mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 30

                                             30

 

 

அந்த குன்று அவளை பார்த்து சிரிப்பது போல் தோன்றியது மணிமேகலைக்கு .நிம்மதியாக இருந்து விடுவாயா நீ …என கேட்காமல் கேட்பது போலிருந்த்து .

மணிமேகலை மொட்டை மாடி கைபிடி சுவரில் வந்து உட்கார்ந்து கொண்டு அந்த குன்றை வெறித்து பார்த்தபடி இருந்தாள் .

இந்த வீட்டில் யாரையும் நிர்மல மனதுடன் இருக்க விட மாட்டேன் …என ஒரு குரல் மனதினுள் ஒலிப்பது போலிருந்த்து . கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் மணிமேகலை .தடுமாறி தத்தளித்த மனதை கூட்டி கோர்த்து நிலை சேர்க்க முயன்றாள் .

” தெய்வாம்மா உங்களை ஜெயிக்க விட மாட்டேன் …” தன் மன அழுத்தத்துடன் மனதினுள் பேசிக் கொண்டாள் .

” மேகா ….” இதமாக அவள் தலை வருடப்பட்டது .

கண்களை திறக்காமலேயே அவனை உணர்ந்தவள் , முகம் இறுக இமைகளை மேலும் இறுக்கிக் கொண்டாள் .

” சாரிம்மா …நான் உள்ளே வரும் போது நீ அம்மாவை பிடித்து தள்ளிக் கொண்டிருந்தாயா ….அதோடு யமுனா வேறு …அவள் எப்போதும் என்னை முறைத்துக் கொண்டுதான் இருப்பாள் .இப்படி அழுது கொண்டு வந்து என்னிடம் தஞ்சமடைந்த்து இல்லை .இதிலெல்லாம் நான் கொஞ்சம் டென்சனாகி விட்டேன் ….”

மணிமேகலை இன்னமும் கண்களை திறக்கவில்லை .பார்த்தசாரதி மெல்ல அவள் கண்ணிமைகளை வருடினான் .

” என்னை பார் மேகா ….”

அவன் குழைவான குரலில் பாகென உருக ஆரம்பித்து விட்ட தன் மனதை கஷ்டப்பட்டு இறுக்கி நிறுத்தினாள் மணிமேகலை .

” இப்போது எதற்காக இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் …ம் …இப்படி கைபிடி சுவரில் ஏறி உட்காராதே என்று சொல்லியிருக்கிறேனே …எழுந்து வா ….”

இப்போதும் மணிமேகலையிடமிருந்து பதிலோ …அசைவோ இல்லாமல் போக , அவள் தோளணைத்து கீழே இறக்க முயன்றான.

” தள்ளி போங்க …உங்கள் மார்பில் சாய்ந்து அழுபவர்களுக்குத்தானே நீங்கள் ஆதரவு கொடுப்பீர்கள்.  இப்போது.என்னிடம் ஏன் …அந்த பக்கம் போங்க …” அவனை தள்ளினாள் .

அவள் தள்ளலில் சற்று தள்ளி போனவன் ” ஆமாம் …வா …உனக்கும் ஆறுதல் நான்தான் …” தன் மார்பை தட்டிக் காண்பித்து கை விரித்து  அழைத்தான் .

இதழ் துடிக்க அவனது அழைப்பை பார்த்தபடி இருந்தவள் வெண்ணெயின் உருகலாய் குழைந்த தன் தேகத்தை தானே வெறுத்தாள் .உள்ளத்து உணர்வை முகத்தில் காட்டாதிருக்க பாடுபட்டு முகம் திருப்பியவளை நெருங்கி இடையை பற்றி தூக்கி  கீழே இறக்கினான் .

” சை …விடுங்க ….எனக்கு வேண்டாம் …” அவனது பிடியில் திமிறியவளை வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்து தன் மார்பில் போட்டுக் கொண்டான் .

” எனக்கு வேண்டும் ….உன்னிடம் …மட்டும் .இதில் ஆறுதல் உனக்கு மட்டுமில்லை மேகா …எனக்கும்தான் .ப்ளீஸ் கொஞ்ச நேரம் அப்படியே இரு ….” கரகரக்க ஆரம்பித்து விட்ட அவனது குரலின் பின்பு அவனிடமிருந்து திமிறும் எண்ணம் மணிமேகலைக்கு வரவில்லை .

ஆழ்ந்து மூச்செடுத்து அவனது ஆண் வாசனையை தனக்குள் நிரப்பியபடி , அவன் மார்போடு புதைந்து கொண்டாள் .பார்த்தசாரதி அவளது உச்சி முகர்ந்து தலையில் தன் முகம் புதைத்துக் கொண்டான் .

