mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 32

                                               32

” இவளை எங்கிருந்து பிடிச்சுட்டு வந்தீங்கண்ணா ….? ” கங்காவின் கேள்வியில் முதலில் திகைத்து பின் புன்னகைத்தான் பார்த்தசாரதி .

கங்காவின் குரலில் எரிச்சல் இல்லை .கொஞ்சம் ரசனை இருந்தது .குளித்து முடித்ததும் கட்டிக் கொண்டு வந்த புளியோதரையையும் , தயிர் சாத்த்தையும் ஒரு பிடி பிடித்து விட்டு ஓய்வாக ஒரு போர்வையை விரித்து அதில் அமர்ந்திருந்தனர் அவர்கள் .

தங்கை தனிமையில் அமர்ந்திருப்பதை பார்த்து அவளருகில் வந்து அமர்ந்தான் பார்த்தசாரதி .

” என்னம்மா ரொம்ப தொல்லை பண்றாளா ….? “

” ம் ….ரொம்ப ….” இரண்டு கைகளையும் விரித்த கங்காவின் கைகள் தட்டி மடக்கப்பட்டது .

” நான் நடக்க வேண்டாமா ….எதற்கு இப்ப்ப்ப்ப…படி … கையை.விரிக்கிறீங்க …? ” படபடத்தபடி வந்து அவர்களுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டாள் மணிமேகலை .

” அந்தப் பக்கம் போக போவதாகத்தானே சொன்னாய் …இங்கேயே உட்கார்ந்தால் எப்படி …? ” அண்ணனின் பார்வை மணிமேகலையை விழுங்குவதை கவனித்தாள் கங்கா .

” இரண்டு பேரையும் தாண்டி போகத்தான் நினைத்தேன் பார்த்தா  .ஆனால் இப்போது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது …”

” என்ன சந்தேகம் …? “

” அண்ணனும் , தங்கையும் என்னை பற்றித்தான் ஏதோ பேசுறீங்களோன்னு ஒரு டவுட் .ம்ஹூம் …சந்தேகமேயில்லை .என்னைப் பற்றியேதான் பேசுறீங்க ….ம் இப்போ பேசுங்க ….” கையில் கன்னம் தாங்கி இருவரையும் பார்த்தாள் .

” இப்படி உன்னை நடுவில் உட்கார வைத்துக் கொண்டு நாங்கள் உன்னை பற்றியே பேச வேண்டுமாக்கும் ….” பார்த்தசாரதி அவள் காதை பற்றி திருகினான் .

” ஷ் …ஆமாம் .அப்போதானே என்னை பற்றி நல்லதாக நாலு வார்த்தை பேசிவீர்கள் …ம் …ம்…ஆரம்பிங்க …”

கங்கா பீறிட்டு சிரித்தாள் .” சரியான ஆளுண்ணா இவுங்க …” அவள் கைகள் மணிமேகலையின் கையை ஆதுரமாக பற்றியது .

” ஹைய்யோ …உங்க தங்கை சிரிக்கிறாங்க பார்த்தா .அருவிக்குள்ளே கூட அழுதாங்க தெரியுமா …? ” இப்போது அவள் பேச்சில் சிறுபிள்ளைத்தனம் இல்லை .கூர்மை இருந்த்து .

” கங்கா அழுதியா ….ஏம்மா …? “

” அருவித் தண்ணிக்குள்ளே அழுகை எப்படி தெரியும் …? இவுங்க சும்மா சொல்றாங்கண்ணா ….”

” நான் பொய் சொல்லமாட்டேன் பார்த்தா .தண்ணீருக்கும் , கண்ணீருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும் …” அழுத்தி பேசிய மணிமேகலையின் பேச்சில் அந்த இடத்தில் அமைதி சூழ்ந்தது .

கங்காவின் அழுகை புரிந்தே …அதனை விசாரிக்கும் தெம்பின்றி பார்த்தசாரதியும் , விளக்கும் தெம்பின்றி கங்காவும் மௌனமாக , தென்றலின்றி வறட்சி வந்த்து போலிருந்த்து சூழ்நிலை .

” எனக்கு இன்னொரு பஞ்சாயத்து நீங்கள் பண்ணவேண்டும் பார்த்தா … ” மணிமேகலையின் பார்வை இப்போது அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த யமுனா மேல் இருந்தது .

