தங்கம் வாங்க ஏற்ற நேரம்…



இப்போது இருக்கும் கூட்ட நெரிசலில் எல்லோராலும் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கி விட முடியாது. அதனால் ஏப்ரல் 22ம் தேதி காலையில் உப்பு, மஞ்சள், மல்லிகை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி பூஜை செய்யுங்கள்.

செல்வ வளம் பெருக அட்சய திருதியை நாள் மிக உன்னதமான நாளாகும். இந்து புராணங்களின்படி பல விதமான சிறப்புகளைக் கொண்டது இந்த அட்சய திரிதியை நாள். மகாலட்சுமியின் அருளை முழுவதுமாக பெறும் நாள் இது. இந்த நாளில் நாம் தன லட்சுமியை வழிபட்டால் அவரின் முழு அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



அட்சய திரிதியை 2023 தேதி மற்றும் நேரம்

இந்த 2023ம் ஆண்டு அட்சய திரிதியை வரும் ஏப்ரல் 22ம் தேதி வருகிறது என நாட்காட்டிகள் பல வற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சில நாட்காட்டிகள் ஏப்ரல் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் அட்சய திரிதியை என்று குறிப்பிட்டுள்ளன. இதனால் அட்சய திரிதியை சனிக்கிழமையான ஏப்ரல் 22ம் தேதியா அல்லது ஞாயிற்றுக் கிழமையான ஏப்ரல் 23ம் தேதியா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 22ம் தேதி துவங்கும் அட்சய திரிதியை ஏப்ரல் 23ம் தேதி வரை நிகழ்கிறது. இதனால் இரண்டு தினங்களில் எந்த நாளை அட்சயதிரிதியை பூஜை செய்யவும், தங்கம் முதலிய தன பொருட்கள் வாங்கவும் உபயோகிக்க வேண்டும் என்பதில் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தங்கம் வாங்க நல்ல நாள் எது நல்ல நேரம் எது என்பதும் மக்கள் அதிகம் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.

அட்சய திரிதியை வரும் ஏப்ரல் 22ம் தேதி காலை 7 மணி 49 நிமிடங்களுக்குத் துவங்கி, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 23ம் தேதி காலை 7 மணி 47 நிமிடங்களுக்கு முடிந்துவிடுகிறது.

நீங்கள் காலை பூஜை செய்ய விரும்பினால் இரண்டு தினங்களில் ஏதாவது ஒரு நாளில் வழிபடுவதில் தவறில்லை. அதேநேரம் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டியிருக்கிறது.

தங்கம் வாங்க நல்ல நேரம்

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க பலரும் விரும்புவார்கள். குறிப்பிட்ட நாளில் தங்கம் வாங்க விரும்புபவர்கள் தாங்கள் விரும்பும் ஏதோ ஒரு நேரம் சென்று வாங்கி விட முடியாது. முக்கியமாக மதிய வேளைக்கு முன்பாகவே சூரியன் உச்சத்தை அடைவதற்கு முன்பாகவே தங்கம் வாங்க வேண்டியது அவசியம்.



காலை 8 மணி முதல் 9.30 வரை நீங்கள் தங்கம் வாங்கினால் அட்சய திரிதியை நாளின் அனைத்து பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். அதேநேரம் அதன்பிறகு வாங்கக் கூடாது என்பதல்ல.

இப்போது இருக்கும் கூட்ட நெரிசலில் எல்லோராலும் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கி விட முடியாது. அதனால் ஏப்ரல் 22ம் தேதி காலையில் உப்பு, மஞ்சள், மல்லிகை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி பூஜை செய்யுங்கள்.

தங்கம் என்பது பெரிய பெரிய நகையாகத் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. 1 கிராம் வாங்கினாலும் அது தங்கம்தான். மேலே சொல்லப்பட்ட உப்பு, மஞ்சள், மல்லிகை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ வாங்கி காலையிலேயே வழிபட்டு அதை அப்படியே சாமி படத்துக்கு முன்பு வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து முடிந்த அளவுக்கு அருகிலுள்ள தங்க வியாபாரம் செய்பவரிடம் சென்று கூட வாங்கி வழிபடலாம்.

தங்கம் மூலம் உங்கள் குடும்ப வருமானத்தை பெருக்குங்கள்!

இந்த அட்சய திரிதியை நாளில் உங்களால் முடிந்த அளவுக்கு பணத்தை நீங்கள் சேமித்து வங்கியில் போட்டு வைக்க முடியும். ஆனால் அதைவிட சிறந்த விசயம் தங்கத்தில் முதலீடு செய்வதுதான்.

இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 5665 ரூபாய் இருக்கிறது. இது ஏறும் இறங்கும். உங்களால் குறைந்தபட்சம் மாதம் 5000 ரூபாய் சேமிக்க முடிந்தால் போதும். தங்க நகைக் கடைகளில் தங்கம் வாங்க சேமிப்பு திட்டங்கள் இருக்கும். அதனைத் துவங்கி நீங்கள் வாங்கும் தங்கத்தில் லாபத்தை பெறுங்கள்.

நகையாக வாங்க விருப்பம் இல்லையென்றால் ஒரு கிராம் நாணயமாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். 10 முதல் 12 மாதங்களில் 1 சவரன் தங்கம் உங்களிடம் இருக்கும். இப்படி நீங்கள் சேமிக்கும் பணத்தில் ஒரு பங்கை தங்கமாக சேமித்தால் நாளை அதை விற்கும்போது மிகப்பெரிய தொகை உங்கள் கையில் வரும்.

மாதம் 5000 ரூபாய் சேமித்து 10 வருடங்களில் 6 லட்சம் ரூபாய் உங்கள் கைகளில் வந்தால், அதைக் கொண்டு நீங்கள் தங்கம் வாங்கும்போது கிட்டத்தட்ட 10 சவரன் தங்கம் கிடைக்கும் என்றால், அதையே மாதாமாதம் எடுத்து வைக்கும் பட்சத்தில், உங்களிடம் இருக்கும் தங்கத்தை 10 வருடங்கள் கழித்து அந்த விலைக்கு விற்கும்போது கூடுதலான பணம் கிடைக்கும் அல்லவா?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

52 mins ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

54 mins ago

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

3 hours ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

3 hours ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

3 hours ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

4 hours ago