இருவருமாக எவ்வளவு நேரம் அப்படி நின்றார்களென தெரியவில்லை .பொட் …பொட்டென தலையில் நீர்த்துளிகள் விழ ஆரம்பிக்க தந்நிலை வந்து இருவரும் அண்ணாந்து பார்த்தனர் .அப்போதும் பிரிய மனமின்றி அணைத்தபடியே நின்று கொண்டே வானை பார்த்தனர் .

” மழை ….” இருவரும் ஒன்று போல் உச்சரித்து விட்டு அந்த ஒற்றுமைக்காக சிரித்து கொண்டனர் .




மணிமேகலையின் இமைகள் ,  மூக்கு , இதழ்கள் என விழுந்த மழைத்துளிகளை ஆட்காட்டி விரலால் துடைத்து விட்டான் பார்த்தசாரதி .

” கீழே போகலாமா …? ” முணுமுணுத்த அவனது குரலே உடல் முழுவதும் அவனது விரல் தீண்டலை உணர்த்தியது அவளுள் .

” ம் …” என்றவளின் கையோடு தன் கை பிணைத்துக் கொண்டு  கீழே வந்தான் .

அறைக்குள் வந்த்தும் கண்களில் பட்ட  கட்டிலில் உடல் விதிர்த்து , போய் படுத்து தூங்கி விட வேண்டியதுதான் என்ற முடிவுடன் வேகமாக   போக பேனவளை தோள்  பற்றி தன் பக்கம் திருப்பினான். குனிந்து மென்மையாக அவள் நெற்றியில் தன் இதழை வைத்து எடுத்தான் .

” ஒரு சிறு பிசிறல்தான் மேகா .அதற்காக சாரிம்மா .நான் எப்போதும் உன் பக்கம்தான் .சரியா …? ”  குழைவாக கேட்டான் .

தலையாட்டி பொம்மை ஆனவளின் கன்னங்களை அழுத்தி பற்றியவன் , மீண்டும் நெற்றியில் இதழ் பதித்தான் . இந்த முறை அழுத்தமாக , அப்பலாக அவள் நெற்றி மீது அழுந்தி கிடந்தன அவன் இதழ்கள் .இறுதியில் மனமின்றி   மெல்லிய  சத்தம் ஒன்றுடன் விலகிக் கொண்ட ன .

” போய் படுத்துக்கோ ….” அவளை கட்டிலுக்கு நடத்தி போய் படுக்க வைத்து போர்வையை மூடி விட்டான் .

” குட்நைட் ….” மென்மையாக கன்னத்தில் தட்டிவிட்டு படுக்க போனான் .

நடந்த்தை நம்ப முடியாமல் தன் நெற்றியை தொட்டு பார்த்தபடி வெகுநேரம் விழித்தே கிடந்தாள் மணிமேகலை .அவனது இந்த இதழொற்றலை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை .

இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் …? என்னை சமாதானப்படுத்தவா ….? இல்லை உள் மன ஆசையினாலா …?

கையிலோ , நெற்றியிலோ இடப்படும் இது போன்ற முத்தங்கள் அபாயகரமானவை . அவற்றை காதலென்ற வகையில் மட்டுமேயாக  அடக்க முடியாது .அன்பு , பாசம் என்ற பெயருடன் எப்போது வேண்டுமானாலும் வடிவம் மாறி விடும் அவை .

எனவே …பார்த்தசாரதியை பற்றி முழுதாக புரிந்து கொள்ள முடியாத மணிமேகலை , அவனது இந்த முத்தத்தை எப்போது வேண்டுமானாலும் தனது தங்கைகளுக்கு போல் என அவன் சொன்னாலும் சொல்லி விடுவானென்ற பயத்தில் , நெற்றியிலேயே தங்கி கதகத்த்து கொண்டிருந்த உணர்வை மனதால் விரட்ட முயன்றபடி தூங்கிப் போனாள் .

——————–

” நேற்று பார்த்தன் என்ன சொன்னான் …? ” கேட்ட மாதவியை கோபமாக பார்த்தாள் மணிமேகலை .

” நீங்கள் பேசாதீர்கள் .உங்கள் பொண்ணும் , புள்ளையும் சேர்ந்து என்னை முறைத்துக் கொண்டிருக்கிறார்கள் .நீங்கள் ஒரு வார்த்தை ஏனென்று கேட்காமல் , அவர்களை பேச விட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் .உங்களை நம்பி என்னோடு கூட்டு சேர்த்து கொண்டேன் பாருங்கள் .என்னை சொல்லவேண்டும் ….”

” நேற்று நான் பேசியிருந்தால் அந்த பிரச்சினை அதே இடத்தில் முடிந்திருக்கும் .அப்படி அந்த பிரச்சினை முடிவதை நான் விரும்பவில்லை . அதனை பார்த்தன்தான் முடித்து வைக்க வேண்டும் மணிமேகலை .அதனால்தான் நான் ஒதுங்கி இருந்து கொண்டேன் ….” விவரித்தவளை ஆச்சரியமாக பார்த்தாள் மணிமேகலை .

