mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 28

                                              28

 

” நான் அறிந்த வரை அவன் மனதில் நீ இருக்கிறாய் மணி .ஆனால் அதனை அவன் அவ்வளவு எளிதாக வெளிக்காட்ட மாட்டான் .நீதான் அவனது காதலை வெளிக் கொணர வேண்டும் ….”

” அதற்கு நான் என்ன செய்வது அத்தை …? ” மருமகளுக்கு மாமியார் ஆலோசனை வழங்க ஆரம்பிக்க விழிப்பு வந்த பார்த்தசாரதி மணிமேகலையை தேடி வந்தான் .

மாடிப்படியில் அவனது காலடி ஓசை கேட்கவுமே மாதவி பரபரபத்தாள் .

” மணி நீ போ .நம் இரண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஆனது யாருக்கும் தெரியவேண்டாம் .அப்போதுதான சுதந்திரமாக திட்டங்கள் போட முடியும் .சீக்கிரம் போ …”

பின்வாசலிலிருந்து வந்தவளை சந்தேகமாக பார்த்த பார்த்தசாரதி …” மணிமேகலை இந்த நேரத்தில் இங்கே என ன செய்கறாய …? “

அவள் பதிலில்லாமல் அவன் முகத்தை விழிகளால் விழுங்கியபடி நின்றாள் .

” ஏய் உன்னைத்தான் கேட்கிறேன. ஏன் ஒரு மாதிரி தூக்கத்தில் நடப்பவள் போல் நிற்கிறாய் …? “

அடப்பாவி நான் உன் ஏக்கத்தில் சொக்கி போய் நின்றால் நீ தூக்கத்தில் நிற்கிறாயா என்கிறாயே …உன்னையெல்லாம் வைத்துக் கொண்டு நான் எப்படி கொண்டு செலுத்த போகிறேன் தெரியவில்லையே ….

மணிமேகலை அலுத்துக் கொண்டபடி ” தண்ணீர் குடிக்க வந்தேன் …” சொல்லிவிட்டு மாடியேறினாள் .பார்த்தசாரதியும் அவள் பின்னாலேயே படியேறவும் மாதவி மெல்ல நடந்து வந்து தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் .

அறைக்குள் நுழைந்த்தும் ” எங்கே போனாய் மேகா …? ” மீண்டும் கேட்டான் .

” சொன்னேனே ….” படுக்கையில் சரிந்து கொண்டாள் .

” ம்ஹூம் .எனக்கு நம்பிக்கை இல்லை .அந்த குன்று பக்கம் போனாயா …? உன் புத்தி எனக்கு தெரியும் …”

ஷ் …பிழைத்தேன் போ …அந்த அளவாவது என்னை தெரிந்து வைத்தருக்கிறாயே …பதிலில்லாமல் அவனை பார்த்தபடி இருந்தாள் .

” ஏய் …என்ன ஆச்சு உனக்கு …? ஒரு மாதிரி முழிக்கிறாய் …? ஒரு வடிவாக பார்க்கிறாய் …? ” அவளுக்கு முன் நின்றபடி தன் பாணியில் இடுப்பில் இரு கைகளையும் வைத்தபடி கேட்டவனை பார்க்க …பார்க்க தகிக்க மணிமேகலை முகத்தை திருப்பி தலையணையில் புதைத்துக் கொண்டாள் .

” எனக்கு தூக்கம் வருகிறது “

” இப்போது தூங்கு .காலையில் என் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டும் ….” சொல்லிவிட்டு போய்விட்டான் .

போடா …கழுத்தை சுற்றி உன் துண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன் .உன் குடும்பமே கவனித்து என்னவென்று கேட்கறது .உன் கண்ணில் அது படவே இல்லை …நீயெல்லாம் ….இஷ்டம் போல் அவனுக்கு மனதிற்குள் அர்ச்சித்தபடி அவனது துண்டை மார்போடு சேர்த்து அணைத்தபடி தூங்கிப் போனாள் மணிமேகலை .

—————————–

” இங்கே என்ன செய்கிறாய் யமுனா ….? ” கையிலிருந்த பேப்பர்கள் பறக்க யமுனா தடுமாறி திரும்பினாள் .

