உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பட்டத்தில் இந்தியாவுக்கு எந்த இடம்?

உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பட்டத்தை இந்த முறையும் பின்லாந்து தக்க வைத்து கொண்டுள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட ‘World Happiness Report 2024’ அறிக்கையின்படி, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் நார்டிக் நாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.



இந்த பட்டியலில் டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளும் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையே உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்ட 143 நாடுகளின் பட்டியலில் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் தலிபான் மீண்டும் அங்கு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியான மனிதாபிமான நெருக்கடிகளை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் டாப் 20 நாடுகளில் இருந்த அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாடுகள் முறையே 23-வது மற்றும் 24-வது இடத்திற்கு சென்றுள்ள நிலையில், கோஸ்டாரிகா மற்றும் குவைத் நாடுகள் இந்த பட்டியலில் டாப் 20-க்குள் நுழைந்து முறையே 12-வது மற்றும் 13-வது இடங்களை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு தரவரிசையில் அமெரிக்கா 16-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கனடா 15-வது இடத்திலும், பிரிட்டன் 20-வது இடத்திலும், பிரான்ஸ் 27-வது இடத்திலும் உள்ளன. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா மட்டுமே டாப் 10 இடங்களிலும், 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் கனடா மற்றும் இங்கிலாந்து டாப் 20 இடங்களிலும் உள்ளன.



மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலானது 2006-2010 முதல் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ண்டுள்ளது. இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் தரவரிசையில் சரிவை சந்தித்துள்ள அதே நேரம் செர்பியா, பல்கேரியா மற்றும் லாட்வியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தரவரிசையில் ஏறுமுகத்தை கண்டுள்ளன. ஃபின்லாந்து நாட்டின் இயற்கை தொடர்பு மற்றும் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவை அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையானது குறிப்பிட்ட நாட்டு மக்களின் வாழ்க்கை திருப்தி மற்றும் GDP, சமூகம் மற்றும் மக்களின் பரஸ்பர ஆதரவு, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலம், சுதந்திரம், ஊழல் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது ரேங்க்.!! மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கடந்த ஆண்டைப் போலவே இந்தியா, 126-வது இடத்தில் உள்ளது. அதே நேரம் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 60-வது இடத்திலும், நேபாளம் 93-வது இடத்திலும், பாகிஸ்தான் 108-வது இடத்திலும், மியான்மர் 118-வது இடத்திலும், இலங்கை 128-வது இடத்திலும், வங்கதேசம் 129-வது இடத்திலும் உள்ளன இதன்படி பார்த்தால் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது.



வெவ்வேறு வயதினரிடையே காணப்படும் மகிழ்ச்சியின் போக்குகளையும் அறிக்கை ஆய்வு செய்தது. லிதுவேனியா 30 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு மகிழ்ச்சியான நாடாக உருவெடுத்துள்ள, அதே சமயம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் டென்மார்க் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் முதியோர்களின் வாழ்க்கை திருப்தியில் திருமண நிலை, சமூக தொடர்பு மற்றும் உடல் நல்வாழ்வு உள்ளிட்ட பல கூறுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனினும் வயதான ஆண்களை விட குறைவான மகிழ்ச்சியையே வயதான இந்திய பெண்கள் கொண்டு உள்ளனர். அதே போல உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சி குறைவாகவே இருப்பதை அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 140 மில்லியன் நபர்களுடன், சீனாவைத் தொடர்ந்து, முதியோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மக்கள்தொகை மாற்றம் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் முன்னேற்றங்களைக் குறிக்கும் அதே நேரம் வயதான காலத்தில் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் காரணிகளை புரிந்துகொள்வது மிக முக்கியமானது.

வயதான இந்தியர்களில் அதிக வயதுடைய ஆண்கள் மற்றும் கல்வித் தகுதி கொண்டவர்கள் பெரும்பாலும் வாழ்க்கை திருப்தியாக இருப்பதாக வெளிப்படுத்துவதற்கு நேர்மாறாக வயது முதிர்ந்த இந்தியப் பெண்கள், அதிக மன அழுத்தம் மற்றும் உடல்நலம் தொடர்பான சவால்களை எதிர்கொண்டாலும் கூட, ஆண்களுடன் ஒப்பிடும்போது தங்களது வாழ்க்கை அதிக திருப்தியாக இருப்பதாக வெளிப்படுத்த முனைகின்றனர்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை நேரடி விற்பனையில் கலக்கும் ஃபார்ம்லே

பெருந்தொற்றுக்கு பிறகு, மேலும் பல நுகர்வோர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நாடுவதால், சூப்பர் மார்க்கெட்களில் பலவகையான ஊட்டச்சத்து மிக்க ஸ்நாக்ஸ்…

14 mins ago

அவமானப்பட்ட ரோகிணி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரவியை…

15 mins ago

நடிகை மனோரமா-4

கோலிவுட்டின் நடிப்பு சக்கரவர்த்தியான சிவாஜி கணேசன் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு நல்ல மனிதரும் கூட. அதேபோல் தான் சிவாஜியுடன் நிறைய…

3 hours ago

திருமண உறவில் எழும் சிக்கல்களை வெற்றிகரமாக சமாளிப்பதற்கான டிப்ஸ் இங்கே..!

சில திருமண உறவுகள் ஏன் வலுவாக இருக்கின்றன, பல திருமண உறவுகள் ஏன் கரடுமுரடான பாதையை போல் பல பிரச்சனைகளுடன்…

3 hours ago

கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்க இந்த பொடியை இப்படி பயன்படுத்துங்க

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து துறைகளிலும் கணினியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. அதனால் அனைவருமே கணினியை பயன்படுத்தி தான் வேலை…

3 hours ago

தமிழ்த்திரையில் அதிக வசூலை அள்ளிய முதல் படம் இதுதான்!…

  தமிழ்த்திரை உலகம் பல விசித்திரமான சம்பவங்களை சந்தித்துள்ளது. தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் தான் வசூலை வாரிக்குவிக்கின்றன. தற்போது…

3 hours ago