுதி மக்கள் விரும்பி உண்ணும் இனிப்பு வகைகளுள் ஒன்று மக்ரூன். இந்த முந்திரி…

3 hours ago

உள்ளொழுக்கு படம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

 இந்த வருடம் மலையாளத்தில் அடுத்தடுத்து தரமான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் மஞ்சுமல் பாய்ஸ், பிரமயுகம், பிரேமலு, ஆடு ஜீவிதம், ஆவேசம் என…

3 hours ago

சரணடைந்தேன் சகியே – 18

18   மூன்று நாட்களாக ஒருவரை ஒருவர் முகம் பார்க்காமல் நடமாடிக் கொண்டிருந்தவர்களை கவனித்தபடி இருந்தனர் அபிராமியும், அன்னலட்சுமியும்.. இவர்களுக்குள்…

7 hours ago

மனம் மாறிய ஈஸ்வரி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகா,…

7 hours ago