Categories: Kavithaigal

En Karpanaiyin Gethangal

நட்சத்திரச் சொட்டுக்கள் 

 

நனைந்த  இருளுள் 
நட்சத்திரச் சொட்டுக்கள்  நிறையத்
தொடங்குகையில் 
சுலபமாய் இறங்குகிறேன் 
ஞாபகங்களுள்
எனைத் துருவி எடுக்கும்
உன் தோளசைவுகள்
என் தேகம் கிளறும் உன் பார்வைகள்
திடமான உன் உடலுள்
புதைகிறேன் திரும்பவும்
மழையிரவு கலைந்த பிறகு
காம்பு சிவந்த பவள மல்லிகள்
கவலையற்றுக் கிடக்கின்றன
வாசலில்.

முயற்சி

 

 

பாவங்களை மன்னிப்பிற்கு அனுப்பிவிட்டு 
நியாயங்களுக்கு தயாரிக்கப்படும் சிலுவைகள் சுமக்கும் ஏசுபிரான்களுக்கு 
சூட்டப்படும் முள்கிரீடங்கள்
சீழுடைத்து பெருகிய நிணங்கள் ,
காத்திருக்கின்றன 
அதிகாலை விடியலுக்காய் ,
கிடைக்காத வெற்றிக்கான தகுதியோடு 
சுற்றியலையும் பச்சைப் பறவை ,
ஊதி ஊதி …மேகங்கலைத்து 
வெளிப்படுத்த முயற்சிக்கிறது
ஆதவனின் ஓர கதிரொன்றை .
What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Share
Published by
Padma Grahadurai

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

1 hour ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

2 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

2 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

2 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

5 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

6 hours ago