mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 33

                                             33

” அந்த பெங்களூர் வரனை நாளையே யமுனாவைபெண் பார்க்க  வரச் சொல்லலாம் பார்த்தா …”

” என்ன அவசரம் மேகா …? “

”  பொருத்தம் இருந்ததே …குடும்பமும் நல்ல குடும்பம் .ஏன் தள்ளி போடனும் …? “

” எ …எந்த வரன் அண்ணா …? ” யமுனா தடுமாறினாள் .

” இது …” அவள் முன் ஜாதக  பேப்பரை ஆட்டினாள் மணிமேகலை .

அதை பற்ற போன யமுனாவின் கையிலிருந்து மேலே தூக்கி தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டாள் .

யமுனா முகம் வாட , பார்த்தசாரதி ” இந்த வாரத்திற்குள் நல்ல நேரம் பார்த்து ஏறபாடுகள் செய்யுங்கள் அம்மா ” என்று விட்டு எழுந்தான்  .

” நீ சொன்னது நிஜம்தான்  மேகா .யமுனாவின் முகத்தில் எவ்வளவு பதட்டம் …? ஆனால் ஏன் ஒ…ஒருவேளை அ…அவள் யாரையாவது காதலிக்கிறாளோ …? “

தடுமாறி நின்றவனின் முகத்திற்கு நேராக தன் முகத்தை சரித்து பார்த்து பக்கென்று சிரித்தாள் மணிமேகலை .

” பதட்டம் இப்போது உங்களிடம் தான் பார்த்தா .காதலித்தால் தப்பா …? “

அவள் கண்களுக்குள் பார்த்தவன் ” இல்லை காதலிப்பது தப்பில்லை …” என்றான் .

” ம் …பிறகெதற்கு அப்படி நெர்வசாக இருந்தீர்கள் …? ” பனிக்கத்தியாய் மனதில் இறங்கிய  பார்த்தனின் பார்வையின் வீரியத்தை தாங்க முடியாத தவிப்பு மணிமேகலையிடம் .

பார்த்தசாரதி அவளை அளந்தான் .அழகாக நடு வகிடெடுத்து பின்னல் பின்னியிருந்தாள் .வகிடெடுக்கும் பழக்கமே இல்லாதவள் …இங்கே இந்த வீட்டிற்கு ஏற்றாற் போல் …இப்படி தன்னையே மாற்றிக் கொண்டுள்ளாள் .

அவனது ஆட்காட்டி விரல் அவள் தலை வகிட்டின் வழி வருடி போனது .

” இந்த வகிடு உனக்கு அழகாக இருக்கிறது மேகா …”

தானே தனது உச்சியை தொட்டுப் பார்த்துக் கொண்டாள் .” நிஜம்மாகவா …? “

” ம் …துபாய் பொண்ணுன்னு சத்தியம் பண்ணினாலும் யாரும் நம்பமாட்டாங்க .பக்கா இலஞ்சி பொண்ணாயிட்ட …”

” துபாய் என் தாய் நாடா …பிழைக்க போன இடம் ….” மென் சிணுங்கினாள் .

அவள் முகத்தடியில்  ஒற்றை விரல் கொடுத்து தூக்கி தன் முகத்தின் நேராக வைத்துக்கொண்டவன்  ” நேற்று அருவியில் கோபமாடா …? சும்மா கிண்டல் செய்தேன் …நீ பாட்டுக்கு இறங்கி போய்விட்டாயே …? “

” கோபமெல்லாம் இல்லப்பா …நீங்கள் அண்ணன் தங்கைகளாக சேர்ந்து ஜாலியாக இருந்த்து போலிருந்த்து ்உங்களுக்கு ப்ரைவசி இருக்கட்டுமென்றுதான் கொஞ்ச நேரம் விலகி போனேன் .நாம் இரண்டு பேரும் சண்டை போட்டால் யமுனாவிற்கு சந்தோசம் வருமென்று தோன்றியது .அதுதான் ….உங்களோடு சும்மா ஒரு பாவ்லா சண்டை ….”

” எங்களுக்காக நீ நடித்தாயா …? ” சீட்டி போல் குவிந்து மணிமேகலையின் மூக்கில் மோதியது அவன் குரல் .

” அதில் தப்பில்லை பார்த்தா .நீங்கள் கொஞ்சம் அவர்கள் பக்கம் பேசியதும் உங்கள் தங்கைகள்   எப்படி மகிழ்ந்தார்கள் பார்த்தீர்களா ….? இது போன்ற வெளி பயணங்கள் குடும்பத்தினரிடையே ஒரு அந்நியோன்யத்தை உண்டாக்கி உறவை பிணைப்பாக்கும் .இனி கொஞ்சம் அவர்களுடன் இது போல் இயல்பாக பேசி பழகி இருங்கள் ….”




