mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 25

                                            25

மணிமேகலை அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் .ப்ரெண்ட்ஸ் வருவதற்குள் கிளம்பி விட ஙேண்டும் .எங்கே போகிறாய் …என்னவென்று குடைவார்கள் .கடைசி டச்சாக கன்னத்தில் கொஞ்சம் பவுடரை ஒத்தி எடுத்தாள் .கூந்தலை ப்ரஷ் செய்து ப்ரீயாக விட்டாள் .

கிளிப்பச்சை லெக்கின்சும் , டார்க் ப்ளு டாப்சுமாக தனது உடையில் திருப்தியுற்று , கழுத்தில் கண்ணுக்கு தெரியாத ஒரு மெல்லிய சங்கிலியை மாட்டினாள் .காதுகளில் தோளை தொடும் நீள வளையம் வளையமாக தொங்கியபடி இருந்த ஒரு கம்மல் .கைகள் வெறுமையாக இருக்க விரல்களில் வரிசையாக மோதிரங்கள் .

இளஞ்சிவப்பு சாயத்தை இதழ்களில் ஏற்றிக்கொண்டவள் , அந்த புசு புசு முயல் மூஞ்சி பேக்கை கழுத்து வழியாக தோள்களில் போட்டுக்கொண டு ஸ்கூட்டி சாவியுடன் கிளம்பினாள் .

பார்த்தசாரதியை சந்திக்க கிளம்பிக் கொண்டிருக்கிறாள் .முதல்நாள் அவன் உன் பெயரென்ன எனக் கேடகஙும் ஆச்சரியமானள் .

” என் பெயர் தெரியாதா உங்களுக்கு …? நான் சொல்லவில்லையா ….? “

” பெயர் சொல்லி அறிமுகமாகும் சூழ்நிலையல் நாம் அப்போது இல்லையே .என் பெயர் பார்த்தசாரதி …”

” தெரியுமே .சொன்னீர்களே …நான் மணிமேகலை ….”

” ஓ .என்னைப் பற்றி ஓரளவு உனக்கு தெரியும் .உன்னை அறிமுகபடுத்திக் கொள்ளேன் …”

” நான் இங்கே காலேஜில் சைக்காலஜி படித்து கொண்டிருக்கிறேன் என ஆரம்பித்து தன் குடும்ப விபரங்களை சொன்னாள் .அந்த அளவு  கவுசிக்கின் மனதை பாதித்த பெண்ணை நேரில் பார்க்க நினைத்தேன் .அண்ணனிடம் உங்கள் ஊர் அட்ரசை வாங்கிக்கொண்டு வந்தேன் .அவனது காதலை உங்கள் தங்கையிடம் சொல்வதுதான் எனது முக்கிய எண்ணமாக இருந்தது ….”

” முட்டாள் போல் அதனை நான்தான் தடுத்துவிட்டேன் .அந்த முட்டாள்தனத்திற்காக அன்று உன்னை வேறு வருத்தி ….” இப்போது வருந்தியவன் அவன்தான் .

” ம்ஹூம் அன்று நான்  செய்ய நினைத்தது தப்புதானே .அதனால் வருத்தமெதுவும் இல்லை சாரதி ….” இயலபாக சொல்லிவிட்டு அவனது வியந்த பார்வையில் நாக்கு நுனி கடித்தாள் .

” சாரி …அப்படி கூப்பிடலாம் தானே ….”

அவன் பதில் சொல்லும் முன் அவனது போன் ஒலித்தது .எடுத்து பேசியவன் ” இரண்டு மாதங்களுக்கு ஒரு முறைஇங்கே சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பிய  அரிசி மூட்டைகள் , தானியங்கள்  வசூலுக்காக சென்னை வருவேன் .இப்போதும் அதற்காகத்தான் வந்தேன். ஒரு முக்கியமான வசூல் .அதனால. ….” என்றபடி எழுந்தான் .

” நாளை சந்திக்கலாமா …? ” வேகமாக கேட்டாள் .

” அது அவசியமா …? ஏனோ என் தங்கையின் நிலையை உன்னிடம் சொல்ல வேண்டுமென எனக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்த்து.அன்று உன்னை என் தங்கையிடம் பேச விட்டிருக்க வேண்டிருக்க வேண்டும் , விட்டிருந்தால் ஒரு வேளை அவள் வாழ்வு ….” உதடு கடித்து வார்த்தைகளை விழுங்கினான் ….




