mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 21

    21

பார்த்தசாரதி ஒரு பிடிப்பிற்கென அவள் கையில் கொடுத்து விட்டு போன துண்டை , மணிமேகலை அதன் பிறகு அவனிடம் கொடுக்கவில்லை .சுருக்கம் உதறி மடித்து தன் தலையணைக்கடியில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண டாள் .

இப்போது வெளியே கிளம்பி வரும் போது , அவனில்லாது போகும் தனிமையை சமாளிக்கவென அவனது துண்டை எடுத்து தன் கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டாள் .அதன்பிறகே படபடப்பு  குறைந்து தன்னை நிதானமாக உணர்ந்தாள் .

” இது …துண்டு .சும்மா வியர்த்தால் துடைக்கவென்று …” சொன்னவள் ஐய்யய்யோ இந்த காற்றில் வியர்வையா என நினைத்து நிறுத்தி….

” வ..வந்து குளிருமே ….மூடிக்கலாம்னு ….” சொன்னபடி கழுத்திலிருந்த துண்டை எடுத்து உதறி பிரித்து தன்  தோள்களை சுற்றி போர்த்திக் கொண்டாள் .

” இது பார்த்தாவுடையதுதானே …? “

” அ…அப்படியா …நா…நான் எங்கள் ரூமில் கிடந்த ஏதோ ஒரு துண்டினை எடுத்துக் கொண்டு ….” கையுயர்த்தி அவள் பேச்சை நிறுத்தினாள் மாதவி .

” நீ யார் …இங்கே எதற்காக வந்தாய் …? “

இந்த கேள்வியில் மணிமேகலை அதிர்ந்தாள்.

” நா …நான் உங்கள் மகனின் மனைவி …அவரை கல்யாணம் செய்து கொண்டேன் .இங்கே வந்தேன் …”

” அப்படியா …உங்கள் கல்யாணத்திற்கு சாட்சி யார் …? கல்யாணம் எங்கே நடந்தது …? போட்டோக்களை காட்டு…உன் அப்பா , அம்மா போன் நம்பர் கொடு .நான் அவர்களிடம் பேச வேண்டும் ….”

” இ…இதையெல்லாம் நீங்கள் உங்கள் மகனிடமே கேட்க வேண்டியதுதானே , என்னிடம் எதற்கு …? அவரிடமே பேசுங்கள் .நான் வருகிறேன் …” எழுந்து வீட்டினுள் நடந்தாள் .

” பார்த்தனை நீ காதலிக்கிறாய்தானே மணிமேகலை ….? ” பின்னால் கேட்ட மாதவியின் குரலில் ஸ்தம்பித்து நின்றாள் .

” நான் காதலித்தவள் .காதலை உணர்ந்தவள் …என்னால் ஒரு காதல் கொண்ட பெண்ணை தெரிந்து கொள்ள முடியும் ….”

” எ…என் கணவர்…நான் காதலிக்கிறேன் …இதில் பெரிதாக என்ன இருக்கிறது … ” மீண்டும் நடந்தாள் .




” பார்த்தனும் உன்னை காதலிக்கிறானா என்று உனக்கு குழப்பமாக இருக்கிறதுதானே …? “

மணிமேகலையின் நடை மீண்டும் தேங்கியது .முகம் திருப்பி மாதவியை பார்த்தாள் .

” என் மகன் அவன் …என்னால் அவனை ஓரளவு உணர முடியும் ….”

மணிமேகலையின் விழிகள் இப்போது மாதவியிடம் யாசித்தன .தளர்ந்த நடையுடன் அவள் திரும்பி வந்து மீண்டும் மாதஙியினருகில் அமர்ந்தாள் .

” அ…அவர் என்னை காதலிக்கிறாரா அத்தை …? எ …எனக்கு அவரை புரிந்து கொள்ள முடியவில்லை …”

” நீ முதலில் உன்னை பற்றி சொல்லு …”

மணிமேகலை தயங்கினாள் .

