Big Boss Tamil 7:95 நாள் தாக்கு பிடித்த விசித்ராவின் மொத்த சம்பளம் இதுதான்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இந்த வாரம் விசித்ரா அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். பொதுவாக 50 வயதை கடந்த போட்டியாளர்கள் சில வாரங்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சியில் தாக்குப் பிடிக்க மாட்டார்கள்.



ஆனால் விசித்ரா இளைய தலைமுறைக்கு ஈடாக தன் கெத்தை காட்டியதோடு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தினேஷின் பர்சனல் விஷயங்களை அவர் விமர்சித்ததும், மாயாவுடன் சேர்ந்ததும் தான் இதற்கு காரணம்.

இப்படி சேர்க்கை சரியில்லாததால் ஓட்டு எண்ணிக்கையில் இவர் கொஞ்சம் சரிவை சந்தித்தார். ஆனாலும் மாயா தான் ஓட்டு நிலவரத்தில் கடைசி இடத்தில் இருந்தார். அவரை காப்பாற்ற தான் விஜய் டிவி விசித்ராவை பலியாடாக மாற்றிவிட்டது.

அதனாலேயே இந்த எலிமினேஷன் கடும் அதிருப்தியை சந்தித்துள்ளது. இருந்தாலும் விஜய் டிவியின் முடிவு தான் இறுதி என்பது நாம் அறிந்தது தான். அந்த வகையில் 95 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த விசித்ராவின் சம்பளம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.



அதன்படி சீனியர் நடிகையான இவருக்கு ஒரு நாளைக்கு 30,000 வரை சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அதை வைத்து கணக்கிடும்போது 95 நாட்களுக்கு 28,50,000 இவர் சம்பளமாக பெற்றுள்ளார். இது அதிகபட்ச சம்பளம் தான் என்றாலும் டைட்டிலை அவர் தவறவிட்டது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

இவ்வளவு நாட்கள் ஒரு கடுமையான போட்டியாளராக இருந்து விட்டு கடைசி நேரத்தில் அவர் வெளியேற்றப்பட்டது தற்போது விமர்சனமாக மாறி இருக்கிறது. ஆனாலும் மாயாவை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராகும் விஜய் டிவி இறுதிப்போட்டியிலும் ட்விஸ்ட் வைக்க இருக்கிறது.



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

5 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

5 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

5 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

5 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

9 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

9 hours ago