” என்ன து பஞ்சாயத்தா …? “

” ஆமாம் ….இந்த போக்கு நீரோடு சேர்ந்து அப்படியே ஐந்தருவி வரை போவாளாக இருக்கும் .போய் தொலையட்டும் விடு …. அப்படின்னு என்னை இவள் சொன்னாள் .என்னன்னு கேட்டு கொடுங்கள் ….” தயங்காமல் அங்கு வந்து நின்ற யமுனாவிறகு விரல் நீட்டினாள் .

இந்த நேரடி தாக்குதலில் யமுனா திகைத்து நிறக , பார்த்தசாரதி தங்கை பக்கம் கோபமாக திரும்பினான்.அண்ணனின் கோபத்தில் யமுனா முகம் வாட , மணிமேகலை பிரகாச முகத்துடன் இருவரையும் பார்த்தபடி இருந்தாள் .

பெரிய மனுசி போல் தனக்கு அருவியில் அறிவுரை சொன்னவள் இவள்தானா …கங்கா நொந்து போனாள் .




தங்கையை பார்த்தபடி இருந்த பார்த்தசாரதி திடுமென வாய் விட்டு சிரித்தான் .” கை கொடு யமுனா …நானே இவள் அருவியில் குளிக்க பண்ணிய அலப்பறையை பார்த்து அப்படித்தான் நினைத்திருந்தேன் .இப்படியே ஐந்தருவி வரை உருட்டி விடுவோமா ..என்கிற எண்ணம்தான் எனக்கும் …”

அண்ணனின் பேச்சில் தங்கைகள் சிரிக்க மணிமேகலை உதடு பிதுக்கினாள் .

” அண்ணனும் , தங்கைகளும் சேர்ந்துக்கிட்டீங்கள்ள …இருக்கட்டும் எனக்கு நியாயம் கிடைக்காமல் விடமாட்டேன் ….” எழுந்து நின்று விரலாட்டி மிரட்டினாள் .

தலை குளித்து விரிந்து கிடந்த கூந்தலும் , மடிப்பு வைக்காமல் ஒற றையாய் மேலே போட்ட சேலை முந்தி காற்றில் படபடப்பதுமாய் அவள் நின்ற கோலம் …நிஜமான பழிவாங்கும் பொண்ணை போலவே இருக்க மூவரும் மீண்டும் சிரித்தனர் .

மணிமேகலை பிணங்கிக் கொண்டு நீரோடையாய் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் இன்னும் கொஞ்ச தூரம் இறங்கி போனாள் .

” ஏய் மேகா சும்மாதான் சொன்னோம் .நீ நிஜமாகவே ஐந்தருவிக்கு போகிறாயே …அந்தப் பக்கம் போனால் ஐந்தருவிதான் ….” பார்த்தசாரதியின் கேலி குரல் காதில் விழாத்து போல் மணிமேகலை மேலும் இறங்கி போனாள் .

” இவர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை அண்ணா .பாம்பா …பழுதா …என்று …” கங்கா மணிமேகலையை அளவீட்டுக் கோலில் வைக்க ….

யமுனா பட்டென ” எனக்கு பிடிக்கவில்லை .முழுவதும் விசம் …” என்றுவிட்டு பார்த்தசாரதியின் பார்வையில் பயந்தாள் .

பார்த்தசாரதி யமுனாவின் கையை பற்றி தன் அருகில் அமர்த்திக் கொண்டான் .

” மனதில் பட்டதை தைரியமாக பேசு யமுனா .எத்ற்கு பயப்படிகிறாய் .?”

” அவர்கள் உங்கள் மனைவி .அவர்களை பற்றி நான் எப படி வெளிப்படையாக உங்களிடமே பேச முடியும் …? “

” நீ என் தங்கை அல்லவா …? என்னிடம் பேசும் உரிமை அவளை போன றே உனக்கும் உண்டுதானே …”

யமுனாவும் , கங்காவும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர் .

” நீங்கள் இப்படியெல்லாம் பேசுவீர்களா அண்ணா …எப்போதும் முறைப்பாகத்தானே இருப்பீர்கள் …உங்களிடம் பேசவே எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கும் ….”

” எதற்கம்மா பயம் .நான் என்ன பூதம் போலவா இருக்கிறேன் …? “

” ஆமாம் .சில நேரங்களில் …” சொல்லிவிட்டு யமுனா நாக்கை கடித்துக் கொண்டாள் .

