18

தலைகோதல் ஒன்றிற்கான தாபத்திலிருக்கையில்
இன்னமும் வாசற்படி அப்புறம் என்னடா வேலை …?

 

 

த்தை நீங்கள் என் மாடி தோட்டத்தை பார்த்ததில்லையே .வாருங்களேன் .என்னென்ன செடி வைத்திருக்கிறேனென காட்டுகிறேன் ….” மாலை வீடு திரும்பியதுமே மங்கையர்கரசியை அழைத்தாள் வேதிகா .



” ம்க்கும் குச்சியா …குச்சியாக நாலு செடியை நட்டு வச்சுட்டு , தோட்டம்னு பெருமை பீத்துவா …போகாதீங்கண்ணி …” என்ற விசாலாட்சியை அறையலாமா என்று வந்த்து வேதிகாஙிற்கு .

” ஏய் விசாலி நீ வாயை மூடலை ,என் அப்பாகிட்ட பேசி உன்னை உன் அம்மா வீட்டிற்கு பேக் பண்ணடுவேன் .என் வாழ்க்கையில் வில்லி மாதிரி தலையிடாதே …” பல்லை கடித்தபடி அம்மாவின் காதிற்கு மட்டும் பேசினாள் வேதிகா .அருகிலிருந்த மங்கையர்கரசிக்கு வேதிகாவின் மிரட்டல் தெளிவாக கேட்க , அவள் பீறிட்ட சிரிப்பை அடக்க வாயை சப்பென கைகளால் மூடிக்கொண்டாள் .

விசாலாட்சி மகள் சொன்னாளென தன் கணவன் தன்னை அம்மா வீட்டிற்கு அனுப்பி விடுவானா என்ன …? தீவிர யோசனையில் விழுந்தாள் .

” வாங்க அத்தை …” குரலில் மென்மையும் , விழியில் மிரட்டலுமாக மாமியாரை அழைத்தாள் .வர மாட்டேன் என்னடி செய்வ …பார்வை பார்த்தபடி ” நான் சீரியல் பார்க்கனும் ” என்றாள் மங்கையர்கரசி .

” அட சும்மா வாங்கத்தை …இவனுங்க என்ன பாம்பு காட்டுறாங்க.என் கூட வாங்க விதம் விதமா படமெடுக்கிறேன் …..”  வேதிகாவின் மிரட்டல் பாம்பின் சீறல் போலவே ஒலித்தது .

இவளுடன் தனியாக போனால் இவள் நிஜம்மாகவே பாம்பாக மாறி கொத்துவாளோ …பயம் கலந்த மிரட்சியுடன் விசாலாட்சியை பார்க்க , அவளோ கணவன் தன்னை அம்மா வீட்டிற்கு பேக் பண்ணும் கவலையில் ஆழ்ந்திருந்தாள் .அவளிடமிருந்து தனக்கு ஆதரவு கிடைக்காது என உணர்ந்தவள் தலையாட்டியபடி பலியாடாக மாடிப்படி ஏறினாள் .

மாமியாருக்கு நிதானதாக தனது ஒவ்வொரு செடியையும் விளக்கிய வேதிகா ….அப்போதெல்லாம் நல்ல மூடில் …அக்மார்க் மருமகளாகத்தான் இருந்தாள் .அந்த மல்லிகை கொடி அடியில் வந்து அமர்ந்த்தும்தான் அவள் நடவடிக்கை மாறிப்போனது .ஒரு மாதிரி தீவிர மனோபாவத்தை முகம் ஒட்ட வைத்து கொண்டது .இவள் …உண்மையிலேயே இப்படிப்பட்டவளா …இல்லை இந்த மல்லிகை கொடி இவளை மாற்றிவிட்டதா ….அன்று அமர் கூட இந்த மல்லிகை கொடி பற்றி ஏதோ சொல்ல வந்தானே ….  ஐய்யையோ இப்படி பார்த்து தொலைகிறாளே ….என்ன கேட்கப் போகிறாளோ …? பதறிய உள்ளத்தை மறைத்தபடி ஒப்புக்கு சிரித்து வைத்தாள் மங்கையர்கரசி .

” உங்கள் மகனுக்கும் …உங்களுக்குமிடையே என்ன அத்தை ….? ” நேரடியாகவே விசயத்திற்கு வந்தாள் வேதிகா .

கிராதகி …பட்டு பட்டுன்னு கரெக்டா பாயிண்டை பிடிப்பாள் ….மனதிற்குள் மருமகளை வைதபடி …” எங்களுக்குள் என்ன …ஒன்றுமில்லையே .சராசரி அம்மா …மகனை போல்தான் நாங்களும் ….” சமாளித்தாள் .

