சூரியகாந்தி பூச்செடி வளர்க்கலாம் வாங்க!

சூரியகாந்தி பூ மத்திய அமெரிக்க நாடுகளை தன் தாயகமாக கொண்டது. கி.மு 2600 ஆண்டுகளில் முதன்முறையாக மெக்சிகோவில் இந்த சூரியகாந்தி பூ பயிரிடப்பட்டது என்று கூறப்படுகிறது. அன்று முதல் இன்று வரை இந்த சூரியகாந்தி பயனளித்து கொண்டிருக்கிறது. இன்று உலகளவில் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு சிறப்பாகவும், பெருமளவிலும் செய்யப்படுகிறது.



சூரியகாந்தி பூ நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும் மற்றும் புத்துணர்வுடனும் நம்மை வைத்திருக்கும் பூக்களில் ஒன்றாகும். இதனுடைய பிரகாசமிக்க மஞ்சள் நிறமானது மனதினை எப்போதுமே புத்துணர்வுடன் வைத்திருக்கும். மிக மெல்லிய நறுமணத்தை கொண்டவை இந்த பூக்கள், சூரியகாந்தியை அருகினில் சென்று முகர்ந்து பார்த்தால் தான் அதனுடைய நறுமணத்தை உணர முடியும்.

சூரியகாந்தியில் பல வகைகள் இருக்கிறது, அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தது. மாடித்தோட்டத்தில் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பது எப்படி, சூரியகாந்தி பூ அறுவடை, சூரியகாந்தி பயன்கள், சூரியகாந்தி விதை எப்படி சாப்பிடுவது மற்றும் சூரிய காந்தி விதையின் மருத்துவ பயன்கள் ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.



சூரியகாந்தி பூச்செடி நாற்றுகள்

தரமான மற்றும் நேர்த்தியான விதைகளை பார்த்து வாங்கிக்கொள்ளவும். அந்த விதைகளை வைத்து நாற்றுகள் வளர்த்து பின்பு நடவு செய்வது சிறந்ததாகும், ஏனெனில் சில சமயங்களில் நட்ட விதைகள் சில முளைக்காமல் போகும் அல்லது வளர்ச்சி சரிவர இருக்காது. நாற்றுகள் வளர்ப்பதன் மூலம் நல்ல நாற்றுகளை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நாற்றுகள் வளர்க்கும் தட்டுகளில் விதைகளை போட்டு பராமரிக்கவும்.

மண்கலவை

செம்மண் மற்றும் மக்கிய தொழு உரம் ஆகிய இரண்டையும் சரிபாதி நன்கு கலந்து நடவு செய்ய தேவையான மண்கலவையை தயார் செய்யவேண்டும். சூரிய காந்தி அதிக வேர்பிடிக்கும் என்பதால் எப்போதும் ஈரப்பதம் தேவை, எனவே தான் கோகோபீட் பயன்படுத்துகிறோம், இது ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டது.

நடவு மற்றும் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு


தயார் செய்து வைத்த மண்கலவையை நெகிழிப்பை அல்லது தொட்டியில் போட்டு நிரப்பிக்கொள்ளவும். சிறிய தொட்டியாக இல்லாமல் பெரிய தொட்டியாக இருந்தால் சூரிய காந்தி நன்கு வளரும். பிறகு நாற்றுகளை அந்த தொட்டியில் நடவு செய்யவும். சூரியகாந்தி நல்ல உயரமாக வளரும் தன்மை கொண்ட செடியாகும். பஞ்சகாவியா மற்றும் மீனமிலத்தை தெளித்து வந்தால் சூரியகாந்தி பூச்செடி வளர்ப்பு சிறக்கும் .

சூரியகாந்தி பூ அறுவடை

நடவு செய்தததிலிருந்து சுமார் 3 மாதத்தில் சூரிய காந்தி பூ நல்ல விதத்தில் முழு வளர்ச்சியை அடைந்திருக்கும், அப்போது நாம் அறுவடை செய்துகொள்ளலாம். தேவைக்கு போக மீதி பூக்களில் இருந்து விதைகளை சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.



சூரியகாந்தி பயன்கள்

  • சூரியகாந்தி விதை பயன்கள் ஏராளம், சூரியகாந்தி விதைகளில் இருக்கும் துத்தநாக சத்துக்கள் மற்றும் பாஸ்பரஸ், பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாக வளர பயன்படுகிறது. மேலும் இந்த பாஸ்பரஸ் இதய தசைகளை சீராக இயங்க செய்யவும், சிறுநீரக செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.

  • சூரியகாந்தி விதைகளில் டயட்ரி நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. இது அடிக்கடி தோன்றும் பசி உணர்வை குறைத்து வயிற்றை அமைதியாக வைத்திருக்கும், மேலும் ஜீரண கோளாறு பிரச்சனைகளையும் சரி செய்ய பயன்படுகிறது.

  • சூரியகாந்தி விதைகளில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வைட்டமின் பி 1 உள்ளது. இது நம் உடலுக்கு அத்தியாவசியமான ஆற்றலை உருவாக்கி, நாம் உற்சாகமாகவும் மற்றும் சுறுசுறுப்பாகவும் இருக்க இது உதவுகிறது.

  • சூரியகாந்தி எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் ஈ, நரம்பு, வாஸ்குலார் மற்றும் மூளை செயல்பாடுகளை நன்றாக இயங்கச்செய்கிறது.



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

6 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

6 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

6 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

6 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

10 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

10 hours ago