.”ஆறு மாதங்களாக இங்கே வரும்போதெல்லாம் தேடிக் கொண்டே இருந்தேன் .இப்போதுதான் கண்ணில் பட்டாய் .இனி ….”

” இனித்தான் நாம் நிறைய பேச வேண்டியதிருக்கிறது .நிச்சயம்  நாம் நாளை சந்திக்கத்தான் வேண்டும் ….”

” சரி .நாளை கபாலீசுவர்ர் கோவிலில் சந்திக்கலாம் …” போய்விட்டான் .

ஒரு அழகான இளம்பெண் தனியாக சந்திக்க வேண்டிமென்றால் அதற்கு இவன் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை பார் .சரியான சாமியார் ….கோவிலில் தனது வண்டியை நிறுத்தியவள் , போனை வெளியே எடுத்தாள் .

” இப்போது உங்கள் நம்பர் கொடுத்தே ஆக வேண்டும் ….” கொடுக்க போகிறாயா …இல்லையா …என்பது போல் நின்றிருந்தவளை பார்த்து புன்னகைத்தவன் தனது எண்ணை கொடுத்து , அவளது எண்ணை வாங்கிக் கொண்டிருந்தான்.

மணிமேகலை போனில் நம்பர்களை அமுக்கும் முன் ” நான் இங்கேதான் இருக்கிறேன் ….” என அவன் குரல் பின்னால் கேட்டது .

” எப்போது வந்தீர்கள் …? ” முகம் மலர கேட.டவளுக்கு பதிலாக புன்னகையை தந்தவன் ” சாமி கும்பிடலாம் …” கோவிலினுள் நடந்தான் .

இருவரும் தெய்வத்தை வணங்கிவிட்டு தெப்பக்குள படிக்கட்டுகளில் அமர்ந்தனர் .

” நான் நேற்று கவுசிக்கிடம் பேசினேன் .அவன் இன்னமும் உங்கள் தங்கையை விரும்புகிறான் .திருமணம் முடிக்க தயாராக இருக்கிறான் ….”

மணிமேகலை நேரடியாக விசயத்திற்கு வந்தாள் .

பார்த்தசாரதி தெப்பக்குள நீரை வெறித்தபடி அமர்ந்திருந்தான் .

” வேண்டாம் மணிமேகலை .அது சரி வராது …”

” ஏன் ….ஏன் சரிவராது …?”

” இது வரை உன் அண்ணனுக்கு என் தங்கை மீதிருந்த காதல் வேறு .இப்போது வந்திருக்கும் காதல் வேறு …இந்த காதல் அவளது வாழ்வை செப்பனிடாது ….”

” அதெப்படி நீங்கள் சொல்லலாம் …? அதனை சொல்ல வேண்டியது என் அண்ணனும் , உங்கள் தங்கையும்தானே தவிர , நீங்களோ …நானோ அல்ல “

” சரிதான் .ஆனால் இந்த சுய அலசலில் என் தங்கையின் மனபாரம் அதிகரிக்குமானால் அதனை நான் அனுமதிக்க மாட்டேன் ….”

” அப்போது உங்கள் தங்கைக்கு இன்னொரு வாழ்க்கை அமைத்து தரும் எண்ணம் உங்களுக்கு இல்லை.அப்படித்தானே ….? ” இதைக் கேட்ட மணிமேகலையின் குரலில் நீயெல்லாம் ஒரு மனுசனா ….என்ற காழ்ப்பு தொக்கி இருந்தது .

அதனை புரிந்து கொண்ட பார்த்தசாரதி புன்னகைத்தான் .

” என் தங்கைக்கு ஒரு நல்வாழ்வு என்றால் அதனை முதலில் வரவேற்பவன் ,முன் நின று நடத்துபவன் நானாகத்தான் இருப்பேன் .ஆனால் அதற்கு அவள் ஒத்துழைக்க வேண்டும் ..”

” உங்கள் தங்கை படித்தவர்கள்தானே ….எதார்த்த உலகம் தெரியாதா அவர்களுக்கு ….? ஒரு பெண்ணின் வாழ்வில் கணவனின் அவசியத்தை அறியாதவர்களா அவர்கள் .நம்ப முடியவில்லை ….”  பார்த்தசாரதியின் மேல் மணிமேகரையின் குற்றச்சாட்டு பார்வை இன்னமும் மாறவில்லை .