என்ன ராஜதந்திரம் ….?

” என்ன …ஆரம்பித்தவனே சுமூகமாக முடித்தும் வைத்தான்தானே ….? ” கிண்டலோடு புருவம் உயர்த்தினாள் .

” அனுபவங்களின் கணிப்பு தவறுவதில்லை அத்தை .நீங்கள் பெரியவர்கள் .நானெல்லாம் உங்களிடம் நிறைய படிக்க வேண்டும் ….”

” ம் …சரி …சரி .போனால் போகிறது .உன்னை என் சிஷ்யையாக ஏற்றுக் கொள்கிறேன் ….”

இருவருமாக வீட்டை சுற்றி வாக்கிங் போல் நடந்தபடி பேசிக் கொண்டிருந்தனர் .

” மாமியாரும் , மருமகளும் என்ன பேசிக் கொண்மிருக்கிறீர்கள் …? ” ரகசிய குரலில் கேட்டபடி இருவருக்குமிடையே நுழைந்து இருவரின் கையையும் பிடித்துக் கொண்டாள் காவேரி .

” இன்னும் ஒரு முறை அழுத்தி சொல்லு காவேரி …மாமியார் , மருமகளென …” அலுத்த மணிமேகலையை பார்வையால் எச்சரித்தாள் மாதவி .

” அதற்கென்ன இன்னமும் பத்து தடவை கூட  சொல்கிறேனே ….நல்ல மாமியார் ….நல்ல மருமகள் ….” இருவரின் தோள்களிலும் கை போட்டுக் கொண்டாள் .




தள்ளி நின்று இந்த மூவர் கூட்டணியை வெறுப்புடன் பார்த்தாள் யாமினி .அவளை பார்த்ததும் தன் முக பாவத்தை சிறிது கடினமாக மாற்றிக் கொண்டாள் மணிமேகலை .

” இந்த வீட்டிலேயே பிரச்சினை இல்லாத ஆள் நீதான் காவேரி .அதனால் எனக்கு உன்னை மட்டும்தான் இங்கே பிடிக்கிறது …”

மாதவி காவேரியின் கையை எடுத்து விட்டு விட்டு ஏதோ வேலை போல் உள்ளே போய்விட்டாள் .

” ஐ …அப்படியா அண்ணி .என்னை ரொம்ப பிடிக்குதா ….? ” குதூகலித்தாள் .

” ஆமாம் நீதானே தடங்கல் எதுவும் இல்லாமல் இந்த வீட்டை விட்டு போக போகிறவள் ….”

” வீட்டை விட்டா …? எதற்கு அண்ணி …? “

” இன்னமும் இரண்டு வருடத்தில் உன் படிப்பு முடிந்துவிடும் .அதனபிறகு உனக்கு திருமணம் .அப்புறம் இந்த வீட்டை விட்டு போய்விடுவாய்தானே ….? “

” ஐயே …போங்க அண்ணி .அதையெல்லாம் இப்போதே ஏன் பேசுகிறீர்கள் …? நான் மாஸ்டர் டிகிரி படிக்க போகிறேன் .அதன் பிறகுதான் திருமணமெல்லாம் ….”

” சரி அப்படியேனாலும் அடுத்து ஒரு இரண்டு வருடம் ..்பிறகு உன் இடத்தை பார்த்து போய்விடுவாய் .ஆனால் இங்கே இருக்கும் மற்றவர்களுக்கு அந்த மாதிரி எண்ணமே இல்லையே …” காவேரியிடம் பேசியபடி யமுனாவை பார்வையால் துளைத்தாள் .

” பிறகு இரண்டு வருடமா …ம்ஹூம் …நான் படித்து முடித்து விட்டு ஒரு வருடமாவது வேலை பார்ப்பேன் .அதன் பிறகுதான் கல்யாணம் …காட்சியெல்லாம் …”

” நீ சரிதான்மா …சிலருக்கு பார்த்து  பண்ணி அனுப்பி வைத்தாலும் திரும்பவும் இங்கேயே வந்து உட்கார்ந்து கொள்கிறார்களே ….” என்ற போது அந்தப் பக்கம் கங்கா வந்திருந்தாள் .கச்சிதமாக மணிமேகலையின் வார்த்தைகள் அவள் காதிலும் விழுந்த்து .

” யாரை சொல்கிறீர்கள் அண்ணி .புரியவில்லை …? ” காவேரி குழம்ப …

” உனக்கெதற்கு இந்த நச்செல்லாம் …புரிகிறவர்களுக்கு புரிந்தால் சரி …

What’s your Reaction?
+1
3
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Priya
Priya
4 years ago

Nice mem

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!