” இ …இல்லை சும்மா ….” தந்தியடித்த அவளது குரல் மணிமேகலையின் சந்தேகத்தை வலுப்படுத்த கீழே பறந்த பேப்பர்களை குனிந்து எடுத்தாள் .

அவை அன்று காலையில்தான் யமுனாவிற்கு ஏற்ற வரன்களின் ஜாதகங்களென ஒரு புரோக்கர் கொண்டு வந்துகொடுத்து போனவைகள் .இதனை ஏன் இவள் எடுத்துக் கொண்டிருக்கிறாள் …மணிமேகலைக்கு பொறி தட்டியது .
” கோல நோட்டு எடுக்க வந்தேன் ….” ஏதோ ஓர் நோட்டை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் யமுனா .

” சும்மாவே நிற்பதற்கு இந்த புல்லை ஒதுக்கி கட்டி ஓரமாக போடலாமில்ல …” சொன்ன மாதவியை கோபமாக பார்த்தாள் மணிமேகலை .

பின்புற மாட்டுக் கொட்டகையில் இரைந்து கிடந்த புல்கட்டுகளை சேர்த்து கட்டி ஓரமாக ஒதுக்கி கொண்டிருந்தாள் மாதவி .அந்த பக்கமாக அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்த மணிமேகலையை ஏவினாள் .

” கொஞ்ச நேரம் சும்மாவே இருக்க மாட்டீங்களா நீங்க …? “

” சும்மாவே இருந்தால் தின்ன சோறு எப்படி ஜீரணமாகும் …? “

” ஓஹோ …அப்போ நான் சாப்பிட்டு சாப்பிட்டு சும்மா இருக்கிறேங்கிறீங்களா …? “

” நான் சொல்லலை .நீயேதான் உன் வீரதீர பராக்கிரமங்களை சொல்லிக் கொண்டிருக்கிறாய் …”

வீர …தீரமா …தோணாமல் தன்னை நக்கலடிக்கும் மாதவியின் தலையில் ஒன்று போட்டால்தான் என்ன …என்று தோன்றியது மணிமேகலைக்கு .

குனிந்து அவள் கட்டிக் கொண்டிருந்த புல்கட்டை தூக்கமுடியாமல் கையால் அழுத்தினாள் .

” கசகசன்னு இப்படி ஏதாவது வேலை பார்த்துட்டே இருக்க கூடாதுன்னுதானே , சமையலுக்கு கூட ஆள் ஏற்பாடு செய்தேன் .அப்பவும் இப்படி ஏதாவது வேலையை இழுத்து போட்டு செய்தால் எப்படி …? “

” வேலை பார்க்காமல் சும்மா இருந்தால் என் உடம்பு துருப் பிடிச்சிடும்டி .கையை எடு …”

மாதவி இழுக்க மணிமேகலை விடாமல் தடுக்க சேர்த்து கட்டியிருந்த புல்கட்டு அவிழ்ந்து சிதற …பகையாளிகள் போல் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு கையில் கிடைத்த புல் குவியலை இழுத்தபடி இருந்தவர்களை பார்த்து , அந்த பக்கம் வந்த பார்த்தசாரதி திகைத்தான் .

” மணிமேகலை …என்ன செய்கிறாய் …? விடு …” அதட்டியபடி வந்தான் .

ஆஹா …வந்திட்டாருய்யா நாட்டாமை ..என நினைத்தபடி ” நான் ஏன் விடனும் …அவுங்களை விடச் சொல்லுங்க …” பிடியை இன்னமும் இறுக்கினாள் .

” நானெல்லாம் விடமாட்டேன் .உன் பொண்டாட்டியையே விடச் சொல்லு ….” தாயின் பதில் வீம்பை ஆச்சரியமாக பார்த்தான் .

புதுவித விளையாட்டு ஒன்றை விளையாடும் குழந்தையின் பாவத்தை முகத்தில் சும்ந்திருந்தாள் மாதவி அப்போது .அப்பாவின் மறைவுக்கு பிறகு பெரும்பாலும் இறுக்கத்தையே முகத்தில் கொண்டிருந்தவள் .

” அம்மா …என்னம்மா …” வியந்த மகனை கண்டுகொள்ளாமல் மணிமேகலையுடன் ஒரு மற்போருக்கு தயாராக இருந்தாள் மாதவி .