” அப்படியா … சொல்கிறீர்கள் …? ” வேதிகா அநியாயத்திற்கு ஆச்சரியப்பட்டாள் .

” அன்றாடம் மகனுக்கு சமைத்து , துணி துவைத்து அவனை வேலைக்கு அனுப்பும் சராசரி அம்மாவா நீங்கள் …? “

” ஏய் …என்னடி உன் பிரச்சனை …? எதற்காக இப்படி துருவுகிறாய் ….? “

” ஐந்து வயது பாலகனை …தன் ஒரே மகனை …தன் அன்பை விட்டு விலக்கி வைக்க நினைப்பாளா ஒரு தாய் …? “



” போடி …எல்லாம் தெரிந்தவளை போல பேசாதே …”

” கொஞ்சம் உங்கள் மகனிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் அத்தை .கொஞ்சம் நானாக ஊகித்தேன் .திலகவதி சித்தி தன் கணவரை இழந்து உங்கள் வீட்டிற்கு வந்து தங்கியதும் , அவரது துக்கத்தை குறைப்பதற்காக உங்கள் மகனை அவருக்கென தாரை வார்த்து கொடுத்து விட்டீர்களா அத்தை …? “

மங்கையர்கரசி அயர்ந்தாள் .எவ்வளவு சரியாக இலக்கை தாக்குகிறாள் ….?

” திலகவதி எங்கள் வீட்டிற்குள் வந்த்தும் எங்கள் வீட்டு பொறுப்பு அனைத்தையும் அவளாகவே ஏற்றுக் கொண்டாள் .அதுவே எனக்கு பழகிப்போய் , என் உடம்பு சோம்பல்பட்டு போனது .அதனால் அமரின் வளர்ப்பை கூட அவளிடம் விட்டு விட்டு நான் எனது சுக வாழ்வில் மூழ்கி போனேன் ….” எந்திரமாய் ஒப்பித்தாள் .

” இது அடுத்தவர் கண்களுக்கு நீங்கள் போட்ட வேசம் .இதனையே என்னிடமும் சொல்லாதீர்கள் ….”

”   இத்தனை வருடங்களாக  அமர் கூட இதைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறான் .”

” ஒரு பெண்ணால்தான் பெண்ணின் நுட்ப உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியும் அத்தை .ஆண் ஒரு தட்டு மேலேறி நின்றே பழகுகிறான் .பேசுகிறான் .அதிலிருந்து அவனால் கீழிறங்கி வர முடியாது .அவனை சொல்லியும் குற்றமில்லை .நம் சமூக கட்டமைப்பு அப்படி .நீ உயர்ந்தவனென அவனை ஒரு படி மேலேற்றி வைத்தே நாம் பழக்கிவிடுகிறோம் .அவனும் அதிலேயே நிற்கிறான் .அவனை கீழிறக்கி நம்முடன் சேர்த்துக் கொள்ளும் யுக்தியை நாம்தான் பிரயோகிக்க வேண்டும் அத்தை …”

” எனக்கு அதற்கான சூழ்நிலைகள் ஏற்படவில்லை ….” மங்கையர்கரசியின் குரல் தழுதழுத்திருந்த்து .

” அந்த சூழ்நிலைகளை நான்தான் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கவில்லையா அம்மா …? ” நெகிழ்வாய் பின்னால் கேட்ட அமரின் குரலில் மங்கையர்கரசியின் உடல் தூக்கி போட்டதை அவள் கைகளை பற்றியிருந்த வேதிகாவினால் உணர முடிந்த்து .

” நாங்கள் பெண்களாக பேசிக் கொண்டிருக்கையில் இப்படித்தான் திடுமென அறிவிப்பின்றி வந்து நிற்பீர்களா …? ” கணவனை முறைத்தாள் .

” பெண்களென்றாலும் நீங்கள் இருவரும் எனது முக்கிய உறவுகள் வேதா .உங்களிடம் எனக்கு அதிகாரம் இருக்கிறது .உரிமை இருக்கிறது …” சொன்னபடி தாயின் முன் மண்டியிட்டு அமர்ந்தான் அமரேசன் .

” அதிகாரமும் , உரிமையும் நாங்களாக கொடுக்க வேண்டும் .நீங்களாக எடுத்துக் கொள்ளகூடாது ….”

