மகாபாரதக் கதைகள்/ கிருஷ்ணர் ஏன் சிசுபாலனின் 100 தவறை மன்னித்தார்!

சேதி நாட்டின் மன்னனின் குலத்தில் சிசுபாலன் மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் பிறந்தான். அவன் சிசுபாலன் பிறந்ததும், கழுதைக் குரலில் கதறி ஊளையிட்டான். இதனால் அவனது சிசுபாலனது தந்தையும் தாயும் உறவினர்களும் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். இந்த இயல்புக்குமிக்க சகுனங்களைக் கண்ட அவனது பெற்றோர் அவனைக் கைவிடத் தீர்மானித்தனர்.

ஆனால், ஒரு அரூபமான குரல், அந்த நேரத்தில் ஒலித்து, துயரத்தில் மூழ்கியிருந்த மன்னனிடம், அவனது மனைவி, அமைச்சர்கள் புரோகிதர் ஆகியோர் முன்னிலையில், “ஓ மன்னா, இந்த உனது மகன், நற்பேறு பெற்றவனாகவும், பலத்தில் மேன்மையானவனுமாக இருப்பான். ஆகையால் நீ அச்சப்பட வேண்டாம். கவலையில்லாமல் இந்தக் குழந்தையை நீ வளர்த்து வா. அவன் (குழந்தைப் பருவத்திலேயே) இறந்து போக மாட்டான். அவனது காலம் {இறப்பு} இன்னும் வரவில்லை. ஆயுதங்களால் இவனை கொல்லப் போகிறவனும் ஏற்கனவே பிறந்துவிட்டான்” என்றது {அந்த அரூபமான குரல்}.



இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குழந்தையின் தாய், துயர மிகுதியால் அந்த அரூபக் குரலிடம், “எனது பிள்ளையை மதித்து இந்த வார்த்தைகளை உதிர்த்தவன் முன்னிலையில் நான் குவிந்த கரங்களுடன் வணங்குகிறேன். அவன்  தெய்வீகமானவனா அல்லது வேறு ஏதாவது உயிர்வகையைச் சேர்ந்தவனா என்று அவனே  சொல்லட்டும். எனது மகனை  கொல்லப் போகிறவன் எவன் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றாள். அதற்கு அந்த அரூபக் குரல், “யார் மடியில் இக்குழந்தையை வைக்கும்போது, இவனது மிகுதியான கரங்களும் ஐந்து தலை நாகத்தைப் போல தலை விழுமோ, யாருடைய பார்வை பட்டதும், இவனது மூன்றாவது கண் மறைகிறதோ, அவனே இக்குழந்தையைக் கொல்லப் போகிறவன்” என்றது. குழந்தையின் மூன்று கண்களையும், நான்கு கரங்களையும், அரூபக் குரலின் வார்த்தைகளையும் கேள்விப்பட்ட உலகத்தின் மன்னர்கள் அனைவரும் சேதிக்கு அவனைக் காணச் சென்றனர். சேதியின் மன்னன் அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் தகுதிக்கேற்ப வழிபட்டு, அவர்கள் மடியில் ஒருவர் பின் ஒருவராக வைத்துப் பார்த்தான். ஒருவர் பின் ஒருவராக ஆயிரம் {1000} மன்னர்கள் மடியில் வைத்தும், அந்த அரூபக் குரல் சொன்ன வேளை வரவில்லை.



துவாராவதியில் {துவாரகையில்} இவையனைத்தையும் கேள்விப்பட்ட பெரும் பலம் வாய்ந்த யாதவ வீரர்களான சங்கர்ஷனனுன் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, சேதியின் தலைநகருக்கு யாதவர்களின் மகளான , தங்கள் தந்தையின் தங்கையை {அத்தையைக்} காணச் சென்றனர். அங்கே அவரவர் தகுதிக்கேற்ப அனைவரையும் வணங்கி, மன்னனையும் ராணியையும் வணங்கி, அனைவரின் உடல்நலனையும் விசாரித்த ராமனும் {பலராமனும்}, கேசவனும் {கிருஷ்ணனும்} தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். பதிலுக்கு அந்த வீரர்கள் வணங்கப்பட்டதும், பெரும் மகிழ்ச்சியுடன் இருந்த ராணி {சேதி நாட்டின் ராணி} தானே தனது குழந்தையை {சிசுபாலனை} தாமோதரனின் {கிருஷ்ணனின்} மடியில் வைத்தாள். அந்தக் குழந்தை {சிசுபாலன்} அப்படி மடியில் வைக்கப்பட்டதும், அந்த தேவைக்கதிகமான கரங்கள் கீழே விழுந்தன. நெற்றியில் இருந்த கண்ணும் மறைந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராணி துயரத்துடன் கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்டாள்.



