மகாபாரதக் கதைகள் |அர்ஜுனன் பாசுபத அஸ்திரம் பெற்ற கதை-4

அர்ஜுனா! கவலையை விடு ! அந்த அசுரர்களிடம் நீ தோற்றோடுவது போல் பாவனை செய். அவர்கள் உன்னை எள்ளி நகையாடுவார்கள். யாரையாவது பரிகாசம் செய்தால், அவர்கள் இறந்து போவார்கள் என்ற சாபம் பெற்றவர்கள் இந்த அசுரர்கள். இவர்கள் உன்னைக் கேலி செய்யும் போது, பிரம்மாஸ்திரத்தை விடு. அனைவரும் அழிவர். என்றது அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக ! அர்ஜுனன் அசரிரீயின் உத்தரவுக்கு கட்டுப்பட்டான். அசுரர்களின் அம்புகளை தாக்குபிடிக்க முடியாதவன் போல ரதத்தை திருப்பி ஓட்டினான்.



எதிர் பார்த்தது போலவே அசுரர்கள் அவனைக் கேலி செய்தனர். டேய் பயந்தாங்கொள்ளி என கத்தினர். ஆரவாரமாக சிரித்தனர். அவ்வளவு தான் ! அர்ஜுனன் தன் தேரை மின்னலென திருப்பச் சொன்னான். மாதலி திருப்பவே, அர்ஜுனன் பிரம்மாஸ்தரத்தை அவர்கள் மீது பாய்ச்ச, மூன்று கோடி அசுரர்களின் தலையும் வீழ்ந்தது. தேவர்கள் ஆனந்த பாட்டு பாடினர். அவனை புகழந்தனர்.

இதையடுத்து, அவர்கள் தேவலோகம் திரும்பினர். வழியில் இரணியநகரம் என்ற மிதக்கும் நகரைக் கண்டான் அர்ஜுனன். மிதக்கும் நகரம் எப்படி சாத்தியமாகும் என நீங்கள் கேட்கலாம். இப்போது கூட சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணில் மிதந்து கொண்டிருப்பதை நாம் படிக்கிறோம், பார்க்கிறோம். இன்றைய விஞ்ஞானத்துக்கு அடிப்படையாக இருந்தது நம் நாட்டு புராணங்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம் ஆன்மீகம் நமக்கு அறிமுகப்படுத்தியவையே, இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளாக வெளிநாட்டவரால் மார்தட்டிக் கொள்ளப்படுகிறது. இந்த மிதக்கும் நகரில், அசுரப் பெண்களான காலகை, புலோமை ஆகியோர் பெற்றெடுத்த 60 ஆயிரம் அசுரர்கள் வசித்தனர். அவர்களையும் வென்றான் அர்ஜுனன். பின்னர், தேவேந்திரனிடம் சென்று ஆசி பெற்று, சகோதரர்கள் தங்கியிருக்கும் காமிகவனத்திற்கு புறப்பட அவனை இந்திரன் தடுத்தான்.



மகனே ! நீ இன்னும் சிறிதுகாலம் இங்கே தங்கிவிட்டுச் செல். உனக்கு பொன் மாளிகைøயும் ஐயாயிரம் தேவ கன்னியரையும் தருகிறேன். அங்கே தங்கி, அவர்களுடன் ஆனந்தமாய் இரு, என்றான். அர்ஜுனனும் தந்தையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டான்.

அர்ஜுனனின் ஆற்றலை, அங்கே வந்த உரோமச முனிவர் என்பவரிடம் சொன்ன இந்திரன், அவன் அங்கு சிறப்புடன் தங்கியுள்ள விபரத்தை தர்மர் மற்று சகோதரர்களிடம் சொல்லிவிட்டால் அவர்கள் மகிழ்வார்கள் என்றும் சொன்னான். உரோமசமுனிவர் அப்பணியை தானே செய்வதாக ஒப்புக்கொண்டார். இவர் உடலெங்கும் ரோமம் முறைத்துதிருக்கும். உலகம் ஒவ்வொருமுறையும் அழியும்போது மட்டும் ஒரே இவரது கையிலும் ஒரு ரோமம் உதிரும். அப்படி ஒரு ஜடாமுடி முனிவர் அவர்.

அவர், தர்மரிடம் விஷயத்தை சொல்ல காமீக வனத்துக்கு கிளம்பினார். தர்மரிடம் சென்று விஷயத்தைச் சொன்னார். தம்பி பாசுபதாஸ்திரத்தை சிவனிடம் பெற்றதும், தேவர்களுக்கு எதிரான அரக்கர்களை அழித்ததையும் கேட்டு மகிழ்ச்சியடைந்த தர்ம சகோதரர்கள்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-15

15 மறுநாள் கண்விழித்த உடனேயே வேறு இடத்தில் இருப்பதை உணர்ந்துகொண்ட சஷ்டிகா, சட்டென எழுந்து அமர்ந்தாள். "என்னடா பாப்பா எழுந்து…

2 hours ago

புருஷனை தன் கைக்குள் போட்ட தங்கமயில்…..பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில், புருஷனை தன் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றுமே…

2 hours ago

நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்…

2 hours ago

’7ஜி’ (7G) திரைப்பட விமர்சனம்

ரோஷன் பஷீர் - ஸ்முருதி வெங்கட் தம்பதி தனது மகனுடன் அடுக்குடிமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள். தனது நீண்டநாள் சொந்த…

2 hours ago

சரணடைந்தேன் சகியே – 25

25       “அம்மா நான் போயிட்டு வர்றேம்மா..” சஸாக்கி வேலைக்கு கிளம்பிவிட்டாள்.. அன்னத்திற்குத்தான் மிகுந்த கவலை.. மகள்…

6 hours ago

ஈஸ்வரியை தூக்க வரும் போலீஸ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா அப்செட்…

6 hours ago