” ஷ் …உன்னிடம் சண்டையிட வரவில்லை வேதா .நான் அம்மாவிடம் என்னை தெளிவு படுத்திக் கொள்ள வந்தேன் .அம்மாவிற்கும் , மகனுக்குமிடையேயான ஒரு தெளிதலுக்கு காலமும் , நேரமும் எதற்கு …? சொல்லுங்கள் …எங்கே …எப்போது …நான் உங்களை தவறவிட்டேன்…”

மங்கையர்கரசியின் முகம் பழைய பாவனையை சுமந்திருந்த்து .பற்றற்ற யோகினியின் முகத்தை கொண்டிருந்தாள் அவள் .

” நீங்களாக என்னை ஒரு போதும் அரவணைத்ததில்லையே அம்மா .நானாக தேடி வந்த போதும் …என்னை புறக்கணித்திருக்கிறீர்கள் .அத்தையிடம் போ என விரட்டியிருக்கிறீர்கள் …ஏன்மா …? “

” அப்போது எனக்கு நீங்களதான் வேண்டும் அம்மா என நீங்கள் கேட்டிருக்கலாமே …? ” கணவனுக்கு சொல்லிக் கொடுத்தாள் .

” அப்போது அந்த அளவு தோன்றவில்லை வேதா .சிறுபிள்ளைதானே .உடனே அரவணைக்க தயாராக இருந்த அத்தையின் மடியில் புகுந்து கொண்டேன் .ஆனால் முழு மனதோடு அல்ல .சிறு உறுத்தலோடுதான் … இப்போது எனக்கு நீங்களதான் வேண்டும் அம்மா .உங்கள் மடியில் நான் படுத்துக் கொள்ள வேண்டும் …” அமரேசன் சொன்னதோடு சட்டென தாயின் மடியில் தலை வைத்துக் கொண்டான் .

ஒரு நிமிடம் உடல் சிலிர்க்க  , கண் மூடி அமர்ந்திருந்த மங்கையர்கரசியின் கரங்கள் மகனின் தலை வருட உயர்ந்த்து .பிறகு நிதானித்து ” எனக்கு பிடித்த சீரியல் ஆரம்பித்துவிட்டது .நான் பார்க்க போகிறேன் ….” சொன்னதோடு மகனின் தலையை பற்றி நிமிர்த்திவிட்டு எழுந்து உள்ளே போய்விட்டாள் .கணவனும் , மனைவியும் உறைந்து போய் அமர்ந்திருந்தனர் .



இப்போது என்ன செய்ய ….பார்வையால் கேட்ட கணவனுக்கு பதில் சொல்ல முடியாமல் மாமியார் மேல் கோபம் வந்த்து வேதிகாவிற்கு .இவர்களை என்ன செய்வது …யோசனையுடன் இருந்தவளின் மடி கதகதப்பாய் நிரம்பியது .

” நீயும் உதறிவிடாதே வேதா ….” வேண்டுதலுடன் மடி சாய்ந்திருந்த கணவனை விலக்க முடியவில்லை அவளால் .

” என் சிறு வயதிலிருந்தே அம்மா  இப்படித்தான் வேதா .மடியிலேயே படித்தாலும் எழுப்பி விட்டு விடுவார்கள் .அத்தை பக்கம் கை காட்டி விடுவார்கள் .நான் என்ன செய்ய முடியும் …? ”
” கணவரை இழந்த உங்கள் அத்தையின் ஆறுதலுக்காக அத்தை இப்படி செய்திருப்பார்களோ …? “

” அததையும் தன்  குழந்தையோடுதானே இருந்தார்கள் …? ஆறுதலுக்கு என்னை ஏன் அளிக்கவேண்டும் ….? “

” உங்களை மட்டுமில்லையே ..தன் வீட்டையும் சேர்த்துதானே அளித்திருக்கிறார்கள் ….”

” அதுதான் எனது குழப்பமும் வேதா .இப்படி தன்னுடையது எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் அளவு அம்மாவிற்கு அத்தையிடம் எந்த ஈடுபாடும் கிடையாது ….”

” ம் …தன் நகைகளை கூட சித்தியிடம் காட்டாமல் மறைத்து வைத்திருந்தார்களே ….” நினைவு கூர்ந்தாள் .

” அதேதான் …எனதளவு பிரியம் கூட அத்தையிடம் அம்மாவிற்கு கிடையாது .இதனால் சில நேரம் நான் அவர்களிடம் எரிச்சல் பட்டிருந்திருக்கிறேன் ….”

