Categories: CinemaEntertainment

தீபாவளிக்கு டிஆர்பி-ஐ அடித்து நொறுக்க திட்டம் தீட்டும் 4 சேனல்கள்..

இந்த வருஷம் தீபாவளிக்கு தியேட்டரில் என்ன படம் ரிலீஸ் ஆகிறது என்ற ஆர்வத்தை விட டிவியில் போடும் படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக சீரியல்களில் டிஆர்பிக்காக அடித்துக் கொண்டிருந்த ஐந்து சேனல்கள் இந்த தீபாவளி அன்று டிஆர்பிஎல் முதலிடம் வந்து விட வேண்டும் என சூப்பர் ஹிட் படங்களை இறக்கி இருக்கிறார்கள். அந்த படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.



சன் டிவி: தீபாவளியன்று டிஆர்பியில் முதலிடத்தில் வந்து விட வேண்டும் என சன் டிவி முழுமூச்சாக இறங்கிவிட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை போட இருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் மூலம் ஏற்கனவே வசூலை அள்ளி விட்டதால், படம் ரிலீஸ் ஆகி இரண்டே மாதத்தில் டிவிக்கு வந்துவிட்டது.

விஜய் டிவி: விஜய் டிவியில் ஏற்கனவே தீபாவளி அன்று கலகலப்பான நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அதையும் தாண்டி சின்ன பட்ஜெட்டில் வெளியாகி கோடிக்கணக்கில் வசூலித்த போர் தொழில் படத்தை போட இருக்கிறார்கள். அதே போன்று விஜய் ஆண்டனி நடித்த சமீபத்தில் ரிலீசான பிச்சைக்காரன் 2 படமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.



கலைஞர் டிவி: டிஆர்பிக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என எப்போதுமே கலைஞர் டிவி ஒதுங்கி தான் இருந்து வருகிறது. ஆனால் இந்த தீபாவளி அன்று அந்த சேனலும் போட்டியில் களம் இறங்குகிறது. நடிகர் அஜித்குமார் நடித்து போன வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த துணிவு படத்தை ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜீ டிவி: முன்னணி சேனல்களான சன் டிவி மற்றும் விஜய் டிவியுடன் தீபாவளிக்கு போட்டியாக ஜீ தமிழும் இறங்குகிறது. இந்த வருடத்தில் ரிலீஸ் ஆகி அதிக அளவில் வரவேற்பை பெற்ற மார்க் ஆண்டனி படத்தை போட இருக்கிறார்கள். இந்த படத்திற்கு எந்த அளவுக்கு தியேட்டரில் ரெஸ்பான்ஸ் இருந்தது அதைவிட பல மடங்கு தீபாவளி அன்று சின்னத்திரையில் இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை தீபாவளி பொங்கல் போன்ற விழாக்களின் போது சின்னத்திரையில் ஓடும் படங்களுக்கு மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது டெக்னாலஜி அதிகமாக வளர்ந்து விட்ட காலகட்டத்தில் சின்னத்திரையில் போடும் படங்கள் மீது அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த தீபாவளிக்கு மேற்கண்ட நான்கு சேனல்களும் தேர்ந்தெடுத்து இருக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் என்பதால் சின்னத்திரை ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.



What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
3
+1
0
+1
2
+1
2

Radha

Recent Posts

முத்துவுக்கு உதவும் பாட்டி ..சிறகடிக்கும் ஆசை சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பாட்டிக்கு பிடித்த கிப்டை யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பாட்டி ஒரு சிறந்த…

27 mins ago

தக்காளி விளைச்சலில் கோடிகளை அள்ளும் தெலங்கானா வியாபாரி! அவரின் சாதனை ரகசியம் என்ன?

தெலங்கானா மாநிலம் முகமது நகரை சேர்ந்தவர் பான்ஸ்வாடா மகிபால் ரெட்டி ஒரு தக்காளி விவசாயி. கடந்த ஆண்டு அவர் பல…

28 mins ago

ஏஐ மூலம் திரைப்படங்களில் விஜயகாந்த்.. திடீரென பிரேமலதாவின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ டெக்னாலஜி மூலம் மறைந்த திரையுலக பிரபலங்களை திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. மறைந்த பாடகர்கள் ஷாகுல் ஹமீது மற்றும்…

3 hours ago

உங்கள் ஆதார் கார்டு தொலைஞ்சு போச்சா? திரும்ப பெற ஈசியான 2 வழிகள்!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் ஆதார் அட்டை, ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.…

3 hours ago

காலில் உள்ள கருமை நீங்க இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்..!

கோடை காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது.. ஆனாலும் வேலைக்காரணமாக நாம் வெளியில் செல்லும்போது வெயிலில்தான் செல்ல வேண்டியுள்ளது.. அதனால் சருமத்தில்…

3 hours ago

எதிர்நீச்சல் சீரியல் முடிய காரணமே இதுதான்.. இயக்குனர் கொடுத்த விளக்கம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஜூன் 8-ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து அந்த…

3 hours ago