” என்னுடன் போட்டி போட்டு பார்த்தா என்று அழைக்கிறாயே …அவன் வேண்டாமா உனக்கு …? “

” நா …நான் …” மணிமேகலை கண் கலங்க சட்டென மாதவியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள் .மாதவி அவள் தலையை வருடினாள் .மணிமேகலை சொல்ல தொடங்கினாள்.

” நான் பிறந்த்தே துபாயில்தான் .என் அம்மாவும் , அப்பாவும் அங்கே வேலை பார்க்கின்றனர் .என் அப்பாவின் அண்ணன் இங்கே சென்னையில் இருக்கிறார் .அவர் ஒரு தமிழ் ஆசிரியர் .எனக்கு தமிழில் ஆர்வம் வருவதறகு அவர்தான் காரணம் .என் சிறு வயதிலிருந்தே போனிலேயே எனக்கு தமிழ் டியூசன் எடுப்பார் .அவரது தமிழ் பயிற்சிதான் எனக்கு தமிழ்நாட்டில் படிக்கும் ஆர்வத்தை கொடுத்தது .  நான் அப்பா , அம்மாவிடம் கேட்டு  காலேஜ் படிப்பை இங்கே சென்னையில் படிக்க வந்தேன் .”

“பெரியப்பா வீடிருந்தாலும் அவர்களை தொல்லை செய்ய வேண டாமெனவும் , எனது ப்ரைவசிக்காகவும்  ஹாஸ்டலிலேயே தங்கிக் கொண்டேன் . மனித மனங்களை ஆராய்வது எனக்கு மிகவும் பிடித்தமானது .அதனால் சைக்காலஜி படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன்.ஒவ்வொரு வார இறுதியிலும் தவறாமல் பெரியப் பா வீட்டிற்கு வந்துவிடுவேன் .

அப்படி ஒருநாள் வந்த போது பெரியப்பாவிற்கும் , அவர் மகன் கவுசிக்கிற்கும் ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது …

மணிமேகலை தனது வாழ்வின் முன் பகுதிகளை மாதவியுடன் பகிர்ந்து கொள்ள துவங்கினாள் .

——————-

” உன்னை பெற்று படிக்க வைத்து இவ்வளவு தூரம் வளர்த்து விட்டதுதானடா நாங்கள் செய்த தப்பு …” வரதராஜன் மகனிடம் வருந்திக் கொண்டிருக்க கவுசிக் அசையாமல் நின்றிருந்தான் .

” ஏன்டா …இப்படி செய்தாய் …? எங்களை விட்டு பிரிந்தே போக வேண்டுமென்றுதான் இந்த முடிவெடுத்தாயா …? ” லீலாவதி மகனிடம் புலம்பியபடி இருந்தாள் .

” என் தப்புதான் .உங்களிடம் சொல்லாமலேயே போயிருக்கவேண்டும் .சொன்னது தப்புதான் …” கவுசிக் அசையாமல் அவர்களை எதிர்ந்து நின்றான் .

” அண்ணா …நீ என்ன பேசிக் கொண்டிருக்கிறாய் …? அப்பாவிடம் …அம்மாவிடம் பேசுகிறாய் .நினைவு வைத்து்கொள் …” அதட்டியபடி உள்ளே வந்தாள் மணிமேகலை .

” வாம்மா …நீயாவது அவனுக்கு எடுத்து சொல் …” லீலாவதி அழுகையோடு வரவேற்றாள் .

” என்ன விசயம் பெரியம்மா …? என்ன பிரச்சினை அண்ணா …? “

” எல்லாம் அவனிடமே கேள் …” வரதராஜன் சலித்தார் .

” நான் ஜெர்மன் போகிறேன்  மணி .அங்கே நல்ல வேலை .நல்ல சம்பளம் .இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம் ….” கவுசிக் வெறுப்புடன் சொன்னான் .

