Categories: CinemaEntertainment

பாரதி ராஜாவின் 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவிக்கு பதிலா நடிக்கவிருந்தவர் இவரா?

தமிழ் சினிமாவில் பாரதிராஜா மிக முக்கிய இயக்குனர் ஆவார். இவர் தமிழில் 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானார். இப்படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்திற்கு பின் பாரதிராஜா பல வெற்றிப்படங்களை கொடுத்தார். கிராம பாங்கான கதைகளின் மூலம் சினிமாவில் புதுமையை உண்டுபண்ணியவர். இவரின் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு கூட கிராமத்து வாசனை வீசும். இவர் இயக்கிய கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற திரைப்படங்கள் இவருக்கு சிறந்த இயக்குனர் எனும் பெயரை பெற்று தந்தன.

இவர் இயக்குனராய் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். படைவீரன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையை மிகச்சிறப்பாக வெளிக்காட்டினார்.



பல்வேறு கதாநாயகிகளை திரையில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவரை சேரும். இவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்தார். ஆனால் இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு பதிலாக முதலில் நடிகை ரோஜா ரமணியைதான் தேர்வு செய்தார்களாம்.

ரோஜா ரமணி செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். அப்போது அவர் தமிழ் சினிமாவிற்கு புதுமுகம் என்பதால் பாரதிராஜாவின் நண்பர்களும் விநியோகஸ்தரர்களும் படத்தில் அனைவருமே புதுமுகமாக இருந்தால் படம் எப்படி விற்பனையாகும் என கேட்டுள்ளனர்.

பின் நண்பர்களின் யோசனையை பெற்ற பாரதிராஜா அப்படத்தில் அனைவருக்கும் தெரிந்த முகமான ஸ்ரீதேவியை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. குறைந்த பட்ஜெட்டிலேயே உருவாக்கப்பட்ட இப்படம் வசூலில் முதலீட்டு தொகையையே மிஞ்சியதும் குறிப்பிடத்தக்கது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சுந்தரி சீரியல் திடீரென மாற்றப்படும் ஒளிபரப்பு நேரம்..

 தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. காலை முதல்…

23 mins ago

மருமகள் பற்றி தெரியாமல் மொத்தத்தையும் உளறிய கோமதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி ஆசைப்பட்ட மாதிரி டியூஷன் எடுப்பதற்கு மீனா ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி ஹோம்…

24 mins ago

சின்ன வெங்காய காரக்குழம்பு செய்து அசத்துங்க !

சமையல் செய்யும் போது அனைவரது மனதிலும் எழும் முதல் கேள்வியே இன்னைக்கு என்ன சமையல் என்பதே. அதிலும் அதிக அளவில்…

26 mins ago

‘கருப்பன்’ விமர்சனம்

கிராமத்து பின்னணி கொண்ட படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, பல ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடித்திருக்கும் படம்…

30 mins ago

சரணடைந்தேன் சகியே-28

28   “வெல்கம் அகிரோட்டோ..” வலது கையால் அகிரோட்டோவின் கையை குலுக்கியபடி இருந்த பாலகுமரன் இடது கையால் சஸாக்கியின் கை…

4 hours ago

மணி பிளான்ட் நடும்போது இந்த ரெண்டுல ஒன்னு போட்டு நடுங்க..!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மணி பிளான்ட் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் பணம் பெருகுவது மட்டுமின்றி,…

4 hours ago