Big Boss Tamil 7: பிக்பாஸில் செம்ம டுவிஸ்ட்… மறுபடியும் காப்பாற்றப்பட்ட மாயா!

 பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் முழுவதும் பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே முடிந்தது. பலரும் எதிர்பார்க்காத வண்ணம் பூர்ணிமா 16 லட்சத்தோடு வெளியேறியது நிச்சயம் புத்திசாலித்தனமான முடிவு தான்.



அதைத்தொடர்ந்து இன்று விசித்ரா வெளியேற்றப்பட்டது மிகப்பெரிய ட்விஸ்ட். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள புரோமோவும் நிகழ்ச்சிக்கான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது வீட்டை விட்டு சென்ற பூர்ணிமா இன்று பிக் பாஸ் மேடைக்கு வந்துள்ளார். அவரை வரவேற்ற கமல் உங்கள் நண்பர்களை பற்றி சொல்லுங்கள் என கூறுகிறார். உடனே அவர் மாயாவிடம் சும்மா வீட்டுக்கு வந்தா துரத்தி துரத்தி அடிப்பேன் என கூறுகிறார்.



இதன் மூலம் டைட்டிலை வெல்ல வேண்டும் என அவருக்கு மறைமுகமான செய்தியை கொடுத்துள்ளார். அதேபோல் ஒவ்வொருவரை பற்றியும் பேசிய அவர் இறுதியில் அர்ச்சனா டைட்டில் வின்னர் என ஒரே போடாக போட்டார்.

இது வீட்டுக்குள் இருந்தவர்களை கடும் அதிர்ச்சியாக்கியது என்பது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது. அதிலும் அர்ச்சனா இது தெரிந்தும் தெரியாதது போல் நின்று கொண்டிருந்தார். ஆக மொத்தம் பூர்ணிமா கொளுத்தி போட்ட இந்த நெருப்பு எப்படி எரியப் போகிறது என்பது வரும் வாரத்தில் தெரியும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

9 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

9 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

9 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

9 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

13 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

13 hours ago