” இங்கே இருந்த நல்ல வேலையை விட்டு விட்டு இப்போது ஏன திடீரென்று அங்கே போகவேண்டும் .கேட்டு சொல் மணி “

” நீங்கள் பொறுமையாக இருங்கள் பெரியம்மா .நான் பேசிகறேன் …” கவுசிக்கின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு மாடியேறினாள் மணிமேகலை .

ஒரு மணி நேரமாக விதம் விதமாக பேசி துளித் துளியாக அசைத்து கவுசிக்கிடமிருந்து மணிமேகலை பெற்ற விபரங்கள் …

அவனுக்கு காதல் தோல்வி .அதை மறக்க பெற்றோர்களை தவிர்த்துவிட்டு வெளிநாடு ஓடப்போகிறான் .கல்லூரியில் அவனுடன் படித்த ஜூனியர் பெண்ணின் மீது காதல் .காதலை அவளிடம் சொல்ல மிகுந்த தயக்கம் .




படிப்பு முடித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்த பிறகு அவளிடம் காதலை சொல்லலாமென இவன் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான் .நல்ல வேலை கிடைத்து அந்த செய்தியோடு தனது காதலையும் யசொல்ல இவன் ஓடிவந்த போது , அந்த பெண் திருமண பத்திரிக்கையை நீட்டுகிறாள் .

உள்ளுக்குள் அழுதபடி இவன் இங்கே இருக்கவே பிடிக்காமல் வெளிநாடு ஓடிவிட துடிக்கிறான் .

” வேலை கிடைத்ததுமே அம்மாவும் ,அப்பாவும் எனது திருமண பேச்சை ஆரம்பித்து விட்டார்கள் மணி .என்னால் இன்னொருத்தியுடன் திருமணம் என்பதை கறபனை கூட செய்ய முடியாது .அதனால் நான் போகிறேன் …”

” என்ன அண்ணா முட்டாளாக இருக்கிறாய் …? இத்தனை காதலை  அந்த பெண்ணிடம் தெரியப்படுத்தாமல் நாட்டை விட்டே போகிறேன் என்கிறாயே …? “

” அவளுக்கு திருமணம் நிச்சயமாகி விட்ட இந்த நேரத்தில் போய் அவளிடம் என் காதலை சொல்ல சொல்கிறாயா …? “

” ஏன் …சொன்னால்தான் என்ன …? அவளும்தான் தெரிந்து கொள்ளட்டுமே உனது காதலின் அளவை …”

” உளறாதே மணி .இப்போது வரை அவளுக்கு என் காதல் தெரியாது .இதுபோல் காதலையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவளுக்கு கிடையாது .அவள் பக்கா கிராமத்து பெண் .அப்பாவி .முதலிலேயே அவளிடம் காதலை சொல்வது , என் மீது அவளுக்கு ஒரு தவறான அபிபராயம் வந்து விடுமென்றுதான் நான் என் காதலையே இத்தனை நாள் தள்ளிப்போட்டேன் .ஆனால் அதுவே என் வாழ்விற்கு எமனாகிவிட்டது ….”

கவுசிக்கின் இந்த தீவிர காதல் மணிமேகலைக்கு ஆச்சரியத்தை கொடுத்தது .இந்த அளவு அவனது காதலை பெற்ற பெண்ணை நேரில் பார்க்கும் ஆசையை கொடுத்தது .

அவளது திருமண நாளன்று தான் இந த நாட்டிலேயே இருக்க போவதில்லை என்ற உறுதியோடு கவுசிக் ஜெர்மன் போய்விட அவன் காதலித்த பெண்ணை பார்த்தே ஆக வேண்டுமென்ற உறுதியோடு மணிமேகலை அவளது திருமணத்திற்கு கிளம்பினாள் .

What’s your Reaction?
+1
5
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!