அவள்  “ஓ பெரும் பலம் கொண்ட கிருஷ்ணா, நான் பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு ஒரு வரம் தா. துயர் நிறைந்தவர்களுக்கு துன்பத்தைக் களைய உறுதியளிப்பவன் நீயே. அனைவரின் பயத்தையும் விலக்கவல்லவன் நீயே”, என்றாள். இப்படி அவளால்  கேட்டுக் கொள்ளப்பட்ட யது குலத்தின் கிருஷ்ணன், “ஓ மரியாதைக்குரியவளே, பயப்படாதே. நீ நீதிகளை அறிந்தவள். உனக்கு என்னிடம் எந்த அச்சமும் இருக்காது. நான் உனக்கு என்ன வரம் தர வேண்டும்? ஓ அத்தை, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? என்னால் முடிந்தாலும் முடியாவிட்டாலும், உனது உத்தரவை நிறைவேற்றுகிறேன்” என்றான். இப்படி கிருஷ்ணன் சொன்னதும், ராணி, “ஓ பெரும் பலம் கொண்டவனே {கிருஷ்ணா}, சிசுபாலன் செய்யும் குற்றங்களை நீ எனக்காக மன்னிக்க வேண்டும். ஓ யது குலத்தின் புலியே. ஓ தலைவா, நான் கேட்கும் இதுவும் ஒரு வரம் தான் என்பதை அறிந்து கொள்”, என்றாள். அதற்கு கிருஷ்ணன், “ஓ அத்தை, அவன்  கொல்லப்படத் தகுதி வாய்ந்தவனாக இருந்தாலும், நான் அவனது நூறு {100} குற்றங்களை மன்னிப்பேன். நீ வருந்தாதே” என்றான் {கிருஷ்ணன்}.

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ பீமா, இப்படி இந்தப் பாவி மன்னனான தீய இதயம் கொண்ட சிசுபாலன், கோவிந்தன் {கிருஷ்ணன்} கொடுத்த வரத்தால் கர்வம் கொண்டு, உன்னைப் போருக்கு அழைக்கிறான்.

கங்கை மைந்தன்  பீஷ்மரை  வேசிமகன் என்று ஏசினான். (கங்கையில் பலரும் நீராடுவதால் கங்கையை பொதுமகள் என்று ஏசினான்) சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக்கொண்டிருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் அவனின் மரணம் நெருங்கி வருவதை உணர்ந்து அவன் மீது சக்காரயுதத்தை   செலுத்தினார். அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்தெறிந்தது.



What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-15

15 மறுநாள் கண்விழித்த உடனேயே வேறு இடத்தில் இருப்பதை உணர்ந்துகொண்ட சஷ்டிகா, சட்டென எழுந்து அமர்ந்தாள். "என்னடா பாப்பா எழுந்து…

3 hours ago

புருஷனை தன் கைக்குள் போட்ட தங்கமயில்…..பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில், புருஷனை தன் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றுமே…

3 hours ago

நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்…

3 hours ago

’7ஜி’ (7G) திரைப்பட விமர்சனம்

ரோஷன் பஷீர் - ஸ்முருதி வெங்கட் தம்பதி தனது மகனுடன் அடுக்குடிமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள். தனது நீண்டநாள் சொந்த…

3 hours ago

சரணடைந்தேன் சகியே – 25

25       “அம்மா நான் போயிட்டு வர்றேம்மா..” சஸாக்கி வேலைக்கு கிளம்பிவிட்டாள்.. அன்னத்திற்குத்தான் மிகுந்த கவலை.. மகள்…

7 hours ago

ஈஸ்வரியை தூக்க வரும் போலீஸ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா அப்செட்…

7 hours ago