நேரடியாக அவன் கண்களை பார்க்க முடியாமல் மணிமேகலையின் கண்கள் அவன் கன்னம் , மூக்கு , மீசை , கழுத்து என தத்தி தத்தி அலை பாய்ந்த்து .அவனோ அவள் கண்களை விட்டு இம்மியும் பார்வையை நகர்த்தவில்லை .

இவன் ஏன் இப்படி பார்க்கிறான் …பார்த்தசாரதியின் கண்ணோடு கண் பார்வை மணிமேகலையின் உடல் முழுவதையும் தித்திப்பான ஜீராவினுள் அமிழ்த்தியது .

” ம் …அம்மாவையும் , தங்கையையும் கணவரிடமிருந்து பிரித்து போவதை பற்றியே நினைக்கும் பெண்களுக்கிடையே அவர்களோடு ஒட்டி பழகுங்கள் என அறிவுரை தரும் ஒரே மனைவி நீயாகத்தான் இருப்பாய் ….”

இப்போது வெளிப்படையாகவே …அவன் பார்க்கவே அவள்  உடல் சிலிர்த்தது  ,அவனது “மனைவியில் “உள்ளம் சிலுசிலுக்க நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் .உன் மனைவியா நான் …என்ற கேளவியையும் பார்வையில் வைத்தாள் .

” என் மனைவி ….என் மனைவி என்று சொல்லி …சொல்லி நீ மனைவியாக நடிக்க வந்திருப்பதே மறந்து விட்டது மேகா …”  கொஞ்சலும் , குலாவலுமாய் தொடர்ந்த்து அவன் குரல் .

ஆனால் இந்த நடிப்பு பேச்சை மேற்கொண்டு தொடர விரும்பாத மணிமேகலை …” அவர்கள்….சுனந்தா உங்கள் மனைவி எப்படி இருந்தார்கள் …? இந்த வீட்டில் …இங்கு உள்ளவர்களோடு …சுமூகமாக பழகினார்களா ….? ” என்றாள் .

” அவள் …” என ஆரம்பித்தவன் ….தோள்களை குலுக்கினான் .

‘ விட்டுப் போனவளை பற்றி இப்போது என்ன பேச்சு ….? ” 
அந்த சுனந்தாவின் பேச்சு பார்த்தசாரதியின் உல்லாச மனநிலைக்கு சிறிதளவு இடையூறும் செய்யவில்லை .

எப்போது சுனந்தாவை பற்றி பேச்செடுத்தாலும் இவன் இப்படித்தான் நழுவுகிறான் .மணிமேகலையும்  வந்த நாளிலிருந்து சுனந்தாவை பற்றி ஏதாவது ஒரு விசயம் அவனிடமிருந்து வாங்க முயல்கிறாள் .ம்ஹூம் …வாயே திறக்க மாட்டேங்கிறான் .கல்லுளிமங்கன் …மனதிற்குள் திட்டினாள் .

அந்த கல்லளிமங்கன் உச்சியை வருடிய விரலால் அவள் முன் நெற்றியில் கிடந்த முடியை விரலில்  சுருட்டியபடி இருந்தான் .மணிமேகலையின் கை விரல் அவன் சட்டையை நீவியபடி இருந்த்து .பெரிய பெரிய விசயங்களை பேசுபவர்கள் போல் ஒன்றுமே பேசாமல் அருகருகே நின்றிருந்தனர் இருவரும் .

நிமிர்ந்து பார்க்காமலேயே குவிந்த அவன் உதடுகளை மணிமேகலையால் உணர முடிந்த்து .

முத்தமிட போகிறானா …?

டபடபவென அடித்துக் கொள்ள துவங்கியது அவள் இதயம் .
சற்று நேரம் அவன் பக்கத்திலிருந்து எந்த அசைவுமில்லாதிருக்க ,  ம்க்கும் … இவனும் இவனது முத்தமும் …சர்ச் பாதர் போல் முத்தம் கொடுத்து வைப்பான் .எந்த கணக்கிலும் சேர்க்க முடியாது அதை ….

மனதிற்குள் அவள் சலித்து முடித்த விநாடி சூடாக அவள் கன்னத்தில் பதிந்த்து அவனது இதழ்கள் .நம்பமுடியாது தன் கன்னத்தை தொட்டு பார்த்தபடி அவள் நிமிர்ந்து போது இது வரை பார்க்காத ஓர் உணர்வு முகத்தில் தெரிய நின்ற பார்த்தசாரதியை பார்த்தாள் .