பார்த்தசாரதி இப்போதும் சிரித்தான் .” தலையில் கொம்பு எதுவும் இருக்கிறதா …? ” குனிந்து தன் தலையை தானே தடவிப் பார்த்துக் கொண்டான் .

” கிளம்பலாமா பார்த்தா …? ” கேட டபடி வந்த மாதவி அருகருகே அமர்ந்து சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்த தன் பிள்ளை செல்வங்களை நிறைவாக பார்த்தாள் .

” போகலாம்மா …நீங்க எல்லோரும் கிளம்புங்க .நான் மணிமேகலையை கூட்டி வருகறேன் ….” பாறைகளின் மீது நடந்து இறங்க ஆரம்பித்தான் .

” இனி போய் பொண்டாட்டியை சமாதானப் படுத்தவா …? ” யமுனா முணுமுணுக்க …

” அண்ணனின் இந்த உற்சாகத்தின் ஆரம்ப புள்ளியே அங்கிருந்துதான் வந்திருக்கிறது யமுனா .தவறாக எதுவும் பேசாதே ….” என்றாள் கங்கா .

” கோபமா மேகா …? ” பார்த்தசாரதி ஒரு பாறை மீது அமர்ந்து ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலையின் அருகே அமர்ந்து கொண்டு கேட டான் .

” ஆமாம் …” மூக்கை சுருக்கி முகத்தை திருப்பிக் கொண்டாள் .

” ஏய் சும்மா ஒரு விளையாட்டு பேச்சுதானேடா …சரி வா போகலாம் ….” அவள் கைகளை தொட்டான் .

” நான் கோபமாக இருக்கிறேன் .தொட வேண்டாம் ….” அவன் கைகளை தட்டி விட்டு தானே எழுந்து மேலே ஏறத் துவங்கினாள் .

காரிலும் பின் சீட்டில் ஏறிக்கொண்டாள் .

” முன்னால் வரலையா மேகா …? ” பார்த்தசாரதி சீண்டினான் .

” உனக்கு பின்பக்கம் அனல் அடிக்குமே ….முன்னால் போயேன் ….” மாதவி இருவருக்குமிடையே சமாதானப் படுத்த முயல ….

” இப்போ அனல் முன்பக்கம் தான் அடிக்குது ….” சொல்லிவிட்டு ஒரு சீட் முழுவதும் ஆக்ரமித்தபடி காலை நீட்டி படுத்து தூங்க ஆரம்பித்தாள் .

அதென்ன எல்லோரையும் நெருக்கி அமர வைத்து விட டு இவளுக்கு மட்டும் தூக்கம …என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்தாலும் , எதிரில் கள்ளமில்லா பிள்ளை முகத்துடன் தூங்கிக் கொண்டிருந்தவளின் உறக்கத்தை களைக்க யாரும் விரும்பவில்லை .

வீடு வர இருட்டி விட , அலுப்புடன் எல்லோரும் இறங்கி உள்ளே போக மணிமேகலை தூக்கம் கலையாமல் அப்படியே சீட்டிலேயே படுத்திருந்தாள் .விரிந்த கூந்தலும் , தரை பரவிய தோள் சேலையுமாக சயனத்தில் இருந்தவள் பார்த்தசாரதியினுள் சலனத்தை விதைத்தாள் .

” மேகா …எழுந்திரிம்மா …” அவள் தோள் தொட்டு அசைத்தான்.

” ம் …” தூக்க கலக்கத்துடன் அரை விழி திறந்து பார்த்தவள் …

” பார்த்தா ….” என்ற முனங்கலுடன்குழந்தையாய்  இரு கை தூக்கினாள் .மறு யோசனையே இன்றி ஆவலுடன் அவளை இரு கைகளிலும் அள்ளிக் கொண்டான் பார்த்தசாரதி .திருப்தியாய் அவன் தோள்களில் சாய்ந்து தூக்கத்தை தொடர்ந்தாள் .

வீட்டு வாசலில் சிறு தயக்கத்துடன் பார்த்தசாரதி நின்று பார்க்க , ஹால் யாருடைய அரவமுமில்லாமல் வெறிச்சிட்டிருந்த்து .வேக நடையுடன் ஹாலை கடந்து மாடியேறி தங்கள் அறைக்குள் கட்டிலில் அவளை பத்திரமாக கிடத்தினான் .