” ஓ ….இது வேறா …அம்மாவை ….மனைவியை …உங்கள் அத்தையை காட்டி திட்டிவிட்டு ,பிறகு ஏன் என்னை விட்டு ஒதுங்குகிறீர்கள் என்று வேறு கேட்பீர்களா ….? “

” ஏய் வேதா உண்மையை சொல் .அன்று …நீ ..தவறாக …அதாவது என்னையும் , மௌனிகாவையும் …சம்பந்தப்படுத்துவது போல் ….ஏதோ பேசவில்லையா …?அது தவறுதானே …அதனால்தான் ….”

அன்று ….

மறுவிட்டு விருந்திற்காக வேதிகா கணவன் வீட்டிற்குள் வலது கால் வைத்து நுழைந்த நேரத்திலிருந்து , அங்கே திலகவதி தனது அதிகாரத்தை  சொல்லிலும் , செயலிலிலும் காட்டிக் கொண்டிருந்தாள் . ஏற்கெனவே மனம் ஒப்பா திருமண பந்த்ததில் கட்டுண்டிருந்த வேதிகாவின் மனம் , முன்தின இரவு கணவனின்  அவசர ஆளுமையில் சோர்ந்து சுருண்டிருந்த்து .கணவன் , மனைவிக்கிடையேயான அந்த இயற்கை நிகழ்வை இன்னமும் அவளது மனமும் , உடலும் ஒப்புக்கொள்ளாத நிலையில் …ஒவ்வொரு சிறு செயலிலும் தன் அத்தைக்கு ஆதரவு சொல்லிக் கொண்டிருந்த கணவன் அவளுக்கு சுலபமாக எரிச்சல் மூட்டிக் கொண்டிருந்தான் .

அதென்ன …அம்மாவை விடுத்து அத்தை பக்கம் பேசுகிறான் …இது இயற்கையாக இல்லையே …அவளது குழம்பிய மனதை மேலும் குழப்பினாள் திலகவதி .அமரன் தன் கைக்குள் என்றாள் .தன் சொல்படி ஆடும் பொம்மை என்றாள் .இவ்வளவையும் சொல்லில் அல்ல …ஒவ்வொரு செயலிலும் காட்டினாள் .அதுவும் அதற்கான காரணம் தன் மகளென்பது போல் தோற்றம் செய்தாள் .  நீயும் அது போல் …அவளை போல் மாறி என் பக்கம் வந்துவிடு …என திலகவதி கண் கா ட்டிய திசையில் சுற்றுப்புறம் மறந்து டிவியினுள் மூழ்கி கிடந்த மங்கையர்கரசி இருந்தாள் .

இந்த வீடே எனக்குள் ஒட்டவில்லை . இதில் இவர்கள்  போல்  ஜடமாக …தனது வாழ்வா …தானாக தலை சிலுப்பிய வளை , மௌனிகாவின் நடவடிக்கை நிறைய   குழப்பியது .

” அவள்  …மௌனிகா    வார்த்தைக்கு …வார்த்தை என் அத்தான் என்றாள. எனக்காக எல்லாம் செய்வார் என்றார் .என் பேச்சைத்தான் கேட்பார் என்றார் …” இப்போதும் வேதிகாவின் குரலில் குறைபாடு இருந்த்து .

” உன் அப்பாவை நீ இது போல் சொன்னதில்லையா …நினைத்ததில்லையா ….? இங்கே அப்பா …அத்தான் என்ற உறவு பெயர்களில்தான் வித்தியாசமே தவிர , எங்கள் உறவுகளில் வித்தியாசமில்லை .உனக்கும் , உன் தந்தைக்கும் உள்ள உறவுதான் …எனக்கும் மௌனிகாவிற்குமான உறவும் ….” பேசிக்கொண்டே போன அமரேசன் தன் கன்னம் நனைத்த சூடான கண்ணீர் துளிகளில் நிமிர்ந்து பார்த்தான் .

” சாரி …” உதிர்ந்து கொண்டிருக்கும் கண்ணீர் துளிகளை துடைக்கவும் தோணாமல் விசித்திருந்த மனைவியின் கன்னங்களை  கரம் உயர்த்தி  துடைத்தான் .

