Categories: Samayalarai

சுவையை தூண்டும் மட்டன் கறி குழம்பு … இப்படி வச்சு பாருங்க ஊரே மணக்கும்!

மட்டன் குழம்பு சாப்பிடுவதால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்தலாம். எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும். மட்டனை மதுரை ஸ்டைலில் குழம்பு வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.



தேவையான பொருட்கள்

  1. மட்டன் – அரை கிலோ

  2. சின்ன வெங்காயம் – 50 கிராம்

  3. தக்காளி – 2

  4. மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி

  5. மல்லித் தூள் – ஒன்றரை மேசைக்கரண்டி

  6. தேங்காய் துருவல் – கால் கப்

  7. கசகசா – அரை மேசைக்கரண்டி

  8. சோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி

  9. பட்டை – அரை அங்குலத் துண்டு

  10. கல் உப்பு – 2 தேக்கரண்டி

  11. நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி



செய்முறை விளக்கம்

மட்டனைத் துண்டுகளாக்கி கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய் துருவலுடன் கசகசா சேர்த்து மிக்ஸி நைசாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டனை சேர்த்துப் போட்டு நன்கு கிளறவும்.

பிறகு உப்பு சேர்த்து பிரட்டவும். (உப்பு சேர்த்து பிரட்டுவதால் கறியில் நன்கு உப்பு சேர்ந்துவிடும்) மட்டன் சற்று நிறம் மாறியதும் மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.



மிதமான தீயில் வைத்து மட்டன் தூள் வகைகள் ஒன்றாக சேரும்படி நன்கு 2 நிமிடங்கள் பிரட்டவும்.

அடுத்து மட்டனுடன் தேங்காய் விழுது ஒன்றாக சேரும்படி கிளறிவிட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து, ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி 6 விசில் வரும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து பார்த்தால் கறியில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் மேலே மிதந்து வந்திருக்கும். இப்போது சுவையான மட்டன் குழம்பு ரெடி.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-12

12 அழைத்தவன் ப்ரெட்ரிக். ஐபோன் கம்பெனியின் அமெரிக்க குழுமத்தில் ஒருவன். எப்பொழுதும் மிகவும் சீரியஸான முகத்துடன் வேலையைப் பற்றி மட்டுமே…

6 hours ago

கண்கள் எவ்வளவு எடை கொண்டது தெரியுமா?

மனிதனின் கண்கள் எவ்வளவு எடை கொண்டது தெரியுமா? மூளையின் எடை தெரியும். ஆனால் கண்களின் எடை 99 சதவீதம் பேருக்கு…

7 hours ago

’காதல் கசக்குதய்யா’ விமர்சனம்

யுடியூபில் ஆஹா ஓஹோ என்று பாராட்டப்பட்ட 10 நிமிட குறும்படம் ஒன்றை நீட்டி இழுத்து, முழு நீளப்படமாக உருவாகியிருக்கும் இந்த…

7 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பீனட் பட்டரை வீட்டிலேயே செய்யலாம்.. ரெசிபி இதோ..

காலை சிற்றுண்டி ஆனாலும் சரி மாலை ஸ்நாக்ஸ் ஆனாலும், இடையில் ஏற்படும் சின்ன பசி ஆனாலும் அதற்கு ஒரு பிரட்…

7 hours ago

சரணடைந்தேன் சகியே – 22

22       பாலகுமரன் வீட்டிற்கு போனபோது வீடு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.. முக்கிய விருந்தினர்களுக்கான அழகான அலங்காரமாக…

11 hours ago

மருமகளுக்கு ஜால்ரா போடும் பாண்டியன்..பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தான் மட்டும் பொறுப்பாகவும், சரியாகவும் இருக்கிறேன் என்ற நினைப்பில் மற்றவர்களை மட்டம்…

11 hours ago