கொசுவலை உற்பத்தி செய்து கோடீஸ்வரரான வியக்க வைக்கும் கதை..!!

மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு தரக்கூடிய எந்த ஒரு தொழிலும் நிச்சயம் வெற்றி பெறும். அப்படி உலகமே எதிர்கொண்டிருக்கும் ஒரு பிரச்னை கொசு. கொசுக்களால் பரவும் நோய்களால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்களை இழக்கிறோம்.

இதற்கு தீர்வு காணும் வகையில் கொசுவலை தயாரித்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வெற்றி கண்டுள்ளார் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசாமி.

கல்லூரி படிக்கும் போது வந்த ஐடியா: கரூர் மாவட்டம் இந்தியாவில் கொசுவலை தயாரிக்கும் ஒரு மையம் என கூறலாம். அப்படி கரூரை சேர்ந்த சிவசாமி, கல்லூரியில் பயின்று கொண்டிருந்த போது ஒரு நாள் கொசு வலை தயாரிக்கும் ஆலைக்கு சென்றிருக்கிறார்.



அப்போது வருங்காலத்தில் இதே போல ஒரு ஆலையை நிறுவி , நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கொசுவலை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தார். அப்போது LLIN எனப்படும் Long-lasting insecticidal net வகை வலைகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்திருந்தது. எனவே அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொசுவலை ஆலையை நிறுவும் பணிகளை மேற்கொண்டார்.

அறையில் இருந்து தொடங்கிய முதல் ஆலை: முதலில் தொழில் தொடங்க ஆர்வம் இருந்தாலும் போதிய பணம் இல்லை. எனவே தனது வீட்டின் ஒரு அறையையே ஆலையாக மாற்றினார். ரூ.1.25 லட்சம் கடன் வாங்கி தனது அறையில் இருந்து கொசுவலை உற்பத்தியை தொடங்கினார்.



2012ஆம் ஆண்டு துராநெட் நிறுவனத்தை கையகப்படுத்தினார். படிப்படியாக வளர்ச்சி அடைந்த அவர் , வெண்ணைமலையில் ஷோபிகா இம்பெக்ஸ் என்ற பெயரில் ஆலையை நிறுவினார். இங்கு தயாரிக்கப்படும் கொசுவலைகள் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, சீனா, மலேசியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

மலேரியா ஒழிப்பு எனும் மையக்கரு: நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தொழிலை அப்டேட் செய்து வரும் சிவசாமி, மலேரியா ஒழிப்பு எனும் மையக்கருவை கையில் எடுத்தார். ஆப்பிரிக்க நாடுகளில் கொசுக்களால் பரவக்கூடிய மலேரியாவால் மக்கள் இறப்பது அதிகம். எனவே மலேரியாவை ஒழிக்க இந்த கொசுவலையை பயன்படுத்துங்கள் என விளம்பரம் செய்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கொசுவலைகளை ஏற்றுமதி செய்கிறார்.

சொத்து மதிப்பு ரூ.2,400 கோடியாக உயர்வு: சிவசாமியின் கடின உழைப்புக்கு நல்ல வெற்றி கிடைத்துள்ளது. தற்போது இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2,400 கோடி ரூபாய். ஹரன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2022இன் படி, சிவசாமி 582ஆவது இடத்தில் உள்ளார். இவரது நிறுவனம் மாதத்திற்கு 50 லட்சம் கொசுவலைகளை தயாரிக்கிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-12

12 அழைத்தவன் ப்ரெட்ரிக். ஐபோன் கம்பெனியின் அமெரிக்க குழுமத்தில் ஒருவன். எப்பொழுதும் மிகவும் சீரியஸான முகத்துடன் வேலையைப் பற்றி மட்டுமே…

7 hours ago

கண்கள் எவ்வளவு எடை கொண்டது தெரியுமா?

மனிதனின் கண்கள் எவ்வளவு எடை கொண்டது தெரியுமா? மூளையின் எடை தெரியும். ஆனால் கண்களின் எடை 99 சதவீதம் பேருக்கு…

7 hours ago

’காதல் கசக்குதய்யா’ விமர்சனம்

யுடியூபில் ஆஹா ஓஹோ என்று பாராட்டப்பட்ட 10 நிமிட குறும்படம் ஒன்றை நீட்டி இழுத்து, முழு நீளப்படமாக உருவாகியிருக்கும் இந்த…

7 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பீனட் பட்டரை வீட்டிலேயே செய்யலாம்.. ரெசிபி இதோ..

காலை சிற்றுண்டி ஆனாலும் சரி மாலை ஸ்நாக்ஸ் ஆனாலும், இடையில் ஏற்படும் சின்ன பசி ஆனாலும் அதற்கு ஒரு பிரட்…

7 hours ago

சரணடைந்தேன் சகியே – 22

22       பாலகுமரன் வீட்டிற்கு போனபோது வீடு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.. முக்கிய விருந்தினர்களுக்கான அழகான அலங்காரமாக…

11 hours ago

மருமகளுக்கு ஜால்ரா போடும் பாண்டியன்..பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தான் மட்டும் பொறுப்பாகவும், சரியாகவும் இருக்கிறேன் என்ற நினைப்பில் மற்றவர்களை மட்டம்…

11 hours ago