” ஏய் …வாலு …கையை விடு…” மணிமேகலையின் தலையில் கொட்டினான் .

” ம்ஹூம் ….” மறுத்தவளின் கையை பிடித்து இழுத்து பிரித்து விட்டான் .

” என்ன பெரியவுங்கங்கிற மரியாதை இல்லாமல் …நீ வா ….உன்கிட்ட பேசனும் …”

மணிமேகலை விழித்தாள் .இவன் முதல்நாள் என்ன செய்தாயென்று கேட்பானே …இதற்கு பயந்துதானே அவள் காலையிலிருந்து அவன் கண்ணில் படாமல் சுற்றுகிறாள் …கண்களால் காப்பாற்றுமாறு மாதவியை இறைஞ்சினாள் .

” அவள் இருக்கட்டும் .அவளுக்கு வேலை இருக்கிறது ….” சொன்ன மாதவியை ஆச்சரியமாக பார்த்தவன் தலையாட்டியபடி நகர்ந்தான் .

வீட்டின் மறுபுறம் நடந்தபடி திரும்பி பார்த்த போது இருவருமாக ஏதோ பேசியபடி புல்கட்டை கட்டிக் கொண்டிருந்தனர் .

” அவளுக்கு வந்த வரனின் விபரங்களை தெரிந்து கொள்ளும் ஆசையில் எடுத்து பார்த்திருப்பாள் ….” மணிமேகலையின் சந்தேகத்திற்கு பதில் சொன்னாள் மாதவி .

” அதை நேரடியாக உங்களிடமே கேட்க வேண்டியதுதானே ….”

” ம் …அதெல்லாம் உன்னை மாதிரி டவுனில் படித்து வளர்ந்த பிள்ளைகளுக்கு சாதாரணம் .எங்களை போன்ற கட்டுப்பாடான. வீடுகளில் அது போல் வெளிப்படையாக தங்கள் திருமணத்தை தாங்களே பேசும் பழக்கம் கிடையாது ….” பெருமிதம் வழிந்த்து மாதவியின் குரலில் .

” ஆமா …செய்யுறதெல்லாம் ரப்பிஷ் .இதில் பெருமை என்ன வேண்டிக்கிடக்கு ….? ” மணிமேகலை முணுமுணுத்தாள் .
” என்னடி சொன்ன …? ” புல்லை விட்டு விட்டு அவள் கையை பிடித்து முறுக்கினாள் மாதவி .

” பின்னே என்ன அத்தை …? அவரவர் வாழ்க்கை .அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும் .இப்படி பெண்களை கட்டுப்பாடாக வைத்திருப்பதில. என்ன பெருமை …? “

” ப்ச் …அதுதான் எங்கள் பழக்கம் என்று சொல்கிறேனே …அதையெல்லாம் அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது …”உறுதி தெறிக்க பேசினாள் மாதவி .

எங்களது வழக்கமான பழக்கங்களை எளிதில் மாற்ற முடியாது என பார்த்தசாரதி சொன்னதை நிஜம்தான் போலவே…இவர்களை எப்படி மாற்றுவது …? மணிமேகலை நெற்றிய்யை தேய்த்தாள் .

கங்காவின் மறுமணத்திற்கு இவர்களை எப்படி ஒத்துக்கொள்ள வைப்பது …? முதல்நாள் மணிமேகலை தனது முன் கதை முழுவதையும் சொன்ன போது , அந்த கதையோடு உள் இழையோடிய தன் மூத்த மகளின் வாழ்வை பற்றி சிறிது கூட பேசிக்கொள்ள வில்லை மாதவி .

தானாகவே அதனை நினைவுபடுத்த நினைத்து ” நேற்று நான் கவுசிக் அண்ணாவுடன் பேசினேன் அத்தை …” மெல்ல சொன்னாள் .

” ஓ …அப்படியா …சரி.உன் அப்பா போன் நம்பர் கொடேன் .நான் பேச வேண்டும் …” பேச்சை திசை திருப்பினாள் மணிமேகலை .

” அது இப்போது எதற்கு …? ” எரிச்சலாக கேட்டாள் .