” என்னை குறை சொல்லி பயனில்லைம்மா .எங்கள் ஊர் சூழ்நிலை , எங்கள் வீட்டு பழக்க வழக்கங்கள. வேறு .அதனை சொன்னால் உனக்கு தெரியாது .அந்த வாழ்வு வாழும் எனக்குத்தான் அதிலிருக்கும் நடைமுறை சிக்கல்கள் புரியும் ….”

” ஓ …அப்படியா …சரி கிளம்புங்கள் .நானும் தெரிந்து கொள்கறேன் ….’

” எதை …? “

” உங்கள் ஊர் , குடும்ப நடைமுறை சிக்கல்களை …அங்கேயே இருந்து பார்த்து கேட்டு தெரிந்து கொள்கிறேன் …”

” ப்ச் விளையாடாதே மணிமேகலை …”

” இல்லை சாரதி .நிஜமாகத்தான் சொல்கிறேன் .உங்கள் வீட்டிற்கே வந்து தங்கி  உங்கள் தங்கையை , உங்கள் அம்மாவை அவர்களது குணத்தை தெரிந்து கொள்ள நினைக்கிறேன் .இதனால் உங்கள் தங்கைக்கு மட்டுமல்ல , என் அண்ணனுக்கும் ஒரு நல்ல வாழ்வு கிடைக்குமென்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது ….”

” இதெல்லாம் நீ நினைப்பது போல் சுலபமில்லை மணிமேகலை ….”

” என்னால் முடியும் சாரதி .நான் படிப்பது சைக்காலஜி .மனித மனங்களை என்னால் எளிதில் உணர முடியுமென நினைக்கிறேன் .அத்தோடு இதையே எனது படிப்பிற்கான ப்ராஜெக்டாக கூட எடுக்கலாம் என்றும் நினைக்கிறேன் ….”

” ம் …எங்கள் குடும்பத்தை ஆராய்ந்து அதில் நீ படிப்பதற்கு…உன் காரியம் சாதிப்பதற்கு  உன்னை எங்கள் வீட் டு ஆட்கள் அனுமதிக்க வேண்டுமே ….”

” அதெல்லாம் உங்கள் பொறுப்பு .நீங்கள் தான் எப்படியாவது என்னை உங்கள் வீட்டிற்குள் கூட்டி போகவேண்டும் ….”

” விருந்தாளிகளுக்கு தனி அறை கொடுத்து ,தகுந்த உபசரிப்பு செய்து அவர்களை ஓரமாக ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என் அம்மா .இதில் எப்படி எங்கள் வீட்டினருடன் நெருங்கி பழக உன்னால் முடியும் …? “

” நீங்கள் என்னை ஏன் விருந்தாளியாக கூட்டி போகிறீர்கள் …? வீட்டாளாக கூட்டி போங்கள் .எல்லாம் சரியாக வரும் ….”

” வீட்டாளாகவா …தீடீரென்று எங்கள் வீட்டு உறுப்பனர் எண்ணக்கையை அதிகரிக்க நான் என்ன செய்யட்டும் மணிமேகலை …? “




பார்த்தசாரதி மணிமேகலையின் பேச்சுக்களை இது வரை விளையாட்டாகவேதான் எடுத்துக் கொண்டிருந்தான் .அலை கரைக்கும் மணல் கோபுரத்தை மீண்டும் மீண்டும் குவிக்குமே குழந்தை …அப்படித்தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் .

அதனை உணர்ந்து கொண்ட மணிமேகலை அவன் விழிகளுக்குள் தன் பார்வையை ஊன்றினாள் .

” உங்கள் மனைவியாக உள்ளே கூட்டிப் போங்கள் .எல்லாவற்றையும் நான் சமாளிக்கிறேன் ….”

” வாயை மூடு ….” பார்த்தசாரதியின் குரலில் கோபம் கொந்தளித்தது .

” என்ன முட்டாள்தனமாக பேசுகிறாய் …? என்னை பற்றி என்ன தெரியும் உனக்கு …? “

” உங்களால் என் பெண்மைக்கு எந்த ஆபத்தும் எப்போதும் வராது என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும் …”

” ப்ச் …நான் ஏற்கெனவே திருமணம் ஆனவன் .அது தெரியுமா உனக்கு …? “

திடுமென அந்த தெப்பகுளத்தில் சுனாமி உருவாகி ஆழிப் பேரலையில் தான் மூழ்கி விட்டாற் போல் உணர்ந்தாள் மணிமேகலை .

What’s your Reaction?
+1
4
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!