சத்தமின்றி முத்தம் தா விமர்சனம்

நடிகர் ஸ்ரீகாந்தின் அட்டகாசமான நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள சத்தமின்றி முத்தம் தா படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாமா?

சத்தமின்றி முத்தம் தா: தமிழ் திரை உலகில் ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதன் பிறகு இவர் பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தார். அதன்பின் சில திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டர் மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது சத்தமின்றி முத்தம் தா என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஜோடியாக பிரியங்கா திமேஷ் என்பவர் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தை ராஜூ தேவ் என்பவர் இயக்கி உள்ளார். ஜூபின் இசையில் உருவாகிய இந்த படம் ஸ்ரீகாந்துக்கு மீண்டும் ஒரு அட்டகாசமான ரீஎன்ட்ரி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



படத்தின் கதை: இந்த படத்தின் கதை என்ன வென்றால், சந்தியாவை (பிரியங்கா திமேஷ்) கொலையாளியிடம் இருந்து தப்பிக்க முயலும் போது, ​​கொலையாளியின் கூட்டாளி ஓட்டிச் சென்ற வாகனம் அவள் மீது மோதுகிறது. அதில் சந்தியாவின் கணவர் ரகு (ஸ்ரீகாந்த்) அவளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். விபத்தில் தலையில் அடிபட்டதால் தன் நினைவை இழந்து தன் கணவனைக்கூட அடையாளம் காண முடியாமல் தவிக்கிறாள் சந்தியா.



க்ரைம் த்ரில்லர்: முதலில் தனது கணவனை நம்ப மறுக்கும் சந்தியா, பள்ளியில் படித்த காலத்திலிருந்தே நாம் காதலர்கள் என ரகு சொல்ல அதை நம்கிறார். ஆனால், பள்ளி ஆல்பத்தை பார்க்கும் சூழ்நிலை வர, அதில் தனது கணவர் ரகு இல்லை என்றும், உண்மையில் கணவரின் பெயர் விக்னேஷ் என்பதும் நினைவுக்கு வருகிறது. சந்தியாவிடம் கணவர் என்று ஸ்ரீகாந்த் ஏன் பொய் சொல்லிவைத்து இருந்தார் இதற்கு காரணம் என்ன என பல திகிலூட்டும் திருப்பங்களுடன் கதை நகர்கிறது.



அழகான நடிப்பு: ஸ்ரீகாந்தின் நடிப்பு சூப்பர்: ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில் என பல அட்டகாசமான படங்களில் நடித்து பெயர் எடுத்த ஸ்ரீகாந்திற்கு கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். ஆனால், சத்தம் இன்றி முத்தம் தா படத்தில் ஸ்ரீகாந்த் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். அதே போல கதாநாயகியாக நடித்த பிரியங்கா திமேஷ் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்துள்ளார்.

படம் சுமாரா சூப்பரா: ஜூபின் இசை படத்திற்கு பிளஸ் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது என்று சொல்லலாம், குறிப்பாக இந்த படத்தில் ஆண்ட்ரியா பாடிய செம்பரம்பாக்கம் பாடல் ஹூம் சொல்றியா மாமா ஹூம் ஹூம் சொல்றியா பாடல் போல ரசிகர்களை தியேட்டரில் ஆட்டம் போட வைத்துள்ளது. சத்தம் இன்றி முத்தம் தா திரைப்படம் பரபரப்பான த்ரில்லர் திரைப்படமாக கொடுக்க இயக்குநர் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும், படத்தில் எதிர்பார்த்த அளவிற்கு த்ரில்லிங் இல்லாததால், படம் சுமாராகவே இருக்கு என்று படம் பார்த்தவர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

7 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

7 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

7 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

7 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

11 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

11 hours ago