” முதல் நாள்தான் நமக்கு திருமணம் முடிந்திருக்கிறது .இன்னமும் நா …நாம் முழுமையாக ஒருவரோடொருவர் பேசிக்கொள்ள கூட இல்லை .அதற்குள் உங்களை ஒரு இளம் பெண் ,உங்களை மணமுடிக்கும் உறவு முறையில் இருப்பவள் ,   எனக்குத்தான் முதன்மை என உரிமை கொண்டாடுகிறாள் .அப்போது …நா …நான் …எ…என்ன செய்ய முடியும் …? “



” என்னிடம் நேரடியாக கேட்பது …”

” அ…அது …அப்போது …” வேதிகா திணறினாள் .அப்போது அவள் மனதில் அமரேசனே குற்றவாளி நாற்காலிக்கு மிக அருகில்தான் அமர்ந்திருந்தான் .எப்போது வேண்டுமானால் அவனை அந்த நாற்காலியில் அமர்த்திவிடும் வேகத்தில் இருந்தாள் வேதிகா .இந்த நிலைமையில் …கணவன் வீட்டற்குள் நுழைந்த்தும் அவள் மனதில் வந்தி விட்ட சந்தேகத்திற்கான தீர்வை எப்படி அவனிடமே தீர்க்க முயல்வாள் …? அப்படியும் அதறகு அவள் முயற்சிக்கத்தான் …ஆனால் …அவன்தான் …வேதிகாவின் கன்னங்கள் சிவக்க ஆரம்பித்தது .

உன் மாமியாரை போல் நீயும் வீட்டின் ஒரு மூலையில் இருந்து கொள் …வீடு முழுவதும் நிறைந்திருந்த உறவினர்களுக்கிடையேயும் , தனது ஒவ்வொரு சின்ன செயலிலும் திலகவதி இதையேதான் காட்டிக் கொண்டிருந்தாள் .அமரேசன் வேறு ….எந்த வேலைக்கும் அத்தையிடம்தான் வந்து நின்று கொண்டிருந்தான் .அவளையும் நிற்க வைத்தான் .

” உங்கள் துணிகளை …அதோ …அந்த ஸ்டோர் ரூமிற்குள் இருக்கும் பீரோவினுள் அடுக்கிக் கொள்ளுங்கள் .இங்கே இருக்கும் பீரோவினுள் என் துணிகள் இருக்கிறது …” அமரேசன் அறை எனச் சொல்லப்பட்ட அறையினுள் இருந்த இரண்டு பீரோக்களில் ஒன்றை மறைத்து நின்றபடி சொன்னாள் மௌனிகா .

அமரேசன் அறைக்குள் வீடு முழுவதும் நடமாடிக் கொண்டிருந்த உறவினர்களில் யாரும் காலைக் கூட வைக்கவில்லை .இவள் மௌனிகா மட்டும்தான் சுத்ந்திரமாக அறயினுள் வந்த போய் கொண்டிருந்தாள் .அதுவே வேதிகாவை உறுத்திக் கொண்டிருக்க …இப்போது இந்த அந்நியோன்னிய உரிமை செயல்பாடு வேறு அவளுக்கு கொதிப்பை கொடுத்தது .

வேறு வழியின்றி இதனை உடனடியாக கணவனின் காதிற்கு கொண்டு சொல்ல முடிவு செய்தாள் .ஆனால் அவன் …..????

What’s your Reaction?
+1
4
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Padma Grahadurai

Website Admin

Recent Posts

தூங்கி எழுந்த பிறகும் சோர்வாக இருக்கீங்களா ?

காலையில் தூங்கி எழுந்தவுடன் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும் என அனைவரும் விரும்புவோம். ஆனால் சிலர் தூங்கி எழுந்த பிறகே…

43 mins ago

ருசியான மட்டன் குருமா

கறிக்குழம்பு, பிரியாணி, குருமா, சுக்கா, வறுவல் என மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதிலும் மட்டன் வைத்து தயாரிக்கப்படும்…

47 mins ago

ஸ்டார் விமர்சனம்

சுக்குநூறாக உடையும் கனவுகளின் கண்ணாடி சிதில்களை ஒவ்வொன்றாக சேர்த்து மீண்டும் கனவு மாளிகை கட்ட முயற்சிப்பதே ‘ஸ்டார்’. சினிமாவில் நாயகனாகும்…

49 mins ago

உடலென நான் உயிரென நீ-7

7 வாசலில் பிரம்மாண்டமான நான்கு தூண்களை தாங்கி நின்ற அந்த பெரிய வீட்டின் தோற்றம் ஏதோ ஓர் இந்திப் படத்தில்…

5 hours ago

அன்னையர் தினம் வரலாறு

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அன்னையர் தினம் தோன்றிய வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, அன்னையர் தினம்…

5 hours ago

உண்மையை உடைத்த பாக்யா-பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சோபாவில்…

5 hours ago