—————–

” அடுத்த வாரம் மெயின் பால்ஸ் போகலாம் அண்ணி ….” சொன்னவளை வெறுப்பாக பார த்தாள் கங்கா .

” நான் வர மாட்டேன்…”

” வராமல் நான் விடமாட்டேன் ….”

” உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதமே கிடையாதா …? “

” கிடையவே கிடையாது ….” சொன்னவளின் கன்னத்தில் அறையும் வேகம் வந்தது கங்காவிற்கு .

” அடிப்பதையெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம் .முதலில் நான் சொல்வதை கவனியுங்கள் .முதலில் அருவி என்றாலே பயம் இருந்த்து .இப்போது அது போய்விட்டது .இனி அந்த மெயின் அருவி பயம் போகவேண்டும் .அதனால் ….”

” அந்த அருவி என் வாழ்வின் திசையையே மாற்றியது .அது தெரியுமா உங்களுக்கு …? “

” அப்படியா …அதெப்படி மாற்றியது …? “

கங்கா பதில் சொல்லாது அவளை வெறித்தாள் .

” உங்கள் கழுத்தில் தாலி கட்டியவர் …அந்த அருவியோடு போய்விட்டார் .அந்த தாலியையே சுழட்டி வைத்துவிட்டீர்களே .அவரை மட்டும் ஏன் இன னமும் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள் …? “

” தாலி கழுத்தில் இருந்த்து .சுழட்டி வைத்துவிட்டேன் .அவர் என் மனதில் இருக்கிறார் .அப்படி சுழட்ட முடியாது ….”

” மனதில் இருக்கிறாரா …? புத்தியில் இருக்கிறாரா …? அவரை மறக்க முடியாமல் மனது தவிக்கிறதா …மறக்காதே என புத்தி எச்சரிக்கிறதா …? “

கங்கா திகைத்து அமர்ந்துவிட்டாள் .

” நன்றாக யோசியுங்கள் அண்ணி ….” சொல்லிவிட்டு எழுந்தாள் மணிமேகலை.

உள்ளே மாதவி அவளை கண் கலங்க பார்த்படி நின்றிருந்தாள். மணிமேகலையை இறுக அணைத்துக் கொண்டாள் .




” ஒட்டுக் கேட்டீங்களாக்கும் .பேட் ஹேபிட் அத்தை ….” சலித்துக் கொண்டாள் .

” மணி எனக்கு நம்பிக்கை வந்திருச்சு .உன்னை வைத்து நான் அவளை ஜெயிக்கத்தான் போகிறேன் …”

” யாரை …? “

” தெய்வாவை ….” குன று பக்கம் கை காட்டினாள் .

” போச்சுடா …மனது , புத்தி என்று கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணி டயலாக பேசினால் ஒரு வார்த்தயில் அதையெல்லாம் முடித்து விடுகிறீர்கள் .நீங்க திருந்த மாட்டீர்களா அத்தை …? “

” எதில் கெட்டு போய் இருக்கிறேன்டி திருந்த …? அது இருக்கட டும் …உனக்கும் பார்த்தசாரதிக்கும் சண்டையா …? “

” இ ….இல்லையே …”

” சண்டையில்லாமல் இவ்வளவு காலையில் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்திருக்க மாட்டாயே …” மாதவி கணிக்க …

மணிமேகலைக்கு மனம் படபடத்தது .முன்தினம் பார்த்தன் அவளை கையில் சுமந்து வந்து பெட்டில் விட்டு போன மறுகணமே அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது .சற்று முன் நிகழ்ந்த இனிய நிகழ்வு நினைவுக்கு வர உடல் சிலிர்க்க இனிய கனவுகளுடன் தலையணையை கட்டிக் கொண்டு தூங்கிப் போனாள் .

காலை எழுந்த்தும் பார்த்தசாரதி முகம் பார்க்க கூச்சப்பட்டு கீழே இறங்கி வந்தவள்தான் கங்காவை வம்பிழுத்துக் கொண்மிருந்தாள் .

வண்ணக்கலவையாய் குழைந்து ஒளி வீசிய மணிமேகலையின் முகத்தை மாதவி ரசித்து பார்த்துக் கொண்டிருந்த போது ….

” அம்மா ….” என அழைத்தபடி பார்த்தசாரதி வர …மணிமேகலை மேலும் முகம் சிவக்க பின்வாசல் வழியாக தோட்டத்திற்குள் மறைந்தாள் .

What’s your Reaction?
+1
2
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!