Categories: CinemaEntertainment

மீண்டும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார்

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்போது சினிமாவில் தொடர்ந்து வெற்றி முகம் தான் இருந்து வருகிறது. அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஜெயிலர் படம் மாபெரும் வெற்றிக்கு பிறகு இப்போது லால் சலாம் படமும் வெற்றியை சந்தித்திருக்கிறது.



இதைத்தொடர்ந்து இப்போது வேட்டையன் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் நிறைவு பெற இருக்கிறதாம்.



மேலும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தை தொடர்ந்து பிப்ரவரி 22 வரை நடக்க இருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க ரஜினி ஸ்டைலில் தான் ஞானவேல் இயக்கி வருகிறார். எந்திரன் சிட்டிக்கு டஃப் கொடுக்கும் வகையில் விரைவில் ரஜினி நெகட்டிவ் கதாபத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

கமல் ஆளவந்தான், விஜய் அழகிய தமிழ்மகன், அஜித் மங்காத்தா என ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நிறைய படங்களில் நடித்திருக்கின்றனர். அந்தவகையில் எந்திரன் படத்தில் சிட்டி கதாபாத்திரம் ரஜினியை வேறு தரத்திற்கு எடுத்துச் சென்றது. இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்திலும் ரஜினி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருக்கிறாராம்.

அதுவும் எந்திரன் சிட்டிக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரஜினி நடிக்க இருக்கிறாராம். ஏப்ரல் மாதத்தில் கடைசி வாரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் லோகேஷ் மற்றும் ரஜினி கூட்டணி என்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-14

14 ‘‘பேபி.. சஷ்டி.. சஷ்டிகா.." மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தும் மீளாதிருந்த அவளைப் பற்றி உலுக்க.. ஒரு நெடுமூச்சுடன் மயக்கத்தில்…

9 hours ago

பாண்டியனை அடக்கிய கோமதி- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் ஓவர் ஆட்டம் ஆடுகிறார் என்று கோமதிக்கு கோபம் வந்துவிட்டது.…

9 hours ago

உருளைக்கிழங்கை வைத்து 10 நிமிடத்தில் செய்யலாம் போஹா நக்கெட்ஸ்

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது…

9 hours ago

’நானும் ஒரு அழகி’ திரைப்பட விமர்சனம்

நாயகி மேக்னாவுக்கு தனது அத்தை மகன் நாயகன் அருண் மீது காதல் மலர்கிறது. அருணுக்கும் மேக்னா மீது காதல் இருந்தாலும்,…

9 hours ago

சரணடைந்தேன் சகியே – 24

24         “என் ஹஸ்பென்ட், சாரோட கம்பெனியில் மேனேஜர்.. நான் ஒரு யோகா டீச்சர்.. யோகா…

13 hours ago

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மனோஜ்…

13 hours ago