Categories: Samayalarai

தித்திக்கும் காசி அல்வா!

காசி அல்வா வெள்ளை பூசணிக்காயை கொண்டு செய்யப்படும் அல்வா வகை. இது இந்தியாவின் மிகவும் பாரம்பரியமிக்க அல்வா வகை.  தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் புகழ் பெற்றது.  வழக்கமாக நாம் செய்யக்கூடிய கோதுமை அல்வா அல்லது பாசிப்பருப்பு அல்வா அதிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க வெள்ளை பூசணிக்காயை பயன்படுத்தி செய்யக்கூடிய அல்வா.சுவையான காசி அல்வாவை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.



காசி அல்வா செய்ய தேவையான பொருட்கள்

  • வெள்ளை பூசணிக்காய் – 2 kg ( வேகவைத்து  பிழிந்த பிறகு 400 கிராம்)

  • சர்க்கரை – 200  கிராம்

  • நெய்  – 70 கிராம்

  • குங்குமப்பூ – 1  சிட்டிகை

  • முந்திரி பருப்பு – ¼  கப்

  • ஏலக்காய் தூள் – ¼  தேக்கரண்டி



செய்முறை விளக்கம்:

  1. வெள்ளை பூசணிக்காய் விதைகளை நீக்கிவிட்டு துருவுவதற்கு ஏற்றவாறு நறுக்கி கொள்ளவும்.

  2. அதனை காய்கறி திருவும் கட்டையில் வைத்து துருவிக் கொள்ளவும்.

  3. பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் சேர்த்து 2 விசில் வைத்து வேக வைக்கவும்.

  4. வெந்த பின்னர் ஒரு காட்டன் துணியை வடிகட்டியின் மீது வைத்து அதில் வேகவைத்த பூசணிக்காயை கொட்டி தண்ணீரை வடிக்கவும்.

  5. தண்ணீரை நன்றாகப் பிழிந்து கொள்ளவும்.

  6. ஒரு சிறிய கடாயில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து  சூடானதும், கால் கப் முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும்.

  7. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் வேக வைத்துள்ள பூசணிக்காயை சேர்த்துக் கொள்ளவும்.

  8. மிதமான தீயில் வைத்து கிளறவும்.

  9. அதனுடன் 200 கிராம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்,  சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கவும்.

  10. அதனுடன்  ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கிளறவும்.

  11. இரண்டு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.

  12. மீண்டும் 3 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.

  13. அதனுடன் கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.

  14. இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு சேர்த்து கலந்து பின்னர் அடுப்பை அணைக்கவும்.

  15. சுவையான காசி அல்வா தயார்.



 சில குறிப்புகள்

  • இதனை வெள்ளை பூசணிக்காய் தவிர மஞ்சள்பூசணி வைத்தும்  செய்யலாம்.

  • அதிக நெய் சேர்க்க தேவையில்லை குறைவான நெய்யிலே சுவையான அல்வா செய்யலாம்.

  • உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். மற்ற அல்வா வகைகளை காட்டிலும் இதற்கு குறைவான சர்க்கரை தேவைப்படும்.

  • பூசணிக்காயை வேக வைக்க அதில் உள்ள தண்ணீரே போதுமானது மேற்கொண்டு தண்ணீர் சேர்க்க தேவையில்லை.



வீட்டு குறிப்பு

  • வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.

  • தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஈஸ்வரிக்கு எதிராக மாறிய கோபி ராதிகா..பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், அழகு போல பொண்டாட்டி இருந்தாலும் கூத்தடிக்க வேற ஒரு பொண்டாட்டி தேவை என்று ஒரு…

7 mins ago

மீனா ராஜியை பிரிக்க திட்டம் தீட்டும் தங்கமயில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் படித்துக் கொண்டே வேலை பார்த்து நம்மலையும் படிக்க வைக்கிறார்…

10 mins ago

செட்டிநாடு ஸ்டைலில் பச்சைமிளகாய் சட்னி செய்து பாருங்கள்..!

நண்பர்களே உங்கள் வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான சமையல் சாப்பிட்டு விட்டு போர் அடைத்துவிட்டது அல்லவா..? வீட்டில் உள்ள அனைவரும்…

12 mins ago

‘ககனாச்சாரி’ (மலையாளம்) திரைப்பட விமர்சனம்

2050-ம் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. மழை வெள்ளத்தில் நிலப்பரப்புகள் மூழ்குவதோடு, ஏலியன்களின் படையெடுப்பு, அரசின் அடக்குமுறை, பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக…

16 mins ago

சரணடைந்தேன் சகியே – 27

27   “இந்த இரண்டு டாகுமென்டையும் டைப் செய்து பி.டி.எப்ல போட்டு வைங்க..” திவாகர் நீட்டிய பைல்களை வாங்கிய சஸாக்கியின்…

4 hours ago

ரம்யா போடும் மாஸ்டர் பிளான் .. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா காட்டம்மன் கோவிலில் பரிகாரம்…

4 hours ago