மோகமோ …தாபமோ …போல் ஏதோ அவள் மனதை கெடுக்கும் ஓர் உணர்வு ….இது இத்தோடு நிற்க போவதில்லை …இன்னமும் இருக்கிறது என சொல்லாமல் சொல்லியது .அப்படியேதான் என கட்டியம் சொல்வது போல் பார்த்தசாரதி மீண்டும் அவள் முகம் நோக்கி குனிந்தபோது …அறைக்கு வெளியே எதுவோ விழுந்த சத்தம் கேட்க …இருவரும் தங்கள் மயக்கத்திலிருந்து வெளியே வந்தனர. .

சே …கதவை சாத்தி கூட வைக்காமல் மணிமேகலை தன்னையே நொந்து கொண்டிருந்த போது ” யாரது …? ” என்ற அதட்டலுடன் பார்த்தசாரதி வெளியே போனான் .

வெளியே யாரும் இல்லாமல் போக …வேகமாக அவன் படியிறங்கி கீழே வந்தான் .மாதவியிடம் யாரும் மாடிக்கு வந்தார்களா …என பார்த்தசாரதி விசாரித்தபடி இருக்க …  மணிமேகலையும் அவனை பின்தொடர்ந்தாள் .பாதி படி இறங்கியதும் ஏதோ தோன்ற மீண்டும் மாடியேறினாள் .

அங்கே ….மாடியில் …அவள் அறையினுள் யமுனா இருந்தாள் .டேபிளில் , செல்பில் என எதையோ தேடியபடி இருந்தாள் .ஓசையெழுப்பாமல் நடந்து வந்து கட்டிலில் அமர்ந்து கொண்ட மணிமேகலை …” இதையா தேடுகிறாய் யமுனா …? ” என்றாள் .

திடுக்கிட்டு திரும்பி பார்த்த யமுனா  அவள் கையிலிருந்த ஜாதக பேப்பரை பார்த்ததும் முகம் வெளிறினாள் .

” வா …இப்படி உட்கார் .நாம் நிதானமாக பேசலாம் …” கட டிலல் தன்னருகே தட்டி காண்பித்து அழைத்தாள் . முதலில் அவளை முறைத்த  யமுனா பிறகு மௌனமாக வந்து அவளருகே அமர்ந்தாள் .

” ம் …சொல்லு …எதற்கு இந்த ஜாதகம் …? சும்மா எனக்கு வந்த வரனை பற்றிய விபரங்கள் பார்க்க என்று சொல்லாதே …எனக்கு ஏற்கெனவே காது குத்தியாகிவிட டது ….” தன் காதை திருப்பி காண்பித்தாள் .

” அந்த ஜாதகத்தில் இருக்கும் அட்ரசுக்காக ….”

” ம் …அட்ரசை எடுத்து ….” கதை கேட்பது போல் சுவாரஸ்யமாக அமர்ந்திருந்த மணிமேகலையை கண்டு பற்களை கடித்தாள் யமுனா .

” நீ செய்வது எல்லாமே பச்சை பொறுக்கித்தனம் .இதில் சிறுபிள்ளை போல் இந்த பாவனை எதறகு …? “




மணிமேகலையின் முகம் மாறியது .

” பொறுக்கி வேலை என்ன நான் பார்த்தேன் …? “

” பார்த்தேனே …கொஞ்ச நேரம் முன்பு …பட்டப்பகலில் கதவை கூட மூடாமல் …சீச்சி ….ஒரு குடும்ப பெண் செய்யும் வேலையா இது …? “

மணிமேகலை எழுந்து நின்றுவிட்டாள் .அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்த்து .

” யமுனா …வீணே வார்த்தைகளை சிதறவிடாதே ….என் வீடு …என் அறை …என் புருசன்….திருட்டு புத்தியோடு சத்தமில்லாமல் இங்கே  வந்த்து நீ …”

” உன் வீடா …உனக்கு முன்னால் இது என் வீடு …”

” உனக்கு இங்கே என்னம்மா உரிமை …எப்போதாவது வந்து போகலாமே தவிர …காலம் முழுவதும் இந்த வீட்டில் உரிமையோடு வாழப் போவது நான்தான் …” அதிகாரம் சொட்டிய மணிமேகலையின் குரலில் யமுனா மனதில் அடிபட்டாள் .

” யாரும் வரவில்லை மேகா …குரங்காக இருக்குமென்று நினைக்கறேன்…மொட்டை மாடி கதவை பூட்டாமல் விட்டு விட்டாயா …? ” கேட்டபடி அறைக்குள் வந்த பார்த்தசாரதி யமுனாவை பார்த்ததும் கேள்வியாய் நின்றான் .

” அண்ணா ….” என்ற மெல்லிய கதறலுடன் யமுனா அண்ணனின் மார்பில் சரண்டைந்தாள் .

What’s your Reaction?
+1
3
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!