” நீ நேற்று உன் குடும்பத்தை பற்றி   சொன்னதெல்லாம் உண்மையா …பொய்யா என நான் தெரிந்து கொள்ள வேண்டாமா …? ” நிதானமாக சொன்னவள் மேல் ஆத்திரம் வந்த்து மணிமேகலைக்கு .

” நான் பொய்யா சொன்னேன் …? “

” அதை விசாரித்தால்தானே தெரியும் …”

” நம்பர் தருகிறேன் .தாராளமாக விசாரித்து கொள்ளுங்கள் …” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தள்ளி போய் அமர்ந்து கொண்டவளை புன்னகையோடு பார்த்தாள் .

” முதலில் இங்கே பார்த்தனோடு உனது வாழ்வை நிச்சயப்படுத்திக் கொள் மணி . பிறகு மற்றதை பார்க்கலாம் ….”

” என் வாழ்வை போல் கங்காவுடைய வாழ்வும் எனக்கு முக்கியம்தான் அத்தை ….”

மாதவி அவளை நெருங்கி அணைத்துக் கொண்டாள் .

” உன் மனம் எனக்கு தெரியும்மா .ஆனாலும் நீ இந்த வீட்டில் ஸ்திரமான பின்புதான் கங்காவின் வாழ்விற்கான முடிவுகளை எடுக்கும் உரிமை உன் கைக்கு வரும் .புரிகிறதா ….? “

மணிமேகலைக்கு புரிந்தது .ஆனால் இந்த பார்த்தாவை எப்படி சமாளிப்பது என்று அடுத்த கவலை வந்து சேர!ந்த்து அவளுக்கு .

” நீங்கள் இரண்டு பேரும் முதலில் சந்தித்த இடத்திற்கு திரும்ப போய்விட்டு வாருங்களேன் …” ஐடியா சொல்லிக் கொடுத்தாள் .

” எங்கே …அந்த வயலுக்கா ….? ” கேட்டுவிட்டு மாதவியிடம் கொட்டு வாங்கினாள் .

” ஓ.கே ….ஓ.கே …அந்த தோப்பு வீடு ….”

————

” இப்போது அங்கே போயே ஆகவேண்டுமென என்ன அடம் …? ” சலித்தபடி முன்னே நடந்த பார்த்தசாரதியின் பரந்த முதுகை விழிகளில் விழுங்கியபடி பின்னால் நடந்தாள் மணிமேகலை.

”  மலரும் நினைவுகள் பார்த்தா ….” கொஞ்சலாய் சொன்னவள் ….” ஹேய் இதுதானே …? ” ஓரிடத்தில் நின்று கத்தினாள் ்

திரும்பி பார்த்தவன் பதறி வந்தான் .

” ஏய் அதை தொடாதே …”

” ஏனோ இந்த செடியைத்தானே அன்று எனக்கு கொடுத்தீர்கள் …இது என்ன செடி பார்த்தா …? “

” இது ஒரு வகை போதை தரும் செடி .வீரியமானது .லேசாக முகர்ந்தாலே நிறைய போதை வரும் .அதை தொடாதே ….”

” போதை மருந்தையா கொடுத்தீர்கள் …? ” முறைத்தாள் .

” ம் …அப்போது வேறு வழி தெரியவில்லை .திடுமென மயக்க மருந்துக்கு எங்கே போக …? “

” சை எவ்வளவு பெரிய ப்ராடு நீங்க ….? ” போலியாய் சலித்தபடி தோப்பு வீட்டினுள் போகவும் ஏதோ ஓர் உணர்வில் மணிமேகலையின் உடல் சிலிர்த்தது .

அவள் அடைபட்டிருந்த அறையை கண்களை சுழ்ற்றி பார்த்தபடி திரும்பி பார்த்தசாரதியை பார்த்தவள் இன்பமாய் திகைத்தாள் .

சற்று முன் அவள் உடலை ஊடுறுவியதே ஒரு இன்ப சிலிர்ப்பு , அதனை அப்படியே தன் முகத்தில் சுமந்தபடி அவளை ஒரு விதமாக பார்த்தபடி நின்றிருந்தான் அவன் .

Facebook Page Widget

error: Content is protected !!Our Official Facebook Page Click like For Regular Updates